வாழ்வின் வரமாய் வந்தவளே(னே) - 29
அடுத்தநாள் காலை,
தமிழ்மாறன் : காலைல 5 மணிக்கு எப்போதும் அவங்க ஊர்ல எழுந்திரிக்குற பழக்கத்துல இன்னைக்கும் எழுந்துட்டான்...
எழுந்து ப்ரஷ் பண்ணிட்டு வெளில வந்தான்...
அ. அம்மா : ( பால் பாக்கேட்டோட அப்போ தான் உள்ள வந்தாங்க ) என்ன பா அதுக்குள்ள எழுந்துட்டியா...
தமிழ்மாறன் : ஆமா மா...
அ. அம்மா : அர்ஜுன் உங்க அம்மா, அப்பாவ அத்தை, மாமானு தான் கூப்பிடுவானாமே சொல்லிருக்கான்...
தமிழ்மாறன் : ஆமா மா அப்படி தான் கூப்பிடுவான்...
அ. அம்மா : அப்பறம் நீ மட்டும் என்ன அம்மானு சொல்லிட்டு இருக்க அத்தைனு கூப்பிடு...
தமிழ்மாறன் : 😂 சரிங்க அத்தை...
அ. அம்மா : சரி பா நீ இங்கயே இரு நான் காபி போட்டு கொண்டு வரேன்...
தமிழ்மாறன் : ம்ம்ம்...
அ. அம்மா : அவங்க கிட்சன் போய் காபி போட்டுட்டு இருந்தாங்க...
தமிழ்மாறன் : கொஞ்ச நேரம் ஹால்ல உட்கார்ந்து இருந்துட்டு கிட்சன் போனான்...
அ. அம்மா : என்னபா இங்கயே வந்துட்ட...
தமிழ்மாறன் : சும்மா தான் அத்தை உங்க கூட பேசிட்டு இருக்கலாம்னு...
அ. அம்மா : இந்தா காபி...
தமிழ்மாறன் : ம்ம்ம்...
அ. அம்மா : இட்லி சாம்பார் வைக்க காய் எடுத்து வச்சாங்க...
தமிழ்மாறன் : நீங்களே சமைப்பீங்களா...
அ. அம்மா : ஆமா ஏன் அப்படி கேட்குற...
தமிழ்மாறன் : வீட்டுல எல்லா வேலைக்கும் ஆள் இருக்கு அதான் கேட்டேன்...
அ. அப்பா : நான் சமைச்சா தான் அர்ஜுன்க்கும் அவருக்கும் புடிக்கும் அதனால நான் தான் எப்போதும் சமைப்பேன் வீட்டுக்கு கெஸ்ட் வந்தா மட்டும் சமைக்க சிரமமா இருக்கும்னு கூட ஒரு ஆள் வச்சிப்பேன்...
தமிழ்மாறன் : நல்லது அத்தை... நான் உங்களுக்கு உதவி பண்ணுறேன்...
அ. அம்மா : வேண்டா பா நானே பார்த்துக்குறேன்...
தமிழ்மாறன் : எனக்கு கடுப்பா இருக்கு அத்தை ஊருல இருந்துருந்தா இந்நேரம் வயல்க்கு போய்ருப்பேன்...
அ. அம்மா : சரி இந்தா காய் கட் பண்ணி குடு...
தமிழ்மாறன் : ம்ம்ம் ( சாம்பார்க்கு சின்ன சின்னதா கட் பண்ணான்)
அ. அம்மா : பரவாயில்ல நல்லா தான் கட் பண்ணுற...
தமிழ்மாறன் : நான் சில நேரம் அம்மாக்கு உதவி பண்ணுவேன் அத்தை...
அ. அம்மா : ம்ம்ம் புள்ளனா இப்படி தான் இருக்கனும்...
அப்பறம் ஒவ்வொருத்தரா எழுந்து வரவும் எல்லாருக்கும் அர்ஜுன் அம்மா காபி குடுத்தாங்க...
அப்பறம் நாலு பேரும் கிளம்பி வந்தாங்க...
தமிழ்மாறன் : வொய்ட் ஷர்ட் ப்ளூ ஜீன்ஸ் போட்டுட்டு செம்ம ஹேண்ட்சமா இருந்தான்...
அர்ஜுன் : வாவ் தமிழ் வேஷ்டி சட்டைலயும் அழகா இருக்கீங்க பேண்ட் ஷர்ட்லயும் ஹேண்ட்சமா இருக்கீங்க...
