ஏதேதோ எண்ணம் - 13
அலைபேசியில் தன் தோழியின் அழுக்குரல் கேட்டு பதறி அடித்து வந்து விட்டாள் ஆராதனா...
செழியன் அறைந்தில் கன்னத்தில் விரல் தடம் பதிந்து தடித்து போய் கண் வீங்கி முகமே சிவந்து இருந்தாள் வேதா...
"என்ன ஆச்சு டி..."என்ற ஆராவுக்கு பதிலாக அவளை அணைத்து கொண்டு அழுதாள்...
தோழியின் நிலையை பார்த்து அவளை வழுக்கட்டாயமாக கிளப்பி மனோஜ் தங்கி இருக்கும் flat க்கு அழைத்து சென்றாள்...
மனோஜ் கிளம்பி தயாராகி வெளியே வர கதவை திறக்க... வாசலில் வேதாவும் ஆராவும் நின்றனர்...
புரியாமல் விழித்தவாறு இருவரையும் உள்ளே அழைத்து டீ போட்டு எடுத்து வந்து அமர்ந்தான்...
மனோ ஆராவை பார்த்து "என்ன..."என்பது போல் கண்ணாலே கேட்க...
"தெரியாது..."என்பது போல் தோளை உலுக்கி "கேட்கலாம்..."என்று சைகை செய்தாள்...
வேதா டீ குடிக்கும் வரை அமைதியாக இருந்தனர்...
"என்ன ஆச்சு வேதா... உனக்கும் செழியனுக்கும் சண்டையா..."
"செழியன் இப்படி பண்ணுவாருனு நா நினைச்சு கூட பாக்கவே ஆரா... ஏன் ஆரா ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது...அப்படி நா என்ன டி பாவம் பண்ணேன்... எல்லாருமே என்னைய ஏமாத்துறாங்க... முத அந்த ஆனந்த் என்னைய ஏமாத்துனான்... இப்ப செழியன்... நம்புர எல்லாருமே என்னைய ஏமாத்துறாங்க... நா ஏமாற்றதுக்குனே பொறந்து இருக்கேன் போல... எல்லாம் என் தலை விதி...என் தப்பு தான்... நா யாரையும் நம்பி இருக்க கூடாது... ஆனந்த் என்னைய ஏமாத்துனது கூட இந்த அளவுக்கு என் மனசு வலிக்கல... ஆனா என் செழி செழியன் என் செழியன் அவருக்கு எப்படி டி மனசு வந்துச்சு..."அவள் தோளில் முகம் புதைத்து கதறி அழுதவாறு புலம்பி தள்ளினாள்...
ஆராவும் மனோவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்...
மனோ வேதாவை உற்று பார்த்து கொண்டே "இன்னக்கி வேலைக்கு மட்டம் தான் போல... நம்ம மூனு பேருக்கும் Leave செல்லிடவா..."ஆராவிடம் கேட்க...
ஆரா முறைத்து கொண்டே "ஆணியே புடுங்க வேணாம்... நீ கிளம்பு நாங்க பேசிக்கிறோம்..."
"ஏ... அவ என் friend டி... அவ அழும் போது support ஹ as a friend நா கூட இருக்கனும்ல..."
"நா யாரு..."
"நீயும் தான் அவ friend இருந்தாலும்..."
ஆரா முறைக்கவும்... மனோ முகத்தை சோகமாக வைத்து கொண்டு "நீங்க சாப்டீங்களா..."
வேதா ஆராவிடமிருந்து விலகி " ரொம்ப பசிக்கிது மனோ... சாப்ட ஏதாவது செஞ்சு கொடு... மறுபடியும் அழுக தெம்பு வேணும்..."
இருவரும் அவளையே பார்த்தனர்...
மனோ வீட்டில் இருந்த ரவையை வைத்து கிச்சடி செய்து கொடுத்தான்...
வேதா அழுதுகொண்டே கிச்சடியை சாப்பிட.... மனோ ஆரா கன்னத்தில் கை வைத்து அவளை பார்த்தனர்...
மனோ ஆரா காதில் மெதுவாக "எனக்கு தெரிஞ்சு பெரிய சண்டையா இருக்காது... வேதா தான் செழியனை தப்பா நினைச்சு சண்டை போட்டு இருப்பாளோ னு தோணுது..."சந்தேகமாக கேட்க
"என்ன சண்டைனு தெரியாம நீயா பேசாத..."
