காதல் போர்க்களம்
தொடர்: 3
ஆர்த்தி கண்ணில் கண்ணீர் வழிய..
அசோக் அதை துடைத்து விட்டு..சாரி.
ஏன் இப்படி பண்ண ??
உனக்கு புரிய வைக்கணும் ன்னு தான்..
பைத்தியமா நீ !! ஏன் கால் அட்டன் பண்ணலை.
வீட்டுல பெரிய பிரச்சினை ஆகிடுச்சு..அதா..நீ பேசமாட்டேன் ன்னு சொன்னாதால தான் அட்டன் பண்ணேன். ஆனா அப்போ எல்லாருமே பக்கத்துல தான் இருந்தாங்க. அதா பேச முடில.
அப்படி என்ன பிரச்சினை??
சொல்றேன். முதல்ல என்னை மன்னிச்சிடு.
எதுக்கு?? ன்னு ஆர்த்தி புரியாம கேட்க.
அது.. அப்பாவோட பிசினஸ் ரொம்ப லாஸ் ஆகிடுச்சு. வீட்டுல அதனால ரொம்ப பிரச்சினை.
சாரி டா..இது தெரியாம நான் கால் மேல கால் பண்ணி கஷ்டப்படுத்திட்டேன்.
பரவாயில்ல ஆர்த்தி..உனக்கு எதுவும் தெரியாது இல்ல.
சரி.. கவலைப்படாதே.. எப்படியாவது சரி பண்ணிடலாம்.. இன்னும் கொஞ்ச நாள் தானே. காலேஜ் முடிஞ்சிரும்.. வேலைக்கு போய் சரி பண்ணிடலாம்.
ஆர்த்தி... இப்போ எனக்குன்னு எந்த சொத்தும் இல்ல..ஏன் வீடு கூட இல்ல.
அதனால என்ன?? நாமா சேர்ந்து கட்டிக் கலாம்.
நிஜமா தான் சொல்றீயா ?? இப்போ சரின்னு சொல்லிட்டு நாளைக்கு விட்டு போய்ற மாட்டா இல்ல.
நான் ஒன்னும் மத்த பொண்ணுங்க மாதிரி இல்ல..நீ நேத்து விட்டு போன மாதிரி போகாம இரு போதும் ன்னு அவன் காயம்பட்ட கையில ஒரு முத்தம் கொடுக்குறா.
ஹே...என்ன கிஸ் பண்ணிட்ட..
ஆமா எனக்காக ஆனா காயம்.. நான் தானே சரி பண்ணணும்.
இப்படி தெரிஞ்சு இருந்தா உதட்டுல கிழிச்சுட்டு இருந்து இருப்பேன்.
ச்சீ நாயி...எழுந்து போ..
ஹே...என்ன நாய் ன்னு சொல்ற... நாய் என்ன பண்ண தெரியுமா.
டேய்!! அடி வாங்குவ...ன்னு வெட்கப்பட்டு சிரிக்குறா..
ரொம்ப அழகா இருக்க டி..
என்ன ஐஸ் வைக்குறீயா..
ச்சே ச்சே!! நிஜமா...அவளையே ஒரு மாதிரி பார்க்க..
ஹே.. லைப்ரரி டா...
சரி எழுந்து வா.. சாப்பிட போலாம். பசிக்குது.
ரெண்டு பேரும் எழுந்து போறாங்க. கேண்டீன் போய் சாப்பிட்டு க்ளாஸ் க்கு போறாங்க.
ரெண்டு பேர் முகமும் அவ்வளவு சந்தோஷம்..
இப்படியே நாட்கள் கழிய..
ஒருநாள் டூர் போக ப்ளான் பண்றாங்க.
மொத்த க்ளாஸ் உம் போறது. எல்லாரும் என்ன என்ன பண்றதுன்னு ப்ளான் பண்ணிட்டு இருக்காங்க.
டேய் அசோக்!! ஒரு விஷயம் தெரியுமா?? ரமேஷ் ஆர்வமா கூப்பிட்டு ட்டே வர..
என்னன்னு சொன்னா தானா டா தெரியும்.
ஆனந்த் இருக்கான் தானே டா..( அவங்க க்ளாஸ் தான்)
ஆமா !! அவனுக்கு என்ன ??
அவன் ஆர்த்தியை ஒன் சைடு ஆ லவ் பண்றான்னாம்..
என்ன ?? அவன்னா?? கோவமா கேட்க.
ஆமா..உனக்கு எதுக்கு டா கோவம் வருது.
கோவமா.. இல்லையே..சரி சொல்ல வந்ததை சொல்லு.
அவன் நாமா டூர் போறாம் இல்ல..அங்க எல்லார் முன்னாடியும் அவளை ப்ராபபோஸ் பண்ணலாம் ன்னு இருக்காணாம்.. அதுக்கு நாமா எல்லாருமே அவனுக்கு ஹேல்ப் பண்றதாம்.. நானும் சரின்னு சொல்லிட்டு வந்துட்டேன்.
அசோக் புருவத்தை தூக்கி எதுவும் பேசாமல் அவனை ஒரு முறை முறைச்சுட்டு எழுந்து வெளியே போய்டுறான்.
இவன் எதுக்கு இப்போ முறைக்குறான் ன்னு ரமேஷ் அசோக் பின்னாடியே போறான்.
தொடரும்.
# Bhuvi
0 Comments