ரணமாய் - 35
"அன்னக்கி தான் நாங்க அவனை கடைசியாக பார்த்தது அதுக்கு அப்புறம் அவன் எங்க போனான் என்ன ஆனான்னு யாருக்குமே தெரியல அவனை தேடவும் யாரும் முயற்சிக்கல தர்ஷினி அன்னக்கி அவனை விட்டு அவளோட அம்மா வீட்டுக்கு போனா அவங்க அவளை சேர்த்துக்கல கல்யாணம் பண்ணி கொடுத்ததுக்கு அப்புறம் உனக்கு இங்க வேலை இல்ல உன் புருஷன் இனி உனக்கு எல்லாமா இருக்கனும் அவனை விட்டுட்டு இந்த குழந்தையோட என்ன பண்ண போற அவன் பத்து பொம்பளைய கூட வச்சுக்கிட்டும் ஆனா தாலிய உனக்கு தானே கட்டி இருக்கான் எவ்ளோ மோசமான இருந்தாலும் அவனோட உன் வாழ்க்கை இனி நீ இந்த பக்கமே எட்டி பாக்க கூடாது கழுத்தை பிடிச்சு தள்ளாத குறையா அவளை விரட்டிட்டாங்க அதுவும் இது எல்லாம் பேசுனது தர்ஷினி அம்மா தான் ஒரு பொண்ணா இருந்துட்டு இன்னொரு பொண்ணை பத்தி இதுல பெத்த பொண்ணு வேற புரிஞ்சுக்காம அந்த காலத்து மனுஷனுங்க போல் பேசி அனுப்பிட்டாங்க என்ன பண்றதுன்னு தெரியாம இருந்த தர்ஷினிய என் வீட்டுக்கு கூட்டிட்டு போனேன் ஒரே ஒரு வாரம் இருந்தாங்க எப்படியோ ஒரு வேலைய தேடி நா போறேன்னு கிளம்பிட்டாங்க நாங்களும் எவ்வளோ இருக்க சொல்லி கெஞ்சி கேட்டோம் முடியாதுனு சொல்லிட்டாங்க எத்தனை நாள் என்னையும் என் பொண்ணையும் பாத்துக்குவீங்க உங்களுக்குனு ஒரு குடும்பம் இருக்குல அந்த பொறுக்கி பண்ண தப்புக்கு இந்த பாவிய ஆயுசு முழுக்க வச்சு பாத்துக்கனும் தலை எழுத்தா என்னைய பெத்தவங்களே ஏத்துக்கல நீங்க உங்க பொழப்ப பாருங்கனு சொல்லிட்டு போயிட்டாங்க அதுக்கு அப்புறம் இப்ப தான் வந்தாங்க..."என முடித்த பிரதீப்பை பார்த்து கொண்டு இருந்த திவாகர் பெருமூச்சு விட்டு சோபாவில் சாய்ந்து அமர்ந்தான்...
"தர்ஷினி புருஷனை அதுக்கு அப்புறம் நீங்க யாருமே பாக்கலையா..."என கேட்ட திவாகரிடம் "கொஞ்சம் நாள் முன்னாடி அவனை பாத்தேன்..."என்றாள் தாரணி
அதிர்ந்து போய் அவளை பார்த்த சாருவை கண்டு கொள்ளாமல் திலீப்பை பார்த்த தாரணி கண்ணால் ஏதோ கேட்க "வேண்டாம்..."என தலையை ஆட்டிட திவாகர் அதை கவனித்து விட்டான்...
"எங்க டி பார்த்த..."என சாரு அவளை கேட்டிட...
என்ன சொல்வது என்று புரியாமல் விழித்தவாறு "அது அது வந்து சாரு அஸ்வின் அஸ்வின் ஹ நா ஏர் ஹான் ஏர்போர்ட் ல பாத்தேன் two months back ஆபிஸ் வேலையா ஆஸ்திரேலியா போனேன்ல அப்போ தான் சென்னை ஏர்போர்ட்ல ஆளே அடையாளம் தெரியல அவன் தான்னு கண்டு பிடிக்கவே ரொம்ப நேரம் ஆச்சு அவன் கிட்ட பேச கூடாதுனு தான் இருந்தேன் மனசு கேட்க போய் பேசுனேன் ஆனா அவன் திருந்தல டி அப்படியே தான் இருக்கான் என் வாழ்க்கையே கெடுத்துட்டீங்கள அதுக்கு தண்டனை கிடைக்கும் காதலிச்சு பொண்ணும் இல்லாம கல்யாணம் பண்ண பொண்ணும் இல்லாம அனாதை ஆகி நாடு விட்டு நாடு போக வச்சுட்டீங்கள நல்லா இருங்க ஆனா நா மாறிட்டேன்னு மட்டும் நினைக்காதீங்க அது நடக்காது அவ எப்பவுமே என்னோட சாருமதி தான் அவளோட முதல் காதல் நா தான் அது எப்பவுமே மாறாது இப்ப அவ என்னைய வெறுத்து ஒதுக்கி பேசலாம் எப்போதாவது என் ஞாபகம் வரும் எனக்காக அவ கண்ணீர் சிந்துவா நடக்குதா இல்லையானு மட்டும் அவ என்னை உண்மையா தான் காதலிச்சா யாரால நாங்க பிரிஞ்சோமோ அவனை தான் அவள் உருகி உருகி காதலிக்கிறா சந்தோஷமா இருக்கட்டும் திலீப் எப்பவுமே ரெண்டாவது தான் என் சாருவ மறக்க சொல்ல உங்க யாருக்குமே உரிமை இல்ல இது என்னோட காதல்னு சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பிட்டான் அவன் பேசுன ஒவ்வொரு வார்த்தையும் அப்படியே மனசுல பதிஞ்சு போச்சு..."என்ற தாரணி குறுகுறுவென பார்த்து வைத்தான் திவாகர்...
