காதல் கண்ணாமூச்சி - 51
அடுத்த நாள் விடியுது..
அபி அர்ஜூனுக்கு கால் பண்றா..
அர்ஜூன் : குட் மார்னிங் அபி குட்டி..
அபி : ம்ம்..குட் மார்னிங்..நேத்து சாரி.. தூங்கிட்டேன்.
அர்ஜூன் : ம்ம்.. பரவாயில்ல டி...
அபி : சாரி..
அர்ஜூன் : லூசு.. பரவாயில்லன்னு சொல்றேன் இல்ல..விடு..ஹே.. உனக்கு ஒரு ஹேப்பி நியூஸ்...
அபி : என்ன ?? ப்ராமோசன் ஆ..
அர்ஜூன் : இல்ல !! அதை விட பெருசு..
அபி : அப்படி என்ன ??
அர்ஜூன் : ரேகா வை வேலையில் இருந்து தூக்கிட்டாங்க..
அபி : இதுல என்ன இருக்கு..அவ உன் ஆப்பிஸ்க்கு வரலைன்னா பிரச்சினை முடிஞ்சுறுமா என்ன ??
அர்ஜூன் : லூசு..சொல்றதை முழுசா கேளு..
குறுக்க பேசாதே.
அபி : ம்ம்..சரி சொல்லு..
அர்ஜூன் : அது ஒரு பெரிய கதை டி..அவ பெரிய ப்ராக்ஜெக்ட் ஒன்னை சோதப்பி அதுனால எம் டி டென்ஷன் ஆகி பெரிய பிரச்சினை.. நான் தான் பேசி சரி பண்ண..
அபி : அவ மேல அக்கறை.. அப்படிதானே.
அர்ஜூன் : ஏய்..அப்படிலா ஒன்னும் இல்ல..ஒரு உதவி..
அபி : உதவி..இதை நான் நம்பனுமா..
அர்ஜூன் : நம்பி தான் ஆகணும்.
அபி : ம்ம்.. அப்பறம் என்ன..அவ ஓடி வந்து கட்டி பிடிச்சு முத்தம் கொடுத்து இருப்பா.. நீயும் அப்படியே நின்னு இருப்பா..
அர்ஜூன் : செம டி.. உன்னால எப்படி டி இதுலா சரியா சொல்ல முடியுது..
அபி : அப்போ உண்மையா கட்டி பிடிச்சு முத்தம் கொடுத்தாளா... உன்னை..இருக்கு உனக்கு..இதுக்கு தான் என்னை இங்க விட்டுட்டு போனீயா...
அர்ஜூன் : தாயே..சாமி ஆடாதா.. பக்கத்துல இருந்த மண்டையில கொட்டி இருப்பேன். நீ நினைக்குற மாதிரி லா எதுவும் நடக்கவில்லை..அவ தேங்க்ஸ் சொன்னா.. நான் தான் உண்மையா எனக்கு தேங்க்ஸ் சொல்ல நினைச்சா உன் புருஷன் கூட சேர்ந்து வாழுன்னு சொல்லி அனுப்பிட்டேன்.
அபி : ஆ..நிஜமாவா..
அவ போய்ட்டாளா..
அர்ஜூன் : அப்படிதான் நினைக்குறேன்.
அபி : ஓகே டா..நீ எப்போ வரா..
அர்ஜூன் : அங்கேயே இரு பட்டு மா..இந்த ரேகா ஒரு ப்ராப்ளம் பண்ணாண்ணு சொன்னேன் இல்ல..
அபி : ஆமா.. அதுக்கு என்ன ??
அர்ஜூன் : அதுக்கு நான் எம் டி கூட பாரிஸ் போறேன்.
அபி : எத்தனை நாள்..
அர்ஜூன் : சரியா தெரியல டி..
அபி : இப்படி சொன்னா எப்படி டா..
அர்ஜூன் : ஒரு 10 நாள் ஆகும் டி.
அபி : அவ்வளவு நாளா ?? எப்படி டா பிரிஞ்சு இருக்கறது..
அர்ஜூன் : கஷ்டம் தான்..ஆனா என்ன பண்றது..போய் தானே ஆகணும்.
அபி : எப்ப போகணும்.
அர்ஜூன் : நைட்.
அபி : நான் கிளம்பி வராண்டா..
அர்ஜூன் : ஏன் டி.. க்ரிஷ் யும் என் கூட தான் வரான்..நீ மட்டும் தனியா எப்படி இருப்ப..
