காதல் போர்க்களம் 




தொடர்: 6

உள்ள போன ஆர்த்தி தேம்பி தேம்பி அழுக ஆரம்பிக்குறா..சத்தமே இல்லம்மா...

ஏம்மா இப்படி பண்ணிங்க...என் மனசுல என்ன இருக்குன்னு ஒரு வார்த்தை கூட கேட்காம நீங்களா முடிவு பண்ணிட்டீங்க..அச்சோ நான் அசோக் கிட்ட என்ன சொல்லுவேன்..முதல்ல அவன் இல்லாம நான் எப்படி.. நான் அப்படி மாமா கூட.. நான் அவரை அப்படிலா நினைச்சதே இல்லையே!!..

கடவுளே ப்ளீஸ் எப்படியாவது இதுல இருந்து என்னை காப்பாத்து...ன்னு மனசுக்குள்ளே கதற...

நதியா ட்யூஷன் ல இருந்து வந்ததும்..அம்மா எனக்கு ரொம்ப பசிக்குது.. சாப்பாடு போடுன்னு உட்கார 

உங்க அக்காவை கூப்பிடு..

போ மா.. அவளுக்கு பசிச்சா சாப்பிட போறா..எனக்கு போடு மா.. ரொம்ப பசிக்குது.

போடி அவளை கூப்பிடு. அதுக்குள்ள உனக்கு எல்லாம் எடுத்து வைக்குறேன்..

நதியாவும் கடுப்பா எழுந்து போய்...டம் டம்முன்னு கதவை தட்டி..

ஏய் அக்கா...அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க..

பாப்பா!! அப்படியே உங்க தாத்தா வையும் கூப்பிடு.

என்ன மா?? எப்பவும் அக்கா தானே பண்ணுவா.. இன்னைக்கு என்ன எல்லாம் தலைகீழாக இருக்கு.

போடி ரொம்ப பேசாமல்..

ஆர்த்தி கதவை திறந்து..

அம்மா !! எனக்கு பசிக்கல..எனக்கு சாப்பாடு வேண்டா.

அப்போ அவங்க அப்பாவும் இருக்க..

ஆர்த்தி!! ஏன் வேண்டா.. வெளியே வா..

அவளும் தலையை தொங்க போட்டு வர..

தாத்தாவும் வெளியே வந்து உட்கார..

வாசுகி சாப்பாடு போட்டு கொடுக்க அவரும் வாங்கி சாப்பிட ஆரம்பிக்குறாரு.

மத்தவங்களும் சாப்பிட உட்கார வாசுகி பரிமாற அமைதியா சாப்பிட்டாங்க..

என்ன ஒரே மயான அமைதியா இருக்கு. எப்பவும் இப்படி இருக்காதே..

என்ன அக்கா.. யாரையாவது லவ் பண்ணி அப்பா அம்மா கிட்ட மாட்டிக்கிட்டீயா ?? ன்னு காமெடியா கேட்க.

ஆர்த்திக்கு பொறையேறி நல்லா இரும ஆரம்பிக்க.. தன்ராஜ் அவ தலையை தட்டி தண்ணி கொடுத்தாரு. 

ஏய்!! அறிவுகெட்டவளே ??? என்ன பெரிய மனுஷி மாதிரி பேசுற..ஒழுங்க சாப்பிட்டு கிளம்பு.

அப்போ பிரவீன் கிட்ட இருந்து ஃபோன் வருது. 

நதியா போய் எடுத்து பார்த்துட்டு..

அக்கா!! பிரவீன் கா..அவன் எதுக்கு ஃபோன் பண்றான்.. அதுவும் உன் நம்பருக்கு..

ஆர்த்தி எதுவும் பேசாமல் இருந்தாள். 

நல்லசிவம் வாங்கி பேச..

டேய்!! எதுக்கு டா ஃபோன் பண்ண..

தாத்தா!!! அது இது.. ஆர்த்திகிட்ட பேச ..

அவ சாப்பிட்டுகிட்டு இருக்கா..நீ எங்க இருக்க..

சரி தாத்தா.. நான் சென்னைல இருக்கேன். 

அங்க என்ன வேலை உனக்கு??

என்ன தாத்தா அப்படி கேட்குறீங்க.. நான் இங்க தானே ஐடி ல வேலை பாக்குறேன். மாசம் 1.5 லட்சம் சம்பளம். 

அப்படியா !! எத்தனை நாளா இருக்க..

இப்பதான் தாத்தா..2 மாசம் முன்னாடி.

என்கிட்ட சொல்லவே இல்ல..

தாத்தா!! என்ன மறந்துட்டீங்களா ?? நானே உங்ககிட்ட ஃபோன் பண்ணி சொன்னேன்னே..

ஓ... அப்படியா..சரி லீவ் கிடைக்கும் போது இங்க வா.. பேசணும். 

சரி தாத்தா.. ஆர்த்தி கிட்ட ஃபோன் தரீங்களா ப்ளீஸ்.

ம்ம்... ஆர்த்தி இந்தா..

ஆர்த்தி ஃபோன் வாங்கிட்டு...

