வாழ்வின் வரமாய் வந்தவளே(னே) - 13

உதய், அஞ்சலி : இரண்டு பேரும் வீட்டுக்கு வந்துட்டாங்க...

அஞ்சலி : நீ போய் அண்ணாவ வர சொல்லு...

உதய் : காலைல ஓட்டிக்கலாம் வா...

அஞ்சலி : முடியாது இப்பவே வர சொல்லு...

தமிழ் அப்போ சரியா வெளில வந்தான்...

உதய் : இதோ வந்துட்டான் உன் அண்ணன்...

தமிழ்மாறன் : என்ன டா...

அஞ்சலி : அண்ணா வா ஒரு டவுண்டு போய்ட்டு வந்துடுலாம்...

தமிழ்மாறன் : சரி வா...

அவங்க போகவும் தமிழ் அப்பா தேவேந்திரன் கார் உள்ள வரவும் சரியா இருந்தது...

உதய் : மாமா ( போய் கார் கதவ திறந்தான்)

தேவேந்திரன் : உதய் எப்போ டா வந்த...

உதய் : காலைல வந்தேன் மாமா...

தேவேந்திரன் : நல்லா இருக்கியா பா...

உதய் : நல்லா இருக்கேன் மாமா நீங்க...

தேவேந்திரன் : நல்லா இருக்கேன் டா... வா உள்ள ( அவன் தோள்ல கை போட்டு அழைச்சிட்டு போனாங்க )

அப்பறம் தமிழ், அஞ்சலி வந்ததும் சாப்பிட்டுட்டு உதய் அவன் வீட்டுக்கு போய்ட்டான்...

அடுத்தநாள் காலை,

எல்லாரும் காலைல சாப்பிட வந்து உட்கார்ந்தாங்க... எல்லாருக்கும் சூடா மகாலெட்சுமி தோசை பரிமாறுனாங்க...

தோசைக்கு இரண்டு வகையான சட்னியும் கோழி கறிகுழம்பும் கொண்டு வந்து வச்சாங்க...

தமிழ், அஞ்சலிக்கு மட்டும் கறிகுழம்பு மத்த எல்லாருக்கும் சட்னி வச்சாங்க...

தமிழும் அஞ்சலியும் ரசிச்சி ருசிச்சி சாப்பிட்டுட்டு இருந்தாங்க...

அர்ஜுனும் மிருவும் அவங்களையே பேனு பார்த்துட்டு இருந்தாங்க...

மகாலெட்சுமி : என்ன மா அவங்களை இப்படி பார்க்குறிங்க...

அர்ஜுன் : எதோ புதுசா சாப்பிடுறா மாதிரி ரசிச்சி சாப்பிடுறாங்களே அதான் மா...

மிருனாழினி : அதுவும் தோசைக்கு கறிகுழம்பு காம்பினேசன் இதுவரை நாங்க சாப்பிட்டதும் இல்ல...

மகாலெட்சுமி : அதுவா ஒருநாள் இவங்க இரண்டு பேரும் உதய் வீட்டுக்கு போனப்போ அவன் தோசைக்கு கறிகுழம்பு வச்சி சாப்பிட்டுட்டு இருந்திருக்கான் இவங்களை சாப்பிட சொன்னதுக்கு வேண்டானு சொல்லிட்டாங்களாம் அதனால அவன் இரண்டு பேருக்கும் ஒருவாய் ஊட்டி விட்டுருந்துருக்கான்...

இவங்களுக்கும் அதோட ருசி நாக்குல ஒட்டிக்கவும் உதய்ய சாப்பிட விடாம இவங்களே சீதா சுட்டு கொண்டு வர மொத்த தோசையயும் குழம்பு ஊத்தி சாப்பிட்டுட்டாங்களாம்...

உதய் அன்னைக்கு சோறு இருந்தா போடுங்க அத்தை பசிக்குதுனு இங்க வந்து மொத்த கதையயும் சொன்னான்... அதுல இருந்து இவங்களுக்கு மட்டும் தோசை சுட்டா கறிகுழம்பும் வேணும்...

அர்ஜுன் : ஒரு தோசைக்கு இவ்ளோ பெரிய கதையா...

மகாலெட்சுமி : இன்னும் கொஞ்ச நேரத்துல உதய் வருவான் பாரு...

இவங்க சொல்லி முடிக்கல சரியா உதய்யும் வந்துட்டான்...

உதய் : அத்தை, அத்தை...

