ஏதேதோ எண்ணம் - 14
பரணி ஒரு மூலையில் தலையில் கை வைத்து அமர்ந்திருக்க... மனோ ஒரு மூலையில் யோசனையுடன் அமர்ந்திருக்க...
செழியன் ஓட்டமும் நடையுமாக "வேதா... வேதா..."கத்தியவாறு உள்ளே நுழைந்தான்...
"டேய் பரணி எங்க டா வேதா... "தன் பார்வையை சுழற விட்டு கொண்டே கேட்டவாறு மனோ பார்த்தவன் அவனை நெருங்கி "வேதா எங்க..."பதற்றதுடன் கேட்க...
மனோ அவனை மேலும் கீழுமாக பார்த்து அவனின் பதற்றத்தை புரிந்து "வேதா இங்க இல்ல... என் flat ல... ஆனா கோவமா இருக்கா..."
செழியன் பெருமூச்சு விட்டு "கோவமா இருந்தா கூட பிரச்சனை இல்ல... அவ காணோம்னு பயந்தே போயிட்டேன்... அவ வீட்டுல இல்லனு தெரிஞ்சதும் உசுரே இல்ல...என் மேல கொலைவெறில இருந்தாலும் சரி... நா அடிச்சதுக்கு திரும்பி என்னைய அடிச்சாலும் சரி... ஆனா அவளை இங்க வர சொல்லு... எத்தனை நாள் வேணும்னாலும் என் மேல கோவமா இருக்கட்டும்...என்னால அவளை விட்டுட்டு இருக்க முடியாது..."மனோ கையை பிடித்து கண் கலங்கி "வேதா வர சொல்லு மனோ... அவ என் கூட இருந்து என்னைய முறைச்சுக்கிட்டே இருந்தா கூட போதும்... வேதா என் கூடவே இருக்கனும்..."கெஞ்சிட...
மனோவுக்கு அவனை பார்க்க பாவமாக இருந்தது...
"வேதா கண்டிப்பா வருவா டா... ஆனா அதுக்கு முன்னாடி நீ ஒன்னு காரியம் பண்ணனும்..."அவனை நெருங்கினான் பரணி...
செழியன் புரியாமல் "என்ன சொல்ற நீ... எனக்கு புரியல..."நா என்ன பண்ணனும்..."
"எனக்கு என்ன சொல்றதுனு தெரியல... வேதாவுக்கு அனன்யா பத்தி எதுவுமே தெரியாதாம்..."
செழியன் அதிர்ந்து போய் "வேதாவுக்கு அனன்யா பத்தி தெரியாதா... அது எப்படி நா தான் கல்யாணத்துக்கு முன்னாடியே
என் அப்பா அம்மா கிட்ட பொண்ணுக்கு எதையும் மறைக்க கூடாது... சொல்ல சொன்னேன்... அவங்களும் சொன்னேன் னு சொன்னாங்களே என் கிட்ட...வேதாவுக்கு என்னைய பத்தி எல்லாம் தெரியும்னு நினைச்சு தானே நா கல்யாணத்துக்கு சரினு சொன்னேன்... அப்போ வேதாவுக்கு அனன்யா பத்தி எதுவும் தெரியாதா... அப்போ என் அப்பா அம்மா பொண்ணுக்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன் னு சொன்னது எல்லாம் பொய்யா... அய்யோ.,"தலையில் அடித்து கொண்டு "என் மனைவிக்கிட்ட எதையும் மறைக்க கூடாது னு நினைச்சேன்... எல்லாமே அவளுக்கு தெரியனும்னு நினைச்சேனே... உண்மைய மறச்சு தான் எனக்கும் அவளுக்கும் கல்யாணம் பண்ணி வச்சாங்களா...தப்பு பண்ணிட்டேன்... ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்...என் மனைவிக்கு பொய்யா இருந்துட்டேனே...வேதா கோவப்பட்டதுல தப்பே இல்ல... வேதா என்னைய பத்தி என்ன நினைச்சு இருப்பா... அப்போ இனிமே எனக்கு வேதா இல்லையா...இல்ல இல்ல நா வேதாவ விட மாட்டேன்... எல்லாத்தையும் வேதா கிட்ட சொல்ல தான் போறேன்... என் வேதா எதுவும் தெரியாம இருக்க கூடாது...நா வேதாவ பாக்கனும்..."கண்ணீரை துடைத்து மனோவை பார்த்து "வா மனோ போலாம்... நா வேதா கிட்ட எல்லாத்தையும் சொல்லனும்..."வழிந்த வேர்வை மையும் கண்ணீரையும் t shirt துடைத்து கொண்டே செல்ல...
