காதல் போர்க்களம்
தொடர்: 1
ஹாய் பிரண்ட்ஸ் இது முற்றிலும் மாறுபட்ட காதல் கதை ...போக போக உங்களுக்கே புரியும். வாங்க கதைக்கு போகலாம்.
ச்ச!! என்ன குடும்பமோ ?? காலையில மணி எட்டு ஆனா கூட ஒருத்தர் கூட ஒருத்தன் இருக்கான்னே !! அவனுக்கு பசிக்குமேன்னு எண்ணம் இருக்கா..ஒரு காபி கூட குடிக்கல.. இவ்வளவு தான் நமக்கு மரியாதை... கோபத்துல வார்த்தைகளை அள்ளி வீசிட்டு இருந்தாரு நல்லசிவம் ( ரிடையர் ஆர்மி)
ஆச்சோ என் செல்ல தாத்தா !! ஏன் இப்படி காலையிலேயே டென்ஷன் ஆகுறீங்க.. பாருங்க இப்பவே தலை எல்லாம் எவ்வளவு நரைமுடி வந்துருச்சு...ன்னு கிண்டல சிரிச்சுகிட்டே காஃபி ஓட நம்ம ஹீரோயின் என்ட்ரி..
ஏம்மா !! உனக்கு கூட என் ஞாபகம் இல்ல தானே.. நீயும் அவங்களை மாதிரி என்னை ஒதுக்கிட்ட இல்ல ஆர்த்தி..
அடிதான் வாங்குவீங்க...அங்க டேபிள் ல பாருங்க.. நான் எப்பவோ காபி கொண்டு வந்தேன்.. நீங்க அப்போ ரெஸ்ட் ரூம் போய் இருந்தீங்க.. நான் கூட கதவை தட்டி சொல்லிட்டு போனேன்.. ஞாபகம் இருக்கா ஆர்த்தி கேட்க..
நல்லசிவம் சிரிச்சுகிட்டே தலையை சொரிந்தப்படி !! சாரி டா தங்கம்...ஞாபக மறதில மறந்துட்டேன்..
நல்லவே தெரியும்.. இந்தாங்க..முதல்ல இத குடிங்க ன்னு காஃபியை நீட்டினாள்.
அப்போ அதை என்ன செய்றதுன்னு ஆறிப்போன காஃபி யை கைக் காட்ட,
அதை நான் எடுத்துட்டு போய் சூடு பண்ணிக் குடிச்சுக்குறேன் தாத்தா.
என்னால உங்க எல்லாருக்கும் எவ்வளவு கஷ்டம்..
உஷ்ஷ்..முதல்ல பிடிங்க.. குடிங்க..அப்பறம் இந்தாங்க உங்க பேப்பர்..படிங்க..9 மணிக்கு அம்மா டிபன் தருவாங்க சாப்பிடுங்க.. எனக்கு காலேஜ் க்கு டைம் ஆச்சு.. நான் சாய்ந்திரம் வந்து பேசுறேன் சரியா..
சரி டா தங்கம்..நீ பாத்து போய்ட்டு வா..ன்னு நெத்தியில ஒரு முத்தம் கொடுக்க..
பதிலுக்கு ஆர்த்தி தாத்தாவுக்கு கன்னத்துல ஒரு முத்தம் கொடுத்துட்டு ரூம் மை விட்டு வெளியே வந்து சமையல் கட்டுக்கு போறா..
என்னடி உங்க தாத்தா புராணம் முடிஞ்சாதா...
ஹா.. முடிஞ்சு..இங்க உன் வேலை முடிஞ்சாதா..என்ன சமையல்..
இன்னைக்கு கோஸ் பொரியல், பருப்பு கீரை, ரசம், அப்பளம், தயிர் ன்னு அடுக்கிட்டே போனா வாசுகி..( ஆர்த்தியின் அம்மா)
சூப்பர் சூப்பர்..சரி எல்லாத்தையும் போட்டாச்சு தானே..
போட்டுட்டேன்..இந்த சாப்பிடுன்னு கொடுக்க...தட்டை வாங்கிட்டு வந்து அவசரமாக சாப்பிட்டு கையை கழுவிட்டு கிளம்பினாள்.
அவ காலேஜ் போறதுக்குள்ள நாமா சார்ட் டா இவளை பாத்தி பேசிருவோம்.
ஆர்த்தி வாசுகி - தன்ராஜ் ஓட மூத்த மகள், ஆர்த்தி க்கு ஒரு தங்கச்சி பேரு நதியா..11 வது படிக்குறா.. ஆர்த்தி எம்.பி.ஏ ஃபைனல் இயர்.. நல்லசிவத்துக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு.. பையன் தான் தன்ராஜ், பொண்ணு மங்கையர்க்கரசி, அவங்க வெளியூர்ல இருக்காங்க.. அவங்களை பத்தி அப்பறம் சொல்றேன்.. தன்ராஜ் அரசு பேருந்து போக்குவரத்து கழகத்துல செக்கிங் இன்ஸ்பெக்டர் ரா இருக்காரு.