மகாலெட்சுமி : வா டா..

உதய் : அத்தை சீக்கிரம் போய் சூடா தோசை கொண்டு வா பசிக்குது... கறிகுழம்பு வாசம் வேற சுண்டி இழுக்குது...

தாத்தா : எங்க டா உன் வீட்டுக்கே வாசம் வந்துடுச்சா...

உதய் : இந்த குட்டிசாத்தான் இருக்காளே ( அஞ்சலிய கை காமிச்சான்)

அஞ்சலி : அவனை பார்த்து முறைச்சா 😠😠😠

உதய் : ( அதையெல்லாம் அவன் கண்டுக்கவே இல்ல) இவ தான் காலைலயே ஃபோன் பண்ணி எங்க வீட்டுல தோசைக்கு கறிகுழம்பு பண்ண போறாங்க நீ வந்துடாதனு என்னை வெறுப்பேத்திட்டு வச்சிட்டா...

அதான் நான் வீட்டுல அம்மா என்னா சமைச்சாங்கனு கூட பார்க்காம இங்க ஓடி வந்துட்டேன்...

தேவேந்திரன் : பாவம் டா என் தங்கச்சி...

உதய் : அப்போ நீங்க அங்க போய் சாப்பிடுங்கனு ( அவர் தட்டுல வச்ச தோசைய அவன் எடுத்துகிட்டு குழம்பு ஊத்தி சாப்பிட ஆரம்பிச்சான்)

தேவேந்திரன் : அடப்பாவி அது எனக்கு வச்சது டா...

உதய் : எதையும் கண்டுக்காம அவன் பாட்டுக்கு சாப்பிட்டான்...

அப்பறம் எல்லாரும் சாப்பிட்டு முடிச்சி ஹால்க்கு வந்தாங்க...

தேவேந்திரன் : தமிழ்...

தமிழ்மாறன் : என்ன அப்பா...

தேவேந்திரன் : அஞ்சலி அப்பறம் அவ நண்பர்களை டவுன்க்கு அழைச்சிட்டு போய் எதாவது வாங்கி குடு பா...

மிருனாழினி : அதெல்லாம் வேண்டா பா...

அஞ்சலி : ஹேய் ஏன்டி வேண்டானு சொல்லுற ஜாலியா இருக்கும்...

தமிழ்மாறன் : சரி பா, போய் எல்லாரும் சீக்கிரம் கிளம்பிவாங்க...

மிருனாழினி : அர்ஜூ கார்டு கொண்டு வந்துருக்கியா...

அர்ஜுன் : ஓஓஓ இருக்கே ஏன் கேட்குற...

மிருனாழினி : நாம வரும் போது எதுவும் இவங்களுக்காக வாங்கிட்டு வரல அதான் எல்லாருக்கும் ட்ரெஸ் எடுத்து குடுக்கலாம்னு கேட்டேன்...

அர்ஜுன் : ம்ம்ம் கண்டிப்பா வாங்கிடலாம்...

மிருனாழினி : நான் வரும்போது கார்டு எடுத்துட்டு வரல கேஷ் தான்  கொஞ்சமா இருக்கு அதான் அர்ஜூ உன்கிட்ட கேட்டேன்...

அர்ஜுன் : ஏய் லூசு இதுல என்ன இருக்கு அண்ணன் கிட்டயே கணக்கு பார்க்குறியா...

மிருனாழினி : இல்ல அர்ஜூ சும்மா தான் சொன்னேன் கோச்சிக்காத...

அர்ஜுன் : சரி சீக்கிரம் போ...

நாலு பேரும் கிளம்பி வந்ததும் உதய்யும் அவங்க கூட சேர்ந்துகிட்டான் எல்லாரும் சேர்ந்து போனாங்க...

தமிழ், உதய் முன்னாடியும் மத்த மூனு பேரும் பின்னாடியும் உட்கார்ந்துட்டு வந்தாங்க...

வண்டி ஒரு பாரம்பரிய துணி கடை முன்னாடி போய் நின்னது... அங்கயே நெசவு பண்ணி விற்பனையும் பண்றாங்க...

தேவேந்திரன் தமிழ்மாறன் கிட்ட பணம் குடுத்து அர்ஜுன், மிருனாழினி க்கு அவங்களுக்கு புடிச்ச ட்ரெஸ் எடுத்து தர சொல்லிருந்தாரு அதனால தான் முதல்ல இங்க வந்தான்...

