சொல்லாமல் யார் பார்த்தது - 1

இது ஒரு அருமையான காதல் கதை தாங்க..சொந்த பந்தம் கலந்த காதல்..

ஹீரோ: அஸ்வின்

ஹீரோயின் : ப்ரீத்தி

ரெண்டு பேரும் அத்தை பையன், மாமன் பொண்ணு முறை தான். இவங்களுக்கு எப்படி காதல் வருது, அது கல்யாணத்துல முடியுதான்னு தான் கதையே..இனி வாங்க கதையில வர மத்தவங்கள பாக்கலாம்.

அஸ்வின்னோட அப்பா : கணேஷ் அம்மா சத்யா, அவனோட தங்கச்சி திவ்யா..

ப்ரீத்தியோட அப்பா : தியாகு, அம்மா வசந்தி, அவளோட தங்கச்சி பூஜா, தம்பி வசந்த்.

கணேஷ் அப்பறம் தியாகு ரெண்டு பேரும் ப்ரண்ஸ் அவங்க அவங்க தங்கச்சியை பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்து கல்யாணம் பண்ணிட்டாங்க..( அப்படின்னா கணேஷ் ஓட தங்கச்சி தான் வசந்தி, தியாகு ஓட தங்கச்சி தான் சத்யா )

ரெண்டு குடும்பமும் பக்கத்து பக்கத்து வீட்டுல ஒன்னா சந்தோஷமா இருக்காங்க..  வசந்திக்கு கணேஷ் மட்டும் இல்லாம இன்னும் ஒரு அண்ணா இருக்காரு..ஒரு சின்ன பிரச்சினையில பேசுறது இல்ல.

அதே மாதிரி சத்யாக்கும் ஒரு அக்கா இருக்காங்க. அவங்க நல்லவே பேசுவாங்க..

மத்த குடும்ப உறுப்பினர்களை அப்பறம் போக போக பாக்கலாம்.( இப்ப இவங்களை நல்லா ஞாபகம் வைச்சுக்கோங்க...)

அஸ்வின் அப்போ 10 வது படிக்குறான்.
ஸ்பெஷல் க்ளாஸ் முடிஞ்சு லேட்டா வரான்.

வீட்டுக்குகிட்ட நிறைய பேரு இருக்காங்க..

அவன் என்னன்னு பாத்துட்டே வர..

ஒரு பாட்டி..

அடியே ப்ரீத்தி உன் மாமன் வரான் டி.. அவன் முகத்தை பாக்காத..

அஸ்வின் : ஏன் ?? என் முகத்துக்கு என்ன ??

பாட்டி : ஒன்னு இல்ல ராசா..உன் முகத்துக்கு என்ன ?? ராஜா மாதிரி இருக்க..அவ பெரிய மனுசி ஆகிட்டா..அதா அவளை பாக்க வேண்டாம் ன்னு சொன்னேன்.

இதுல ப்ரீத்தி கேட்டுட்டு தான் இருக்கா..

அஸ்வின் : ஓ..சரி படிக்கணும்.. வரேன்னு போக..

ப்ரீத்தி அவனை பாத்து வெட்கப்பட்டு ஒளிச்சுக்க..

அஸ்வின் : இவளுக்கு என்ன ஆச்சு ன்னு அவனுக்குள்ள நினைச்சுட்டு போறான்.

அடுத்த நாள் குடுசை கட்டுறாங்க..ஆனா இவன் எதுமே கண்டுக்காம கிளம்பி போய்டுறான்.

ஒரு வாரம் இப்படியே போது..

அஸ்வின் : ஏம்மா... ப்ரீத்தி ஏன் மா வெளியே வர மாட்டரா... எப்பவும் நொய்யு நொய்யு பேசிட்டே இருப்பா..அவளா பாக்காம ஒரு மாதிரி இருக்கு.

சத்யா : டேய்..அவ வர முடியாது..நீ போய் பேசு போடா..

அஸ்வின் : சரி..ன்னு போறான்.

ஹே.. ப்ரீத்தி..என்ன பண்ற ??

அவனை பாத்ததும் திரும்பிக்குறா..

கை நிறைய வளையல், தலை முழுக்க பூ.. முகம் முழுக்க மஞ்சள்.

அஸ்வின் : பயங்கரமா சிரிக்குறான்.

ஹே..போதுமா.. எதுக்கு இவ்வளவு..

ப்ரீத்தி : அவங்க தான்..

அஸ்வின் : ஹே..இது என்ன ??

ப்ரீத்தி : தீனி..

அஸ்வின் : இவ்வளவு தின்னா பூசணிக்கா மாதிரி தான் ஆவ.. அதனால நான் கொஞ்சம் எடுத்துக்குற..சரியா..

ப்ரீத்தி : ம்ம்..

அஸ்வின் : ஏன்னா ஆச்சு...பேசவே மாட்டிக்குற..

ப்ரீத்தி : கூச்சமா இருக்கு.

அஸ்வின் : யாரு உனக்காக..ன்னு சிரிக்க...

சத்யா : ஏன் டா கிண்டல் பண்ற..

அஸ்வின் : கேட்டியா மா.. இவளுக்கு கூச்சமா இருக்காம்..

