காதல் போர்க்களம் 



தொடர்: 5

ஈவ்னிங் ஆகுது. காலேஜ் முடிஞ்சு எல்லோரும் கிளம்ப...

அசோக் ஆர்த்திக்காக கேண்டீன் ல வைட் பண்ணிட்டு இருக்க..

ஆர்த்தியும் கேண்டீன் க்கு வரா..கூடவே சரண்யாவும் வர...

சரண்யா அசோக் ஐ பார்த்து வெட்கத்தோடு சிரிக்க.. அவனும் எதார்த்தமா சிரிக்க.. ஆர்த்தி அதை பார்த்து முறைக்க...

அசோக் வேணும்னே ...

என்ன சரண்யா கேண்டீன் பக்கலாம்..இந்த டைம்ல நீ வர மாட்டீயே..

சும்மா தான் அசோக்.. ஸ்நாக்ஸ் சாப்பிட்டு போலாம் ன்னு வந்தேன். 

ஓ..சரி சாப்பிட்டு பாத்து போங்க ன்னு அசோக் அங்க இருந்து கிளம்பினான்.. ஆர்த்தியை பாத்துக்கிட்டே. 

சரண்யாவவோ அவளை தான் அவன் பார்த்துகிட்டு போறான்னு நினைச்சுக்குறா.

அன்னைக்கு நைட்டு...

ஆர்த்தி அம்மா வாசுகி ரொம்ப சோகமா இருக்காங்க.

இதை கவனிச்ச ஆர்த்தி...

ஏம்மா ?? சோகமா இருக்க...

ஒன்னு இல்ல மா..( வாசுகி சோகமா சொல்ல)

அம்மா !! என்ன ஆச்சு?? உன் முகத்தை பார்த்தாலே தெரியுது.

வாசுகி முகத்தை நிமிர்த்தி ஆர்த்தியை பார்த்து..

ஆர்த்தி... உன்னை கேட்காமல் நான் ஒரு வாக்கு கொடுத்துட்டேன் மா..

ஆர்த்தி என்னன்னு புரியாமல் என்ன வாக்கு மா...ன்னு கேட்க..

தாத்தா நல்லசிவம் மும் அங்க வந்து கோவமா உட்கார..

வாசுகி எதுவும் பேசாமல் அமைதியா இருக்க..

சொல்லு மா..சொல்லு உன் பொண்ணு கிட்ட...நீயே அவளை பாழும் கிணறுல தள்ள போறேன் ன்னு..

தாத்தா..என்ன சொல்றீங்க..எனக்கு ஒன்னும் புரியல..

அதுவா உங்க அம்மா ஒரு வீணாப் போனவனுக்கு உன்னை கல்யாணம் பண்ணி தரேன் ன்னு வாக்கு கொடுத்து இருக்கா..

ஆர்த்திக்கு தலையில இடியே விழுந்த மாதிரி இருக்கு. 

ஆர்த்தி...என்னை மன்னிச்சிடு மா..எனக்கு வேற வழி தெரியலை..

ஆர்த்தி அமைதியா அப்படியே நிக்க..

என்ன வழி தெரியல... அவனுக்கு பொண்ணு கிடைக்கலைன்னா என் பேத்தி வாழ்க்கை தான் கிடைச்சாத..என்னை மீறி என்ன பண்ணுவீங்க நீங்க..ன்னு தாத்தா கத்த..

ஆர்த்தி அப்பா தன்ராஜ் உள்ள வர..

அப்பா !! என்ன பேசுறீங்க..உங்க பேத்தி மேல இருக்க அக்கறையை கொஞ்சம் உங்க பொண்ணு மேலயும் உங்க பேரன் மேலயும் காட்டுங்க பா... பாவம் அக்கா..

அடேய்!! என்ன பேச்சு டா பேசுற...அவ என் பொண்ணு தான் இல்லன்னு சொல்லல..ஆனா என் பேத்தி வாழ்க்கை என்ன ஆகுறது டா.. அவகிட்ட ஒரு வார்த்தை கூட கேட்கல..

அவகிட்ட என்ன பா கேட்குறது..என் பொண்ணு நான் சொன்னா கேட்பா...ஏம்மா ஆர்த்தி நான் சொன்னா கேட்ப தானே..

ஆர்த்தியும் ஆமா ன்னு தலை அசைக்க..

பாத்தீங்களா பா...இவதான் என் பொண்ணு..ன்னு பெருமைப்பட்டுக்க..

தாத்தா கோவமா ரூம்க்கு போய் கதவை சாத்திக்க..

வாசுகி ஆர்த்தி கிட்ட பேச ஆரம்பிக்குறாங்க.

நீ காலேஜ் போன அப்பறம் உங்க அத்தை சுமதியும், பிரவீனும் வந்தாங்க மா..

பிரவீன் ரொம்ப படிக்கலைன்னு யாரும் பொண்ணு தர மாட்டிக்குறாங்க ன்னு ரொம்ப வருத்தப்பட்டாங்க.. அதோட உன்னை பொண்ணு கேட்டாங்க.. நாங்க முதல்ல முடியாது அவ படிக்கணும் ன்னு தான் சொன்னோம்..ஆனா அவங்க இன்னும் 2 மாசம் தானே.. அதுக்கு அப்புறம் பண்ணிக்கலாம் ன்னு சொல்லி ஒரே பிரச்சினை பண்ணிட்டாங்க..கடைசியா வேற வழி இல்லாம சரின்னு ஒத்துக்கிட்டோம் மா..

ஆர்த்தி சோகமா பாக்க..

நீ ஒன்னும் கவலைப்படாதே மா..படிப்பு முடிஞ்ச அப்பறம் தான் கல்யாணம்..

ஆர்த்தி எதுவும் பேசாமல் ரூம்க்கு போய் படுத்துக் கிட்டா..

என்னாங்க!! எதுவும் சொல்லாமா போறா..

திடீரென சொன்னா அப்படி தானே இருக்கும். விடு புரிஞ்சுப்பா...

தொடரும்..

# Bhuvi