காதல் போர்க்களம்
தொடர்: 9
தாத்தா!! என்ன பேசணும்..முதல்ல சொல்லுங்க. அப்பறம் நான் ஃபோன் பண்றேன். ஏன்னா ?? ஃபோன் பண்ணிட்டு அப்புறமா நீங்க சொல்ல சொல்ல பேசுனா அவனுக்கு சந்தேகம் வரும் இல்லையா??
அதுவும் சரிதான் மா..அந்த பையன் கிட்ட அவன் அப்பா, அம்மா கூட பொறாந்தவங்க பத்தி கேளு. அவங்க அப்பா என்ன வேலை செய்றாருன்னு கேளு. அப்பறம் நாமா உடனே ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம் ன்னு கேளு.
தாத்தா..என்ன சொல்றீங்க..
இரு மா.. நான் முழுசா சொல்லி முடிச்சுடுறேன்.
சரி சொல்லுங்க..
அதுக்கு அந்த பையன் உடனே சரின்னு சொல்லிட்டான் னா அவனை நம்பலாம்..இல்ல முடியாது, யோசிக்கணும், பாக்கலாம் ன்னு ஏதாவது சொன்னா அவனை நம்புவதை யோசிக்கணும். இப்ப நான் சொன்ன மாதிரி பேசு..
ஆர்த்தி மண்டைக்குள்ள என்னமோ பண்ண..
அசோக் மெஸேஜ் பண்றான்.
ஹாய் டி பட்டு...இப்ப உன்கிட்ட பேசணும். கால் பண்ணட்டா..
தாத்தா..அவனே பேசணும் ன்னு சொல்றான்.
நல்லதா போச்சு.. பேசு. ஸ்பீக்கர்ல போடு.
ஆர்த்தி கால் பண்ண... முதல் ரிங்லயே அட்டன் பண்ணிட்டான் அசோக்..
ஆர்த்தி ஸ்பீக்கர் ல போட்டுட்டா..
வீட்டுல யாருக்கு டவுட் வரல தானே..கட் அடுச்சதுல.
ஹா.. அது லாம் ஒன்னும் பிரச்சினை இல்ல.. யாருக்கும் தெரியாது. சரி என்ன பேசணும் ன்னு சொன்ன..
அதுவா!! நீ போன அப்பறம் யோசிச்சேன்..ஒன்னு தோணுச்சு. அதா!!
என்னன்னு சொல்லு..
அது..நாமா ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம் மா..
ஆர்த்தியும் தாத்தாவும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கிட்டு..
ஓய்..என்ன டி!! ஏதாவது சொல்லு?? உன்னை என்னால யாருக்காகவும் விட்டு தரமுடியாது..நீ என்ன யோசிப்பன்னு தெரியும். அது பத்தி நீ ஒன்னும் கவலைப்படாதே..உனக்கு இப்போ 22 எனக்கு 23..இது சரியான வயசு இல்ல தான்..ஒரு சேஃப்டி க்கு தான். அப்பறம் இதுநாள் வரைக்கும் நான் என் குடும்பத்தை பத்தி யார்க் கிட்டயும் சொன்னது இல்ல.. நீயும் இவ்வளவு நாள் கேட்டது இல்ல..இப்ப நானே சொல்றேன்.
எங்க அப்பா ரவி சங்கர். கேள்விப்பட்டு இருப்ப..
பெரிய பிஸ்னஸ் மேன் அவரா..
ம்ம்..அவரு தான்.
அசோக்!! சும்மா தானே சொல்ற..
இல்ல டி..உண்மையா அவரு தான் எங்க அப்பா.
அப்போ கண்டிப்பா நம்ம கல்யாணம் நடக்காது அசோக். உங்க அம்மா அப்பா ஒத்துக்க மாட்டாங்க. உங்க ஸ்டேட்ஸ் வேற..எங்க ஸ்டேட்ஸ் வேற..
ஹே.. நீங்க நாங்க ன்னு பிரிச்சு பேசுற..அடி வாங்கிப்ப... சொல்றது கேளு முதல்ல..
இல்ல அசோக்.. நீ என்னை மறந்துரு.. நான் வைக்குறேன் ன்னு கட் பண்றா..
ஏம்மா !! ஏன் அவசரப்படுற!! கொஞ்சம் பொறுமையா முழுசா பேசி முடிவு பண்ணி இருக்கலாம். எனக்கு என்னமோ அந்த பையன் நல்ல பையன் ன்னு தான் தோணுது..நாமா கேட்கணும் ன்னு நினைச்ச விஷயத்தை நாம கேட்குறதுக்கு முன்னாடி அவனே சொல்ல வந்தான் பாத்தியா..
அசோக் விடாம கால் பண்றான்.. ஆர்த்தி எடுக்க மாட்டிக்குறா..
மெஸேஜ் பண்றான்...இப்போ மட்டும் அட்டன் பண்ணல.. இனி நீ நினைச்சாலும் பேச முடியாத தூரத்துக்கு போய்டுவேன்..
ஆர்த்தி பயந்து போய் உடனே கால் பண்றா...
ஏன்ன டி நினைச்சுக்கிட்டு இருக்க... உன்னை விட்டு தர முடியாது சொல்றேன். கூல்லா மறந்துருன்னு சொல்ற.. நான் ஒன்னும் உன்னை டைம் பாஸ் க்கு லவ் பண்ணால புரிதா..
நான் ஒன்னும் உன்னை அப்படி சொல்லல..
பின்ன?? வேற எப்படி!! முழுசா கேளு ன்னு தானே சொன்னேன். கேட்டீயா நீ..
சாரி...சொல்லு..
ஒன்னும் தேவை இல்லை.. நான் வேண்டா தானே...போ போய் உன் மாமாவை யே கட்டிக்கோ... அதுக்கு தானே என்னை மறக்க சொல்ற..
அப்படி லாம் இல்ல டா...சாரி..நாமா நாளைக்கே கூட கல்யாணம் பண்ணிக்கலாம்... ப்ளீஸ்..புரிஞ்சுக்கோ.. நான் ஏன் அப்படி சொன்னேன் ன்னா நீ பெரிய பணக்காரன்..
ஹே... முதல்ல இப்படி பேசாத...
தொடரும்
1 Comments
Yean paathilaye to be continue potuteenga.... Story short 😔but nice😇
ReplyDelete