ஆர்த்தி காலேஜ் க்கு போய்ட்டு நேரா கேண்டீன் போனா..
அங்க அவளுக்கு முன்னாடியே அசோக் வைட் பண்ணிட்டு இருந்தான்.
வாங்க மேடம்..இந்தா உங்க சீக்கிரம் மா..ன்னு நாக்கலா கேட்க..
நான் என்ன பண்றது ?? பஸ் வர டைம் க்கு தானே வர முடியும்...
பாரு !! எல்லாரும் வர ஆரம்பிச்சுட்டாங்க.. எப்பவும் போல தான் இன்னைக்கும் ன்னு அவன் டீ வாங்க போக, அவளும் பதிலுக்கு ஒன்னு வாங்க போய் நின்னா..
எதுக்கு இப்போ இவ்வளவு கோவமா நிக்குற..
பின்ன என்னடி எப்போ இருந்து கேட்குறேன்., இப்படி அலைய விடுற, நான் உன்கிட்ட லவ் சொல்லி எவ்வளவு நாள் ஆச்சு, ன்னு கோவமா, ஆனா மெதுவா கேட்க..
நான் தா ஓகே சொல்லிட்டேன் தானே டா..பாவமா பதில் சொல்ல..
ஓகே சொல்லி என்ன பிரயோஜனம்..இப்ப வரைக்கும் தனியா மீட் பண்ண முடியால, அட்லிஸ்ட் ஒரு முத்தம், ஒரு டச்...
ஆர்த்தி கோவமா முறைக்க...
இப்ப நான் என்ன தப்பா கேட்டுட்டேன்.. எல்லாரும் பண்றது தானே.
பண்ணலாம் தம்பி.. பொறுமையா இரு..சரியா.. இன்னும் டைம் இருக்கு.
இன்னும் எவ்வளவு நாள் இதே சொல்ல போற..கோவமா
ம்ம் நம்ம லவ் பத்தி நீ எப்போ எல்லாருக்கும் தெரியப்படுத்துறீயோ அப்ப..
அப்போ நீ என்னை நம்பல.. அப்படித்தானே!!
நான் அப்படிலா சொல்லல..
வேற எப்படி?? கோவத்தின் உச்சிக்கே போய்ட்டான்.
சரி நாமா அப்பறம் பேசலாம்.. எல்லாரும் வர ஆரம்பிச்சுட்டாங்க.. கோபப்படாமல் போ டா...ன்னு கண்களை சுருக்கி பாவமா சொல்ல..
அவன் திரும்பி கூட பாக்காம க்ளாஸ்க்கு போய்ட்டான்..
அவன் போன கொஞ்ச நேரத்துல அவளும் கிளம்பினாள்..
அசோக் வேற யாரும் இல்ல.. ஆர்த்தி ஓட க்ளாஸ் மேட்... அசோக் காலேஜ் வந்த கொஞ்ச நாள்லயே ஆர்த்திக்கிட்ட லவ்வ சொல்லிட்டான்.. ஆர்த்தி கொஞ்சம் டைம் எடுத்து யோசிச்சுட்டு தான் ஓகே சொன்னா...
அசோக் பாக்க ரொம்ப நல்ல அழகாகவே இருப்பான்..அவனை வேண்டாம்னு யாருமே சொல்ல மாட்டாங்க.. அவ்வளவு அழகா இருப்பான்..அது தான் ஆர்த்தி யோசிச்ச காரணமே..ஆர்த்தியும் ஒன்னும் சாதாரணம் கிடையாது..இடுப்பு வரைக்கும் கருங்கூந்தல், அழகான உருவம், அதா! பையன் உடனே விழுந்துட்டான்.. அசோக் மட்டும் இல்ல எவ்வளவோ பேர் லவ் சொல்லி ஏற்காதவ அசோக் லவ்வ ஏத்துக்கிட்ட.. காரணம் அவன் அழகுன்னு இல்ல..இவ கிட்ட அவன் நடந்துக்கிட்ட விதம் தான்..ஆனா இப்ப கொஞ்ச நாளா அவளுக்குள்ள ஏதோ ஒரு தயக்கம் இருந்துட்டே இருக்கு..அது போக போக சொல்றேன்.
சரி வாங்க கதைக்கு போலாம்.
ஆர்த்தி க்ளாஸ்க்கு போய் உட்கார்ந்ததும்.. கொஞ்ச நேரத்திலேயே க்ளாஸ் ஸ்டார்ட் ஆகிடுச்சு.
அசோக் க்ளாஸ் கவனிக்காம ஆர்த்தியையே பார்த்துட்டு இருக்க.. ஆர்த்தி கண்ணாலேயே ஃபோர்ட் பாருன்னு சைகை காட்ட..
அவனும் கோவமா மூஞ்சியை திருப்பிக்குறான்.
இப்படியே அந்த நாள் போது. காலேஜ் முடிஞ்சா தும், அசோக் கிளம்பாம அப்படியே இருக்க..ஆர்த்தியும் மத்தவாங்க கிளம்புற வரைக்கும் வைட் பண்றா. எல்லாரும் போனதும்,
என்ன ஆச்சு.. கிளம்பாம இருக்க.