"உனக்கு தெரியாதா... செழியன் எப்படினு... ஆனந்த் மாதிரியா..."
"முத என்ன நடந்துச்சுனு கேட்போம்..."அழுது கொண்டு இருந்த வேதாவை பார்த்து "முத சாப்டு டி... அப்புறம் அழலாம்... ஒரே நேரத்துல எதுக்கு ரெண்டையும் பண்ற..."
வேதா சாப்டுவதை நிறுத்தி "அவரு ஏன் டி இப்படி பண்ணாரு..." கேட்டிட...
இருவரும் தலையில் அடித்து கொண்டனர்...
வேதா சாப்டு முடிக்க... ஆரா மனோவை செழியனை பார்த்து என்ன என்று கேட்டு வருமாறு அனுப்பி வைத்து வேதாவிடம் என்ன நடந்தது என்று கேட்டாள்...
*************
செழியன் வீட்டிற்கு வந்து பார்க்க... வீடு பூட்டி இருந்தது...
செழியன் பதற்றதுடன் நிற்க... பரணியும் வந்தான்...
"என்ன டா..."
"பரணி வேதாவ காணோம் டா...நா அடிச்சதால கோச்சுக்கிட்டு போயிட்டா போல டா... எனக்கு பயமா இருக்கு... எனக்கு வேதா வேணும் டா..."கதற...
"இத நீ அடிக்கிறதுக்கு முன்னாடியே யோசிச்சு இருக்கனும்... எங்கேயும் போய் இருக்க மாட்டா டா... Time என்ன ஆச்சுனு பாரு... வேலைக்கு கிளம்பி இருப்பா..."
செழியன் வேகமாக எப்போதும் சாவி வைக்கும் இடத்தில் சாவியை தேட... தேடுதலில் பலனாக சாவி கிடைத்தது..
கதவை திறந்து உள்ளே சென்று பார்க்க... போட்டது போட்டப்படியே இருந்தது... Car key தேட கிடைக்க வில்லை... Bike key எடுத்து கொண்டு கிளம்பினான்...
"டேய் செழி நானும் வரேன் டா..."
Bike உயிர்ப்பித்து "இல்ல நீ இரு... வேதா வந்தா எனக்கு சொல்லு..."சொல்லி கொண்டே சென்று விட்டான்...
**************
வேதா ஆராவிடம் நேத்து ராத்திரி நடந்ததை சொன்னாள்...
"செழியன் இப்படி பண்ணுவாருனு நா நினைச்சு கூட பாக்கல ஆரா...எல்லாரும் ஒரே மாதிரி இருக்காங்கல..."
"அப்படி எல்லாம் இல்ல டி... நீ தப்பா புரிஞ்சுக்கிட்டீயோனு தோணுது... "
"அப்போ என் காதால கேட்டது பொய்னு சொல்றீயா ஆரா... நல்லா தெளிவா அனன்யா னு சொன்னாரு... யார் அந்த அனன்யானு எனக்கு தெரியாது... எனக்கு ஒரு Past இருக்குற மாதிரி இருந்திருக்கலாம்... ஆனா நா எதுவும் மறைக்காம அவர் கிட்ட என் past ஹ எல்லாம் சொல்லி தானே கல்யாணம் பண்ணது... அவர் மட்டும் ஏன் டி என் கிட்ட அவரோட Past ஹ மறச்சாரு..."வருத்தத்துடன் கேட்டிட...
ஆரா என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தாள்...
"அவர் Past பத்தி எனக்கு கவலை இல்ல...
எல்லாம் மறந்து என் கூட வாழ்க்கை தொடங்கி இருந்தா கூட நா சந்தோஷப்பட்டு இருப்பேன்... ஆனா..."அதற்கு மேல் பேச முடியாமல் தடுமாறி "அவளை நினைச்சு தானே அவரு என் கூட படுத்தாரு..."
"என்ன டி பேசுற... பொறுமையா இரு டி.."