ஹாலோ...

ஹா... ஹாலோ ஆர்த்தி!! எப்படி இருக்க..

ம்ம்.. நல்லாதான் இருக்கே..

ஏன் ஒரு மாதிரி பேசுற..

கொஞ்சம் தலைவலியா இருக்கு.. நான் நாளைக்கு பேசட்டா..

பிரவீன் குரல் தாழ்ந்து ம்ம்...சொல்ல அவளும் கட் பண்ணிட்டு படுக்க போறேன் ன்னு சொல்லிட்டு போறா..

ஏன் டா தன்ராஜ்!! பிரவீன் எப்ப டா வேலைக்கு போனான். என்கிட்ட சொன்னாத வேற சொல்றான்.

ஆமா அப்பா!! 2 மாசம் முன்னாடி தான் சேர்ந்தான். நல்ல சம்பளம்..தங்க அப்பார்ட்மெண்ட் வீடு வேற..சனி ஞாயிறு லீவு.. காலையில 10 மணிக்கு போனா சாய்ந்திரம் 6 மணிக்கு வந்துருவான்.

ஓ...இதுலாம் சரி தான்..ஆனா ஆர்த்தி க்கு அவனை பிடிச்சு இருக்கான்னு ஒரு வார்த்தை கூட கேட்காமல் நீங்க முடிவு பண்ணது தப்பு தானே.. அவளுக்கு சம்மதமான்னு ஒரு வார்த்தை கூட கேட்கலையே டா.

சரி பா.. நாளைக்கு பேசலாம் அவகிட்ட..

ஒருவேளை அவளுக்கு விருப்பம் இல்லன்னு சொன்னா என்ன பண்றதுங்க...

அவ நம்ம பொண்ணு வாசுகி.. கண்டிப்பா சரின்னு தான் சொல்லுவா.

இது எல்லாம் கேட்டுட்டு இருந்த நதியா கையை கழுவிட்டு.. ஆர்த்தி ரூம் க்கு போறா.

அங்கு ஆர்த்தி தலையணையில் முகத்தை புதைச்சு வைச்ச மாதிரி படுத்து அழுதுட்டு இருக்க..

நதியா வரதை உணர்ந்து சாதரணமா இருக்கா..

அக்கா... வெளியே என்ன பேசிட்டு இருக்காங்க தெரியுமா.. அப்பிடின்னு நடந்ததை சொல்றா..

ஆர்த்திக்கு என்ன பண்றதுன்னே தெரியலை.

சரி நீ படு.. டைம் ஆகுது. காலையில பேசிக்கலாம்.

ஆர்த்தி ஃபோன் எடுத்து வாட்ஸ் அப் பாக்குறா.. அசோக் கிட்ட இருந்து நிறைய மெஸேஜ்...

ஹாய் டி..

என்ன பண்ற..

லூசு..

மேடம் ரொம்ப பிஸியா..

என் காதல் பிசாசே... மெஸேஜ் பாரு டி..

ஆர்த்தி..

தங்கமே..

சாப்டியா

தூங்கிட்டியா ??

ஓய்..

கால் பண்ணிடுவேன் டி.. அப்பறம் மாட்டிப்ப..

ஏதாவது ப்ராப்ளம் மா..

தங்கமே..

ஏய் அழகி..

இதை எல்லாம் பார்த்துட்டு அவளுக்கு கண்ணீர் வழிய..

ஓய்... மேடம்?? 

ரிப்ளே பண்ண மாட்டிங்களா!!

சாரி டா.. கொஞ்சம் பிஸி..

நீ தூங்கு 

நாளைக்கு பேசலாம். 

ஹே...என்ன டி?? 

உனக்காக தான் இவ்வளவு நேரம் வைட் பண்றேன்.. தூங்கு ன்னு சொல்ற..

இனி வைட் பண்ணதா..

ஏய்!! 

ஏன் டி ??

எதுக்கு இப்படி சொல்ற ..

இல்ல 

சும்மா தான். 

உன் ஹெல்த் ஆ பாத்துக்கோ..

அது லாம் நல்ல தான் இருக்கேன்..நீ பேசு..எனக்கு என்னமோ மாதிரி இருக்கு.. உன்கிட்ட ஒன்னு சொல்லணும்.. சரண்யா கூட வந்ததும் எதுவும் பேச முடியல.

ம்ம்...

என்ன ம்ம்...கால் பண்ணட்டா..

இல்ல வேண்டா..நதியா பக்கத்துல தான் இருக்கா..

ப்ளீஸ் டி..

ஆர்த்திக்கு எங்க அவன்கிட்ட பேசுனா அழுதுருவோம் ன்னு‌ பயம்..

இல்ல டா.. நாளைக்கு பேசலாம்..நீ தூங்கு.. காலேஜ் லா பேசலாம்..பாய் ன்னு ஆஃப் பண்ணிட்டு படுத்துட்டா..

அசோக் ஏதோ சரியில்லை ன்னு மட்டும் தெரிது.ஆனா என்னன்னு புரியல..

தொடரும்..

# Bhuvi