ஒரு டைம் மட்டும் டி..ப்ளீஸ்...ன்னு அவ கிட்ட வர..
ஹே!! இது காலேஜ் டா.. வேண்டா ன்னு பின்னாடி போக..
இப்படியே இன்னும் எத்தனை நாள் தான் சொல்லுவ..
நீ மட்டும்...
என்ன தான் மட்டும் ன்னு அசோக் கேட்க..
அது..ன்னு மெல்ல தயங்கி தயங்கி..அது நம்ம லவ் பத்தி ஏன் யாருக்கும் தெரிய கூடாதுன்னு நினைக்குற. உன் ப்ரண்ட்ஸ் கூட தெரியாம வைச்சு இருக்க. ஏன் ??
எத்தனை தடவை சொல்றது..நம்ம சேப்டி க்கு தான்.
நீ மறைக்கிறது தான் எனக்கு ஒரு மாதிரி பயமா இருக்கு.. என்னால உன்கிட்ட வர முடியல.. எங்க என்னை ஏமாத்திடுவியோன்னு பயமா இருக்கு.
ஏதுமே பேசமா கோவமா போறான்.
ஆர்த்தி அவனை தடுக்கல.. அவன் போன பின்னாடி மெதுவா போறா.
வீட்டுக்கு போனதும் எந்த கவலையையும் காட்டிக்காம ஜாலியா இருக்கா..
ஆர்த்தி தங்கச்சி நதியா ஏதோ வரையணும் ன்னு கொடுக்க அதை வரைச்சு தந்துட்டு ஃபோன் எடுத்து நெட் ஆன் பண்றா..
அசோக் நம்பர் ல இருந்து மெஸேஜ்.. ஓப்பன் பண்ணி பாத்துட்டு.. ரொம்பவே ஷாக் ஆகி ஃபோன் எடுத்துக்கிட்டு மாடிக்கு ஓடுறா.
அவனுக்கு போன் பண்றா..
அவன் எடுக்க மாட்டிக்குறான். அவ கண்ணு கலங்க...ப்ளீஸ் ப்ளீஸ் போன் எடு டான்னு முணுமுணுத்து கிட்டே மறுபடியும் மறுபடியும் பண்றா..ஆனா அவன் எடுக்கவே மாட்டிக்குறான்.
நைட் ஆகுது.
ஆர்த்தி எங்க டி ன்னு வாசுகி கேட்க..
தெரியல மா ன்னு நதியா சொல்ல..
ஆர்த்தி.. ன்னு வாசுகி ஒரு குரல் கொடுக்க..
ஹா...மா மாடியில தான் இருக்கேன்.. வரேன் மா..ன்னு கண்ணைத் துடைச்சுக்கிட்டு கீழே வரா..
மேல என்ன பண்ற !! இந்த நேரத்துல..
சும்மா தான் மா போனேன். சரி சொல்லுங்க எதுக்கு கூப்டீங்க.
நாளைக்கு காலேஜ் லீவ் போடு..
லீவ்வா !!! எதுக்கு ??
நாளைக்கு முக்கியமான வேலை இருக்கு டி. லீவ் போடுன்னா போடேன்.
என்ன?? நாளைக்கு அக்காவை பொண்ணு பாக்க யாராவது வரப் போறாங்களா ?? ன்னு கிண்டல் ஆ நதியா கேட்க..
ஆர்த்தி அதிர்ச்சியா அம்மா பதிலை எதிர்பார்த்து அவங்க முகத்தை பார்க்க..
வாசுகி சிரிச்சிட்டே அது லாம் இல்ல. நாளைக்கு குடும்பத்தோட அப்பா வெளியே போலாம் சொன்னாரு.
எங்க மா போக போறோம் ன்னு சந்தோஷமா நதியா கேட்க.
திருப்பட்டூர் பிரம்மா கோவிலுக்கு.. அப்படியே பக்கத்துல இருக்க கோவிலுக்கும் போய்ட்டு வரலாம்.
வேண்டாம் ன்னு எப்படி சொல்றதுன்னு ஆர்த்தி அமைதியா சரின்னு தலையை ஆட்டிட்டு போய் உட்கார்ந்து அசோக் க்கு மெஸேஜ் பண்றா..
ஏன் டா அட்டன் பண்ண மாட்டீக்குற..ஏன் இப்படி பண்ண?? அறிவு இல்லையான்னு... எல்லாம் சிங்கிள் டிக் தான்.. கோவம் வருது கூடவே அழுகையும் வருது.
நாளைக்கு நான் காலேஜ் வர மாட்டேன்.. கோவிலுக்கு போறோம் ன்னு பண்றா..
தூங்கமா ஃபோனையே பாத்துட்டு இருக்கா...
விடிய காலையில 3.30 மணிக்கு கிளம்புறாங்க .. கோவிலுக்கு..
# Bhuvi
தொடரும்..
0 Comments