சொல்லாமல் யார் பார்த்தது -11

ப்ரீத்தி க்ளாஸ் மேட் ரம்யா : ஹாய்...யாரு இது ப்ரீத்தி.. உன்னோட ப்ராதர் ஆ..

ப்ரீத்தி புருவத்தை உயர்த்தி முறைக்குற மாதிரி பாக்குறா..

அஸ்வின் : இல்ல.. நான் அவளுக்கு சீனியர்..

ரம்யா : ஓ.. அப்படியா.. அப்போ எங்களுக்கும் சீனியர் தான்.. நான் ரம்யா.. நீங்க

அஸ்வின் : அஸ்வின்..

ரம்யா : இவங்க என்னோட ப்ரண்ஸ் தீபா, சரண்யா, மல்லிகா..

அஸ்வின் ஹாய் சொல்ல அவங்களும் ஹாய் சொல்றாங்க..

ரம்யா : நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க..

ப்ரீத்தி முறைக்குற அஸ்வினை பாத்து..

அஸ்வின் : சும்மா தானே சொல்ற..

ரம்யா : இல்ல நிஜமா தான்..

ப்ரீத்தி அங்க இருந்து போறா..

அஸ்வின் : சரி அப்பறம் பாக்கலாம்..பாய்..ன்னு சொல்லிட்டு ப்ரீத்தி பின்னாடியே போறான்.

ரம்யா : ஹாலோ சீனியர்.. நீங்க எந்த க்ளாஸ்..

அஸ்வின் : 3 இயர்...

ரம்யா : எங்க டிபார்ட்மெண்ட் ஆ..

அஸ்வின் : இல்ல..

மல்லிகா : ஹே.. எதுக்கு டி கத்துற..

தீபா : அழகா இருக்கான் டி..

ரம்யா : ஏய் !! அவன் என்னோட ஆளு..

சரண்யா : என்ன டி சொல்ற..

ரம்யா : ஆமா டி..அவன் என்னோட ஆளு..இந்த நிமிஷம் இருந்து.

தீபா : ஏய்.. நானும் அவனை சைட் அடிக்குறேன் டி.

ரம்யா : அதுலா முடியாது..

மல்லிகா : ரெண்டு பேரும் கொஞ்சம் நிறுத்துங்க..அவனை பாருங்க..யாரு பின்னாடி போறான்னு...சும்மா நீங்க அடிச்சக்காதீங்க..

ரம்யா திரும்பி பாக்குறா..

அஸ்வின் ப்ரீத்தி கிட்ட நடந்து போறான்..

ரம்யா : அவங்களுக்கு என்ன சம்மந்தம்..கண்டுபிடிக்குறேன்.

அஸ்வின் : ஏன் டி உர்ருன்னு இருக்க..

ப்ரீத்தி : அவங்ககிட்ட எதுக்கு சிரிச்சு பேசுற... க்ளாஸ் லா எப்படிலா பேசுனாங்க தெரியுமா..

அஸ்வின் : போக போக சரி ஆகிடும் டி... ப்ரண்ஸ் ஆகிடு..

ப்ரீத்தி : எனக்கு ஒன்னும் தேவை இல்ல அவங்க..

அஸ்வின் : அப்பறம் ப்ரண்ஸ் இல்லாம என்ன பண்ணுவ..

ப்ரீத்தி : பாத்துக்கலாம்..ஆனா அவங்களை எனக்கு பிடிக்கல.. அப்பறம் அவங்க பேசுறாங்கன்னு நீயும் பேசுன அவ்வளவு தான்.

அஸ்வின் : சரி வா.. வெளியே போய்ட்டு வரலாம்.

ப்ரீத்தி : எங்க ??

அஸ்வின் : எங்க காலேஜ் கிட்ட ஒரு பேக்கரி இருக்கு..அங்க எல்லாமே நல்லா இருக்கும்..வா

ப்ரீத்தி : ம்ம்..லேட் ஆகிட்டா..

அஸ்வின் : ஆகாது வாடி...

ரெண்டு பேரும் மெதுவா நடந்தே போறாங்க..

15 நிமிஷத்துல வந்துட்டாங்க..

அஸ்வின் : அண்ணா !! ரெண்டு எக் பப்ஸ்..

கேண்டீன் அண்ணா : இந்தா பா... எங்க நீ மட்டும் தா இருக்க... ப்ரேம் எங்க??

அஸ்வின் : அவன் காலேஜ் குள்ள தான் இருக்கான் ணா... நான் மாமா பொண்ணு கூட வந்தேன்.

அண்ணா : ஓ..ஓகோ...சரி சரி..

அஸ்வின் : இந்தா..எடுத்துக்கோ..

ரெண்டு பேரும் சாப்பிடுறாங்க..

அஸ்வின் : அண்ணா !! ரெண்டு சாக்லேட் மில்க் ஷேக் ணா..

அண்ணா:ம்ம்...

ப்ரீத்தி : மாமா...

அஸ்வின் : சொல்லு டி..

ப்ரீத்தி : நான் ஊருக்கே போறேன் மாமா..எனக்கு எங்க அம்மாவை பாக்கணும் போல இருக்கு..

அஸ்வின் : ஹே... அத்தனை  தடவை சொல்லிட்டு இருக்கேன்..நீ மறுபடியும் ஆரம்பிக்கிற.. அப்போ நான் வேண்டா அப்படிதானே..

ப்ரீத்தி : ஏய்.. நான் சொன்னேன் னா..நீ வேண்டான்னு.. இப்படி லா பேசுன கடிச்சுருவேன் பாத்துக்கோ..

அஸ்வின் : எங்க கடிப்ப..

ப்ரீத்தி : உன் வாய் தான் இப்படி பேசுது.. அதனால உன் வாயைத் தான் ன்னு சொல்ல வந்து அப்படியே சைலண்ட் ஆகுறா..

அஸ்வின் : ஹே...சொல்ல வந்ததை முழுசா சொல்லு.. வாயைத் தானே கடிப்ப..எனக்கு ஓகே தா...வா

ப்ரீத்தி : நான் தெரியாம சொல்லிட்டேன்.

அஸ்வின் : இல்ல காரெட் டா தா சொல்லி இருக்க..

அண்ணா : இந்த தம்பி மில்க் ஷேக்..

அஸ்வின்: தேங்க்ஸ் ணா... இந்தாங்க ன்னு பணம் கொடுத்துட்டு எடுத்துட்டு வரான்.

ரெண்டு பேரும் குடிச்சுட்டு கிளம்புறாங்க..

ப்ரீத்தி: தினமும் வருவீயா..

அஸ்வின் : ம்ம்..

ரெண்டு பேரும் காலேஜ் போய்ட்டு ப்ரீத்தி யை விட்டுட்டு அஸ்வின் அவனோட காலேஜ் க்கு வரான்.

தொடரும்..

#  Bhuvi