இதையே எல்லாம் கேட்டு கொண்டு இருந்த மனோ திருதிருவென விழித்தவாறு நின்றான்...
செழியன் முன்னால் செல்ல... அசைவற்று நின்ற மனோ தோளை பிடித்து உலுக்கி பரணி "ஏய் என்ன நிக்கிற... வா..."என்றிட...
மனோ பயணியை நிமிர்ந்து விசித்திரமாக பார்த்தான்...
"டேய் என்ன டா ஆச்சு உனக்கு இப்படி முழிக்கிற..."புரியாமல் பரணி கேட்க..
"இல்ல யோசிக்கிறேன்... வேதாவ பத்தி உங்களுக்கும் தெரியும் தானே..."மனோ சந்தேகமாக கேட்டிட...
வாசல் வரை சென்ற செழியன் நின்று திரும்பி பார்த்தான்...
"வே... வேதா வா அவளை பத்தி என்ன..."பரணி கேள்வியாம் பார்த்திட...
செழியன் வேகமாக வந்தா மனோ தோளை பிடித்து திரும்பி "இத பத்தி நா உங்க கிட்ட கேட்கனும் நினைச்சேன்... ஆனா அதுக்காக வாய்ப்பும் வரல... அதுக்கும் மேல அத பத்திய கேட்கனும்னு தோணல... சொல்லு வேதா பத்தி என்ன சொல்ல வந்த..."
"அப்போ கல்யாணத்துக்கு முன்னாடி வேதா அப்பா அம்மா எதுவும் உங்க கிட்ட சொல்லலையா..."மனோ அதிர்ந்து போய் கேட்க...
செழியனும் பரணியும் புருவம் சுருக்கிட்டனர்...
மூவரும் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தனர்...
"என்னமோ இடிக்குதே..."பரணி யோசனையாக கேட்க...
"நீங்க ரெண்டும பேரும் சொல்லனும்னு தான் நினைச்சு இருக்கீங்க... உங்களுக்கு தகவல் வர்றதுல தான் பிரச்சினை இருந்திருக்கு..."என்ற மனோ பார்த்து "ஆம்..."என்பது போல் தலையை ஆட்டினான் செழியன்...
பரணி செழியன் தோளை சொரிந்து "I think இது உன் அப்பா அம்மா வேலையா இருக்குமோ..."என்றிட..
மனோ நிமிர்ந்து பார்த்து "Maybe... But இதுல வேதாவோட அப்பா அம்மா கூட்டா இருக்க வாய்ப்பு இருக்குற மாதிரி எனக்கு தோணுது..."
செழியன் பெருமூச்சு விட்டு "இதுக்கு ஒரே வழி தான்..."
இருவரும் ஆர்வமாக "என்ன..."என்றிட...
"பரணி நீ என் அப்பா அம்மாவ பாரு... மனோ நீ வேதாவோட அப்பா அம்மாவ பாரு..."
"அப்போ நீ..."என்ற பரணியை பார்த்து "நா வேதாவ பாக்க போறேன்...அதுக்கு முன்னாடி..."மனோவை பார்த்து " வேதா எதுக்காக என் கிட்ட கோவப்பட்டானு உனக்கு தெரியுமா..."கேட்டிட...
மனோ சற்று தயங்கியவாறு "அது வந்து நீங்க நீங்க நேத்து நீங்க ரெண்டு பேரும்..."தலையை சொரிய...
"சரி... அத விடு... அதுக்கு அப்புறம் என்ன அத சொல்லு..."
"நீங்க போதைல அனன்யானு பேரை சொன்னீங்களாம்... அதனால தான் அவளுக்கு கோவம்..."
"இதுக்கு எதுக்கு கோவம்... ஓ அனன்யா பத்தி சொல்லாத கோவமா..."
"அப்படி இல்ல...எப்படி சொல்றது..."மனோ தாடையை தடவி "நீங்க வேதா கூட..."இழுக்க...
"ப்ச் ஏன் யா சும்மா அதுலேயே வந்து நிக்கிற...அதுக்கு அப்புறம் போ யா...அது தான் நடந்திருச்சுல அடுத்து என்ன நடந்துச்சு தெரியாம தானே கேக்குறேன்..."செழியன் கத்தி விட...