அர்ஜுன் : தமிழ் இங்க ஏடிஎம் எங்க இருக்கு...

தமிழ்மாறன் : ஏன்டா பணம் வேணுமா என்கிட்ட இருக்கு எவ்ளோ வேணும்னு சொல்லு...

அர்ஜுன் : வேண்டா தமிழ் கைல பணம் இருக்கிறது நல்லது தான அவசரத்துக்கு தேவைபடும் அதான் எங்க இருக்குனு சொல்லு...

தமிழ்மாறன் : உதய் அவனை அழைச்சிட்டு போடா...

அஞ்சலி : உதய் வேண்டா நான் போறேன் அர்ஜுன் வாங்க ( முன்னாடி போய்ட்டா)

அர்ஜுனும் அவன் பின்னாடி போய்ட்டான்...

தமிழ்மாறன் : வாங்க நாம உள்ள  போய் ட்ரெஸ் பார்த்துட்டு இருக்கலாம்...

மிருனாழினி, உதய் : அவன் கூட போய்ட்டாங்க...

அஞ்சலி : ஏடிஎம்க்கு வெளில வெய்ட் பண்ணா...

அர்ஜுன் : பணம் எடுத்துட்டு வெளில வந்தான்...

அஞ்சலி : அர்ஜுன் எனக்கு ஐஸ்க்ரீம் வேணும் வாங்கி தாங்களேன்...

அர்ஜுன் : அங்க வா எல்லாரும் சேர்ந்தே சாப்பிடலாம்...

அஞ்சலி : இல்ல இல்ல இப்ப வேணும் ப்ளீஸ்.. என்கிட்ட பணம் இல்ல அதான் உங்கள்ட கேட்குறேன் வீட்டுக்கு வந்ததும் குடுத்துடுறேன்...

அர்ஜுன் : ஹேய் அதெல்லாம் வேண்டா வா ஐஸ்க்ரீம் தான நான் வாங்கி தரேன்...

அஞ்சலி : ஐஐஐ ஜாலி வாங்க கடை பக்கத்துல தான் இருக்கு வாங்க ( அவன் கை புடிச்சி இழுத்துட்டு போனா)

அர்ஜுன் : 😍😍😍 ஏற்கனவே அவளை ரசிச்சி பார்த்தவனுக்கு இப்போ அவளோட கெஞ்சலும் குழந்தை தனமும் உரிமையா கைய புடிக்குறதும் கூட புடிச்சிருந்தது...

கடை வந்ததும் அவ கேட்ட ஐஸ்க்ரீம் வாங்கி குடுத்தான்... அவ சாப்பிட்டு முடிச்சதும் இரண்டு பேரும் வெளில வந்தாங்க...

அஞ்சலி : அர்ஜுன் நான் ஐஸ்க்ரீம் சாப்பிட்டதை அண்ணா கிட்ட சொல்லிடாதீங்க...

அர்ஜுன் : ஏன் மா...

அஞ்சலி : எனக்கு ஐஸ்க்ரீம் சாப்பிட்டா ஃபீவர் வரும் அதனால அண்ணா, உதய் கிட்ட கேட்டா வாங்கி தர மாட்டாங்க அதான் உங்கள்ட கேட்டேன்...

அர்ஜுன் : அச்சோ என்ன மா இப்படி சொல்லுற இது தெரியாம நான் வேற வாங்கி குடுத்துட்டேனே... வா தமிழ்ட சொல்லுறேன்...

அஞ்சலி : 😱 அண்ணா கிட்டயா வேண்டா வேண்டா...

அர்ஜுன் : முடியாது நான் சொல்லுவேன் வா ( அவ கைய புடிச்சி இழுத்தான்)

அஞ்சலி : வேண்டா சொல்லாதீங்க ( அவன் கைய எடுக்க பார்த்தான்)

அர்ஜுன் : ( விடாம புடிச்சி இழுத்தான்) இல்ல நீ வந்து தான் ஆகனும் வா...

அஞ்சலி : அர்ஜுன் ப்ளீஸ் சொல்லாதீங்க...

இதை தூரத்துல இருந்து பார்த்த கதிரேசன் அர்ஜுன் அஞ்சலி கிட்ட வம்பு பண்றானு அவனை அடிக்க கோவமா அவங்க கிட்ட வந்தான், அவனுக்கு அர்ஜுன், மிருவ பத்தி எதுவும் தெரியாது...

தொடரும்...

# Sandhiya.