சத்யா : அது அப்படி தான் டா..இனி இப்படி தான் இருப்பா..நீ போய் படின்னு அனுப்பி விடுறா..

அஸ்வின் சிரிக்குறது சரி தாங்க.. ப்ரீத்தி செம வாலு.. அவளுக்கு கூச்சம்னா என்னான்னு கூட தெரியாது. ஆனா இப்போ ஆட்டோமேட்டிக் ஆ கூச்சம் வந்துருச்சு.

பெரிய மனுசி ஆகுற வரைக்கும் அஸ்வின் கூட சண்டை போட்டு ஓடி விளையாண்டு அவன் கூட மண்ணுல கட்டிபிடிச்சு உருண்டவ இதுக்கு அப்பறம் அவன் முகத்தை பார்த்து பேசவே தயங்க ஆரம்பிக்குறா... இப்படியே நாட்கள் போது.. அவனும் 10 வது பப்ளிக் எக்ஜம் க்கு ரொம்ப பயங்கரமா படிக்குறான். நல்ல எக்ஜம் எழுதி சைன்ஸ் குரூப் எடுக்குறான். அப்பறம் என்ன அப்படியே படிப்பு படிப்புன்னே இருக்க.. அஸ்வின் அவன் வீட்டுல இருக்க டைம் ப்ரீத்தி அவன் வீட்டுக்கு போகவே மாட்டா..அவனை தவிர மத்த எல்லார் கிட்டயும் நல்லா பேசி கிண்டல் பண்ணிட்டு இருப்பா.. அவன் வந்தா உடனே ஓடிருவா..

அஸ்வின் 12 படிக்கும் போது ப்ரீத்தி 10 வது. ரெண்டு பேரும் எக்ஜம் நல்லா எழுதுறாங்க.

அஸ்வின் பரீட்சை முடிஞ்ச அப்பறம் ப்ரண்ட்ஸ் கூட கிரிக்கெட் விளையாட போய்டுவான்..

ரிசல்ட் வந்து அஸ்வின் ஏரோநாட்டிக்கல் எடுத்து கோயமுத்தூர் காலேஜ் க்கு போறான்.

ப்ரீத்தியோட அப்பா அவளை ஆட்ஸ் குரூப் எடுக்க சொல்றாரு.. ஆடிட்டர் ஆக.. அவளும் அப்படியே செய்றா.

அஸ்வின் பர்ஸ்ட் இயர்.. ப்ரீத்தி 11 வது.. நாட்கள் அப்படியே போகுது.

ப்ரீத்தி அஸ்வின் ரெண்டு பேரும் நேருக்கு நேர் பேசுறது சுத்தமா குறைஞ்சு போச்சு..

தினமும் அஸ்வின் ஃபோன் பண்ணுவான்.. அப்படி ஒரு நாள் பண்ணும் போது அஸ்வின் அம்மா பேசிட்டு அவன் தங்கச்சி ப்ரீத்தியோட தம்பி தங்கச்சி ன்னு கொடுத்துட்டு டக்குன்னு ப்ரீத்தி கிட்ட ஃபோனை கொடுக்க..

ப்ரீத்தி முழிக்குறா..

சத்யா : அஸ்வின்.. ப்ரீத்தி கிட்ட பேசு டா..நீ பேசு டி..

ப்ரீத்தி : ஹா...ஹாலோ.. எப்படி இருக்கீங்க..

அஸ்வின் : ம்ம்..நல்ல இருக்கேன். நீ எப்படி இருக்க..

ப்ரீத்தி : நல்ல இருக்கேன். சாப்டிங்களா ??

அஸ்வின் : என்ன மரியாதை ரொம்ப பாலமா இருக்கு..இனிமே தான் சாப்பிடணும்.

ப்ரீத்தி : ம்ம்..

அஸ்வின் : நல்லா படிக்குறீயா.. க்ளாஸ் பர்ஸ்ட் ஆ..அம்மா சொன்னாங்க.

ப்ரீத்தி : ம்ம்..

அஸ்வின் : சரி..ஏன் இவ்வளவு நாள் பேசாம இப்ப மட்டும் எப்படி பேசுற..

ப்ரீத்தி : அத்தை தான்...

அஸ்வின் : எங்க அம்மா இப்ப தரல அப்படின்னா இப்ப கூட பேசி இருக்க மாட்ட அப்படி தானே..

ப்ரீத்தி : ம்ம்..

அஸ்வின் : ம்ம் ஆ.. அடிப்பாவி..

ப்ரீத்தி : நான் அப்பறம் பேசுறேன்..அத்தை இந்தாங்க ன்னு கொடுத்துட்டு எழுந்து போய்டுறா.

அஸ்வின் : என்ன மா.. இவ்வளவு மரியாதையா பேசுறா..

சத்யா : உன்கிட்ட தான் டா அப்படி பேசுறா... எங்ககிட்ட எப்பவும் போல தான் பேசுறா..

அஸ்வின் : ஓ..சரி மா நாளைக்கு பண்றேன்..ன்னு வைச்சுடுறான்.. அடுத்த ஒரு சில நிமிஷம் ஏதோ நினைவலைகள் வந்துட்டு போக அதை கலைச்சுட்டு வேலையை பாக்குறான்.

நாளைக்கு பாக்கலாம்..

தொடரும்..

#  Bhuvi