அபி : உன்னை பாக்கணும் டா..
அர்ஜூன் : ஆன்லைன் வா...ன்னு வீடியோ கால் பண்றான்.
அபி : இப்படி பார்த்தா போதுமா..
அர்ஜூன் : போதாது தா..ஆனா வீணா உனக்கு எதுக்கு கஷ்டம்..
அபி : எப்படி இருந்தாலும் நான் வந்து தானே ஆகணும்..நாளை மறுநாள் எனக்கு காலேஜ்.
அர்ஜூன் : நான் வர வரைக்கும் நீ உங்க அம்மா வீட்டுலயே இரு...
அபி : ம்ம்..சரி..
அர்ஜூன் : அப்பறம் என்ன இன்னும் படுத்துக்கிட்டே இருக்க..
அபி : தெரியலை டா.. ரொம்ப டயர்டா இருக்கு.
அர்ஜூன் : அப்படி என்ன தான் டி பண்ணுது
அபி : தெரியலை டா..
அர்ஜூன் : சரி நான் வந்தா அப்பறம் ஹாஸ்பிடல் போய் பாக்கலாம்.
அபி : ம்ம்..சரி.. பயப்படுற மாதிரி இல்ல டா..
அர்ஜூன் : ஆமா இவங்க பெரிய டாக்டர்..எல்லாம் தெரியும் பாரு..
அபி : டாக்டர் இல்ல தான்..ஆனா இதுல தெரியும்..எனக்கு நீ ஒரு குட் நியூஸ் சொன்னா இல்ல.நீ வரும் போது உனக்கு நான் ஒரு குட் நியூஸ் சொல்றேன்...
அர்ஜூன் : அப்படியா !! என்ன அது..
அபி : இப்போ இல்ல..வந்த அப்பறம்
அர்ஜூன் : ப்ளீஸ் சொல்லு டி... அவ்வளவு நாள் வைட் பண்ண முடியாது.
அபி : இப்போ சொல்ல முடியாது.. இதுதான் உனக்கு நான் தர தண்டனை.. அப்போ தான் சீக்கிரம் வந்து கூட்டிட்டு போவ..போய் கிளம்பு..
அர்ஜூன் : ப்ளீஸ் டி..செல்ல குட்டி இல்ல..சொல்லு டி
அபி : நீ என்ன கொஞ்சுனாலும் சொல்ல மாட்டேன்..நீ போய்ட்டு வா.ன்னு கால் கட் பண்றா..
அர்ஜூன் : சரியான பிடிவாதகாரியா இருக்கா.. ன்னு சிரிச்சுட்டு எழுந்து குளிக்க போறான்.
அபி அம்மா அப்பா பக்கத்து வீட்டுக்காரங்க கூட பேசி ஜாலியா இருக்கா..
அன்னைக்கு நைட் அர்ஜூன் க்ரிஷ் அவங்க எம் டி எல்லாம் பாரிஸ் போறாங்க..
தினமும் அர்ஜூனுக்கு கால் ட்ரை பண்றா...ஆனா அர்ஜூனுக்கு கால் போகவே இல்ல...
அபி : அங்க போனா தாலா ஒருவேளை இந்த நம்பர் வோர்க் ஆகாலையா.. இருக்கலாம்..சரி வைட் பண்ணாலாம்...ன்னு அமைதியா இருக்கா..
நாட்களும் போய்டடே இருக்கு..
அபி : மா...
கௌசல்யா : என்ன மா..
அபி : வாந்தி வர மாதிரி லா இருக்கு மா..தலை சுத்துது..
கௌசல்யா : எத்தனை நாள் டி தள்ளி போய் இருக்கு.
அபி : மொத்தமா 2 மாசம் ஆச்சு..
கௌசல்யா : சரி இரு வரேன்னு ஓடுறா...
அபியும் எங்க போறாங்கன்னு வாசல்லயே பாத்துட்டு நிக்குறா..
தொடரும்...
# Bhuvi
4 Comments
Nice story keep rocking Bhuvi
ReplyDeleteThanks pa
Deletesemaa sissy😍😍❤️oru vela abi prégnant irupala waiting sis
ReplyDeleteசூப்பர் அபி கன்சீவ் இருக்கா அர்ஜுன் சீக்கிரம் பாரிஸிலிருந்து வரணும்
ReplyDelete