அஞ்சலி : அண்ணா எப்போதும் அப்படி தான் இருக்குற இடத்துக்கு தகுந்தா மாதிரி நடந்துப்பாங்க...
மிருனாழினி : 😍😍😍 அவனையே வச்ச கண் எடுக்காம பார்த்துட்டு இருந்தா...
அப்பறம் சாப்பிட்டுட்டு காலேஜ்க்கு போனாங்க...
மிருனாழினி : முதல்ல கேன்டீன் போலாம் அங்க தான் மத்த ஃப்ரண்ட்ஸ் இருப்பாங்க...
அர்ஜுன் : 😍 மிரு நான் அழகா இருக்கனா...
மிருனாழினி : ஏன் கேட்குற...
அர்ஜுன் : உன் ஃப்ரண்ட்ஸ் எப்போதும் என்னை சைட் அடிப்பாங்கள அதான் கேட்டேன்...
மிருனாழினி : ரொம்ப பண்ணாத அர்ஜூ...
அர்ஜுன் : உனக்கு நான் அழகா இருக்கனு பொறாமை...
மிருனாழினி : போ டா...
நாலு பேரும் கேண்டீன் போனாங்க...
அங்க அஞ்சலி, மிருவோட ஃப்ரண்ட்ஸ் ஒரு டேபிள்ல உட்கார்ந்து இருந்தாங்க... அவங்க பேர் அனு, கீர்த்தி, லெக்ஷ்மி...
அர்ஜுன் : 😍 ஹாய் கேர்ள்ஸ்...
கீர்த்தி : ஹேய் அர் ( அதுக்குள்ள அவனுக்கு பின்னாடி வர தமிழ்ல பார்த்துட்டு அப்படியே அர்ஜுனை தாண்டி போனா) வாவ் 😍😍😍 யார் இந்த ஹேண்ட்சம்...
அஞ்சலி : என்னோட அண்ணன் தான் கீர்த்தி அடிக்கடி சொல்லிருக்கேன்ல தமிழ் அண்ணன்...
கீர்த்தி : இவ்ளோ சூப்பரான அண்ணனை வச்சிகிட்டு மூனு வருஷம் கண்ணுல காட்டாம விட்டுட்டியே டி பாவி...
லெக்ஷ்மி : எங்க அழைச்சிட்டு வந்துட்டா நம்மள யாராவது அவளுக்கு அண்ணி ஆகிடுவோம்னு பயந்துருப்பா டி...
அனு : ஆமா அஞ்சு ரொம்ப தப்பு பண்ணிட்ட டி... ஹலோ சார் ஐ யம் அனு ( கை நீட்டுனா)
தமிழ்மாறன் : வணக்கம் மா ( கை எடுத்து கும்பிட்டான்)
அர்ஜுன் : 😝😝😝 பல்பு வாங்குனியா...
அனு : 😏 ப்பே...
அர்ஜுன் : ஹேய் கீர்த்தி உனக்கு புடிச்ச ப்ளாக் ஷர்ட் போட்டுட்டு வந்துருக்கேன் கொஞ்சம் கூட கண்டுக்க மாட்றியே மா..
கீர்த்தி : உங்களை எப்போ வேணாலும் பார்த்துக்கலாம் அர்ஜுன் ஆனா இவரை முடியாதே 😍😍😍 ( தமிழையே பார்த்தா)
அர்ஜுன் : அர்ஜூ உனக்கு தேவையா இந்த அசிங்கம் ( அவனே அவனை திட்டிட்டு போய் டேபிள்ல உட்கார்ந்தான்)
அஞ்சலி, மிரு ஃப்ரண்ட்ஸ் மூனு பேரும் தமிழ்மாறனை சுத்தி நின்னு எதேதோ பேசிட்டு இருந்தாங்க...
தமிழ்மாறன் : அவனும் சிரிச்ச முகமா அவங்களுக்கு பதில் சொல்லிட்டு இருந்தான்...
மிருனாழினி : 😠😠😠 கண்ணாலயே அவங்களை எரிச்சிடுவா போல அந்த அளவுக்கு அவங்களை பார்த்து முறைச்சா...
அவளுங்க தான் பேசுறாங்கனா இவனும் பல்ல பல்ல காட்றான் பாரு ( தமிழ திட்டுனா)
அர்ஜுன் : ( இதுக்கு மேல இதுங்களை விட்ட ஓவரா போகுங்க) டைம் ஆச்சி சீக்கிரம் போய் சர்டிஃபிகெட்ட வாங்கிட்டு வாங்க...