மனோ கடுப்பாகி "யோவ் ஏன் யா... அத எப்படி சொல்றது னு சங்கடப்பட்டு தானே யா தயங்குறேன்... அதுக்கு அப்புறம் எல்லாம் இல்ல... அது தான் விசயமே.. நீ அனன்யானு போதைல உலர்னத கேட்டு நீ அவ கூட இருந்தது அவளை I mean அனன்யாவ நினைச்சுகிட்டு தான்னு வேதா தப்பா நினைச்சுக்கிட்டு நான் உன் மேல கோவமா இருக்கா போதுமா..."
செழியன் புரியாமல் விழித்துவாறு "அனன் அனன்யாவ நினைச்சா... அவளுக்கு என்ன பைத்தியமா... அனன்யா வ நா எதுக்கு நினைக்க போறேன்...Infact அனன்யாவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... அவ என் cousin I mean என் அத்தை பொண்ணு...அவ்ளோ தான்... அவ தங்கச்சி இனியா கூட பேசுன அளவு கூட அனன்யா கூட பேசுனது இல்ல... என் மனசுல வந்த ஒரே பொண்ணு முத பொண்ணு வேதா மட்டும் தான்..."தெளிவாக சொல்ல
"அப்போ ஏன் அனன்யா பேரை சொன்னீங்க..."சந்தேகமாக கேட்ட மனோவை முறைத்தவாறு "இதுக்கு நா உன் கிட்ட பதில் சொல்லனும்னு அவசியம் இல்லை... நா வேதா கிட்ட பேசிக்கிறேன்...நீ முத சொன்ன வேலைய பாரு..."செழியன் சென்று விட...
பரணி மனோ தோளில் கை போட்டு "சரி வா... அவன் ஏதோ tension ல பேசிட்டான்... எதுவும் மனசுல வச்சுக்காத..."
"நா எதுவும் நினைக்கலையே... தேவை இல்லாம நீங்க ஏன் feel பண்றீங்க..."
பரணி அவனை முறைத்து "பே...பாவமாக பாத்தேன் பாரு..."தலையில் அடித்து கொண்டு செல்ல...
"யோவ் எல்லாம் போறீங்க...இந்த வீட்டை என்ன பண்றது..."மனோ கத்த...
"OLX விட்டுது... ஆள பாரு... எல்லா information collect பண்ணி உன் flat க்கு தான் வருவோம்... நீ பூட்டி key ஹ எடுத்துட்டு போயிடு..."வெளியே இருந்து கத்திவாறு பரணி சென்று விட...
மனோவும் வீட்டை பூட்டி விட்டு வேதா அப்பா அம்மாவை பார்க்க சென்று விட்டான்...
**************
செழியன் நேராக மனோ flat க்கு சென்று அழைப்பு மணியை அழுத்த...
மனோவை எதிர்ப்பார்த்து வந்து கதவை திறந்த ஆரா எதிரே செழியன் நிற்பதை பார்த்து சிலையாகி நின்றாள்...
செழியன் அவள் முகத்திற்கு நேராக சொடக்கிட... ஆராவிடம் இருந்து எந்த அசைவும் இல்லாம இருக்க... அவள் புஜத்தை பிடித்து நகர்த்தி விட்டு அவளை கடந்து உள்ளே நுழைய...நினைவிற்கு வந்த ஆரா வேகமாக அவன் முன் வந்து நின்று "என்ன வேணும்..."என்றிட...
அவளை மேலும் கீழுமாக பார்த்து விட்டு "என் பொண்டாட்டி எங்க..."
"அவ உள்ள தூங்குறா..."அறையை நோக்கி கை நீட்ட...
"Thanks..."அறையை நோக்கி செல்ல..ஆரா அவனை வழி மறித்து "எங்க எங்க போறீங்க..."
"என் பொண்டாட்டிய கொஞ்ச போறேன்... கரடி மாதிரி disturb பண்ணாம சமத்தா போய் அங்க உட்காரு... யாரும் வராம பாத்துக்கோ சரி..."அவள் கன்னத்தில் மெதுவாக தட்டி கொடுத்து உள்ளே நுழைந்து கதவை சாத்தி விட்டான்...
தொடரும்...
1 Comments
Super daylium poduga story
ReplyDelete