"சரி விடுங்க எதுக்கு ஆவாத பேச்சை பேசிக்கிட்டு சாரு என்ன சமைச்சு வச்சு இருக்க செம்ம பசி..."என்ற பிரதீப் கையை பிடித்து "என்ன டா வந்ததும் சொல்ல வேண்டியது தானே..."என சாரு சாப்ட அழைத்து செல்ல...
திலீப்பும் தாரணியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள திலீப் சென்று விட பெருமூச்சு விட்டு திரும்பிய தாரணி தன்னையே பார்த்த கணவன் திவாகர் கண்டு திருதிருவென விழித்த தாரணி "என்ன அப்படி பாக்குறீங்க..."என்றிட..
"பொய் தானே சொன்ன..."என்றதும் வேகமாய் திவாகர் வாயை பொத்திக் தாரணி திரும்பி சாருவை பார்க்க சாரு பிரதீப்புடன் திவீரமாய் பேசி கொண்டு இருக்க "ஏங்க நீங்க இப்படி சத்தமாவா கேட்பீங்க..."என்க
கையை விலகி விட்டு "அப்போ பொய் தான் சொன்னீயா..."என்றிட...
"ஒரு நிமிஷம் உள்ள வாங்க..."என அவனை இழுத்து கொண்டு ஒரு அறைக்குள் நுழைய
"தாரு..."என அழைத்த சாருவிடம் "சும்மா இரு டி நீ வேற..."என கதவை சாத்தினாள்...
"ஏன் டி சும்மா சாதாரணமா அங்க உட்காந்து பேசி இருந்தா கூட கண்டுக்காம இருந்திருப்பாங்க இப்படி எல்லாரும் முன்னாடி கைய பிடிச்சு இழுத்து வந்து கதவை சாத்துறீயே வெளிய போனதும் என்ன ஏதுன்னு கேட்க மாட்டாங்களா..."
"கேட்க மாட்டாங்க ஆமா உங்களுக்கு எப்படி தெரியும் நா பொய் சொன்னேன்னு..."என்ற தாரணி தலையில் தட்டிய திவாகர் "அது தான் அப்பட்டமா தெரியுதே திருதிருனு முழிச்சு காட்டி கொடுத்துட்ட அதுவும் இல்லாம நா சும்மா போட்டு வாங்குறேன் அப்போ உண்மையா இது பொய்யா..."என்று கேட்க...
"அய்யோ..."என தலையை பிடித்து கொண்டு அமர்ந்த தாரணி "நானா தான் உலர்றேனா..."என்று பாவமாய் கேட்டவளை பார்த்து சிரித்து கொண்டே"ஆம்..."என்பது தலையை ஆட்டினான்...
"இது எனக்கும் திலீப்க்கும் மட்டும் தான் தெரியும் பிரதீப்க்கு கூட தெரியாது பிரதீப் கிட்ட சொல்றதால பிரச்சினை இல்ல எதுக்குனு தான் விட்டாச்சு ஆனாலும் அவன் சும்மா இருக்க மாட்டான் அவன் போய் அனிதா கிட்ட சொல்லுவான் அனிதா தர்ஷினி கிட்ட சொல்லுவா அதனால தான் சொல்லல..."
"சரி அப்படி என்ன விசயம்..."
"அது வந்து யார் கிட்டையும் சொல்லாதீங்க முக்கியமா சாருவுக்கு இது தெரியவே கூடாது..."
"சொல்ல மாட்டேண்டி என்ன சொல்லு என் மண்டை வெடிச்சிடும் போல நீ கொடுக்கிற பில்டப்பை பார்த்தா எனக்கு தெரிஞ்சு அது உப்பு சப்பு இல்லாத விசயமா இருக்க போகுது அப்படி மட்டும் இருந்துச்சு நா செம்ம காண்டாகிருவேன் பாத்துக்கோ..."
"அப்படி இல்ல கேட்டா அதிர்ச்சி ஆகிடுவீங்க..."
"ஆக மொத்தத்துல நீ சொல்ல மாட்ட அப்படித்தானே..."என எழுந்த திவா பிடித்த தாரணி "ஏங்க ஏங்க உட்காருங்க ஏன் புரிஞ்சுக்காம பண்றீங்க எவ்ளோ பெரிய விசயம்னு தெரியுமா ரெண்டு மாசம் யாருக்கும் தெரியாமல் மறைச்சு வைத்திருக்கோம் அதுல எவ்வளவு கஷ்டம் இருக்குனு தெரியுமா உங்களுக்கு யாருக்கும் தெரியாம மறைச்சு அதுக்கு தகுந்த மாதிரி நம்ம நடந்துக்கணும் யாருக்கும் சந்தேகம் படக்கூடாது அப்படி கஷ்டப்பட்டு மறச்சும் பிரயோஜனம் இல்ல நீங்க கண்டுபிடிச்சிட்டீங்க நாங்க பொய் சொல்றோம்னு உங்க கிட்ட சொல்லக்கூடாதுன்னு இல்ல எப்படி சொல்றதுன்னு தெரியாம இருக்கேன் அந்த அந்த அஸ்வின் இப்ப உயிரோட இல்ல..."என்றதும் அதிர்ந்து போனான் திவாகர்...
தொடரும்...
0 Comments