அஞ்சலி : அச்சோ ஆமா டி சீக்கிரம் வாங்க...
ஐந்து பேரும் போனதும் தமிழ், அர்ஜுன் கேண்டீன்லயே உட்கார்ந்து பேசிட்டு இருந்தாங்க...
அரை மணி நேரத்திற்க்கு பிறகு மிருவ தவிர மத்த நாலு பேரும் வந்தாங்க...
அர்ஜுன் : மிரு எங்க...
அஞ்சலி : ஸ்டாஃப் ரூம் போய்ருக்கா, வந்துடுவா...
மிரு ஸ்டாஃப் ரூம் போய்ட்டு வரும் போது ஒரு பையன் வழி மறிச்சான்...
மிருனாழினி : என்ன ஷ்யாம் எதுக்கு இப்போ வழி மறிக்குற...
( ஷ்யாம் அவ கூட படிச்ச பையன்)
ஷ்யாம் : நான் உன்னை லவ் பண்ணுறனு சொல்லி ரொம்ப நாள் ஆகுது அதுக்கு பதில் சொல்லு...
மிருனாழினி : நான் தான் இன்ட்ரெஸ்ட் இல்லனு சொல்லிட்டேன்ல...
ஷ்யாம் : பச் மிரு இந்த காலேஜ்ஜே என்னோடது என் பின்னாடி எத்தனை பொண்ணுங்க சுத்துறாங்க தெரியுமா ஆனா நான் நீ தான் வேணும்னு உன் பின்னாடி வரேன் எனக்கு ஓகே சொல்ல மாட்டியா...
மிருனாழினி : இது உன் காலேஜ் இல்ல உன் அப்பாவோடது...
ஷ்யாம் : சோ வாட் ஃப்யூசர்ல என் கன்ட்ரோல்ல தான் இந்த காலேஜ் வரும்...
மிருனாழினி : பச் இதெல்லாம் கேட்க எனக்கு டைம் இல்ல ஷ்யாம் அண்ட் நான் உன்னை லவ் பண்ணுவனு எதிர் பார்த்து டைம் வேஸ்ட் பண்ணாத குட் பாய் ( அவன் பதில் கூட எதிர் பார்க்காம போய்ட்டா)
ஷ்யாம் : என்னைக்கு இருந்தாலும் நீ தான் எனக்கு வொய்ஃப் மிரு வெய்ட்டிங் ஃபார் தட் டே...
தமிழ்மாறன் : மிரு இன்னும் வரலயேனு தேடி வந்தான்...
மிருனாழினி : ஷ்யாம் பண்ண டென்சன்ல தமிழ்ல கவனிக்காம அவனை க்ராஸ் பண்ணி போனா...
தமிழ்மாறன் : அவ கைய புடிச்சி திருப்புனான்...
மிருனாழினி : ஷ்யாம் தான் கைய புடிக்குறானு நினைச்சி கோவமா திரும்புனா...
தமிழ்மாறன் : நான் தான் யாழினி ஏன் இவ்ளோ கோவம் எதாவது ப்ரச்சனையா...
மிருனாழினி : ( மாறன் கிட்ட சொல்லலாமா வேண்டாமா, வேண்டா சொன்னா ப்ரச்சனை ஆகும்) ஒன்னும் இல்ல மாறா திடீர்னு கை புடிக்கவும் கொஞ்சம் பயந்துட்டேன் அதான்...
தமிழ்மாறன் : சரி வா போலாம் எல்லாரும் நமக்காக காத்துருக்காங்க..
மிருனாழினி : ம்ம்ம்...
தொடரும்...
# Sandhiya.
4 Comments
Miruku possessive vanthuruchu ☺️☺️☺️☺️☺️pavam arjun enna parunganunu sollium yallarum marana than parthanga 😂😂😂😂😂😂😂😂😂😂
ReplyDeleteSprr sissy❤️ miru ku semaa possessive varuthu 😂😂😂😂 pavam arjun 😂😂bulb vakitaa...itha shyam la miru life la problem varum ninkara
ReplyDeleteMiru ku possessiveness 🤣🤣🤣🤣🤣🤣Arju adha vida possessiveness unaku iruku da
ReplyDeleteசூப்பர்
ReplyDelete