"என் மேல் ஆசைப்பட்டா வந்தாரு... இல்லையே... அவரு மனசுல வேற ஒருத்திய வச்சுக்கிட்டு என்னைய அவளா நினைச்சு குடும்பம் நடத்துவாரு... நா எல்லாத்தையும் பொறுமையா போகனுமா..."மூச்சு வாங்க பேசி "அவரு அந்த பொண்ணை பத்தி சொல்லாம இருந்தது கூட பிரச்சனை இல்ல... ஆனா என்னைய அனன்யா வா நினைச்சு அவரோட ஆசைய தீர்த்துக்கிட்டாரு ல..."அவள் மேல் சாய்ந்து அழுதாள்...
ஆரா செழியன் வேறொரு பொண்ணுடன் தொடர்பில் இருப்பாரோ என்று கூட நினைத்தாள்...
வேதாவை சமாதானம் செய்து தூங்க வைத்து மனோவின் வருகைக்காக காத்திருந்தாள்...
*******************
செழியன் வேதாவை தேடி சென்றா விட... பரணி புலம்பியவாறு வாசலிலேயே அமர்ந்திருக்க... மனோ வாசலில் வண்டியை நிறுத்த... சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்த பரணி மனோவை பார்த்து புருவம் சுருக்கினான்...
மனோ பரணியை நெருங்கி "செழியன் எங்க..."கேட்டிட..
"ஏன் என்ன விசயம்..."
"வேதா என் apartment ல தான் இருக்கா..."
"வேதா அங்கேயா இருக்கா... செழி வேதாவ காணோம் னு தேடிக்கிட்டு போய் இருக்கான்... சரி வேதா அங்க வந்தானா கூட்டிட்டு வராம நீ மட்டும் வந்து இருக்க... தனியா விட்டுட்டா வந்து இருக்கீயா..."
"இல்ல அவ மட்டும் வரல... ஆராவும் வந்து இருக்கா... ரெண்டு பேரும் சேர்ந்து தான் வந்து இருக்காங்க... என்ன பிரச்சினை..."
"அது வந்து..."பரணி இழுக்க...
மனோ அலைபேசி அலற... எடுத்து பார்த்து "ஆரா தான்..."எடுத்து காதில் கொடுத்து "சொல்லு ஆரா..."என்றிட..
ஆரா வேதா சொன்னதை சொல்ல... மனோ பேசாமல் கேட்டு கொண்டு இருந்தான்...
பரணி மனோ தோளை சொரிந்து "என்ன..."என்பது போல் சைகையில் கேட்க...
"இரு.."என்பது போல் கை காட்டி விட்டு "சரி வைக்கிறேன்..."அலைபேசியை அணைத்தான்...
"என்ன... ஆரா என்ன சொன்னா..."
"நீங்க செழியன் friend தானே...உங்க கிட்ட ஒன்னு கேட்கலாமா..."
"ம்ம்ம்... கேளு..."
"அனன்யா..."
அந்த பெயரை கேட்டதும் பரணி அதிர்ந்து போய் "உனக்கு உனக்கு எப்படி தெ தெரியும்..."திணறி கேட்க...
"ஏன் இப்படி திக்குறீங்க... எனக்கு அனன்யானா யாருனு தெரியாது... வேதா தான் சொன்னா..."
"ஓ... அப்படியா... வேதாவுக்கு தான் அனன்யா வ பத்தி நல்லா தெரியுமே..."
"என்னது வேதாவுக்கு எல்லாம் தெரியுமா... அவ அது தெரியாம தான் செழியன் கூட சண்டை போட்டா இருக்கா..."
"என்ன சொல்ற நீ... கல்யாணத்துக்கு முன்னாடியே அனன்யா விசயத்தை பத்தி எல்லாம் சொல்லி தானே முடிவு பண்ணது..."
"அனன்யா விசயமா... ஏங்க அனன்யாங்கற பெயரையே அவ நேத்து தான் கேட்டு இருக்கா,..நீங்க என்னடான்னா அனன்யா விசயம் என்னன்னமோ சொல்றீங்க..."
"வேதாவுக்கா அனன்யா பத்தி எதுவுமே தெரியாதா... செழியன் வேதா லுக்கு எல்லாம் தெரியும்னு தானே நினைச்சுக்கிட்டு இருக்கான்...அய்யோ கடவுளே..."தலையில் கை வைத்து பரணி அப்படியே அமர்ந்து விட...
மனோவுக்கு ஏதோ சரி என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது...
தொடரும்...
1 Comments
Story semmmaya poguthu. But story ya daily poda matringa
ReplyDelete