காதல் கண்ணாமூச்சி - 20
அர்ஜூன் அபியைப் பார்த்து வெட்கப்படுறான்.
அபிக்கு செமயா கோவம் தான் வருது..
டவலை நல்லா பிடிச்சுட்டு மறுபடியும் பாத்ரூம் உள்ள போய் நின்னுட்டு...கத்துறா..
யோவ்..உன்ன நான் வெளியே தானே வைட் பண்ணச் சொன்னேன்..நீ என்ன பண்ற இங்க ??
அர்ஜூன் : ( 💭💭இவ என்ன கத்துறா ?? ஓ.. ஒருவேளை கிஸ் பண்ணத்தான் இப்படி கோவப்படுறான்னு நினைக்குறேன்..).. எழுந்து பாத்ரூம் பக்கம் வரா..
அபி : போ..முதல்ல வெளியே போ..
அர்ஜூன் : அபி..நீ கொஞ்சம் வெளியே வந்தா எனக்கு வசதியா இருக்கும்..எனக்கு முன்ன பின்ன பண்ணி பழக்கம் இல்ல..சோ கொஞ்சம்...🙈🙈🙈
அபி : எதுக்கு ??
அர்ஜூன் : கிஸ் பண்ணத்தான்...
அபி : அச்சோ ராமா ன்னு அவ நெத்தியில அடிச்சுக்குறா ?? நீ எல்லாம் நிஜமாலும் ட்யூப் லைட் தான்..தெண்டம் தெண்டம்..உன்ன இருன்னு அவளே வெளியே வந்து அவன் முதுகுல கை வைச்சு கதவை திறந்துவிட்டு வெளியே தள்ளுறா !!
அர்ஜூன் : ஹே..என்ன டி இப்படி பண்ற?? இந்த ரூம்ல எனக்கு சேர் இல்லையா ??
அபி : இல்ல ?? ன்னு பட்டுன்னு க்ளோஸ் பண்றா..
என்ன தான் நம்ம மேடம் கோவப்படுற மாதிரி ஆக்ட் பண்ணாலும் இப்போ சிரிப்பை கன்ட்ரோல் பண்ண முடியலை..
எரும எரும.... இப்படி தான் கேட்டுட்டு பண்ணுவாங்களா ?? டக்குன்னு வந்து கிஸ் பண்ணுவான்னா ?? அதுவிட்டுட்டு இப்படி வா அப்படி வான்னு...லூசுன்னு ட்ரஸ் போடுறா..
அப்போ அவன் பாஸ்ல இப்படி ஒரு சம்பவம் லா நடக்கவே இல்லையா ?? 😍😍 அப்போ நான் தான் இவன் லைஃப் ல எல்லாமே பஸ்ட்....தேங்கஸ் கடவுளே !! அநியாயத்துக்கு நல்லவானா இருக்கான்..ஆனா என்ன சரியான மக்கு.
ன்னு நினைசீசுட்டு டோர் ஓப்பன் பண்றா..
அர்ஜூன் ப்ரியா கிட்ட பேசிட்டு இருந்தான்..
அபி : வந்து பாக்குறா ??
ப்ரியா அர்ஜூன் கிட்ட பாய் சொல்லிட்டு ஸ்கூல் க்கு கிளம்புறா..
அர்ஜூன் குற்ற உணர்ச்சில அபி முகத்தை பாக்க மா இருக்கான்.
அபி : என்ன ஆச்சு ??
அர்ஜூன் : சாரி.. நான் இப்படிலா ஓஸ்ட்டா இருந்தது இல்ல..நிஜமா நீ சும்மா சொல்றேன்னு தா நினைச்சு வைட் பண்ண..ரியலி சாரி.
அபி : 🙊🙊 ஹே..இங்க ஃபீல் பண்ற அளவுக்கு லா ஒன்னும் இல்ல.. ஓகே வா.. நான் உன்ன தப்பவே நினைக்கலை..
அர்ஜூன் : நீ சும்மா சொல்ற ?? நான் தா பாத்தேன்னே நீ எவ்வளவு கோவமா இருந்தான்னு...அதானால தானே நீயே உன் கையால தள்ளிவிட்ட..
அபி : அட லூசு.. நான் ஃபஸ்ட் நைட் வேண்டாம்னு சொல்லமலே இருந்து இருக்கலாம் போல இருக்கே.
அர்ஜூன் : ஏன் ??
அபி : ஆமா ?? நீ அன்னைக்கு மட்டும் எல்லாம் சரியா பண்ணப் போறீயா..போ டா...
அர்ஜூன் : ஏய் ?? நீ என்னை ரொம்ப இன்ஷல்ட் பண்ற டி..
அபி : ஹோ..அப்படியா சாரி..
அர்ஜூன் : ம்ம்..சேரி..சாப்பிடப் போலாமா ??
அபி : 🤨😠 போ போய் சாப்பிடு..
அர்ஜூன் : அதுக்கு ஏன் முறைக்குற ?? உனக்கு வேண்டாமா ??
அபி : வேண்டா..
அர்ஜூன் : ஏன் ??
அபி : பசிக்குல ??
அர்ஜூன் : சரி அப்போ நானும் அப்பறமா சாப்பிடுறேன்..
ஹே.. இப்போ தான் யாரும் இல்லையே ஐ லவ் யூ சொல்லேன்.
அபி : அதுலா சொல்ல முடியாது ன்னு கையை கட்டிட்டு முறைக்குறா ??
அர்ஜூன் : என்ன ஆச்சு டி..உட்காரு..
அபி : ஏய் ?? நான் அழகா இருக்கேன்னா??
அர்ஜூன் : உம்..சூப்பரா இருக்க..
அபி : உனக்கு பிடிச்சு இருக்கா..
அர்ஜூன் : பிடிக்கமலா ?? அடுத்த நாள் இன்னேரம் நாமா புருஷன் பொண்டாட்டி..😁😁😍
அபி : இப்ப வரைக்கும் ஒரு கிஸ் பண்ணி இருக்கீயா ??
அர்ஜூன் : 🙄🙄😳 நீ தான் விட மாட்டிக்குறீயே..
அபி : டேய்.. என்கிட்ட கேட்டுட்டு தான் பண்ணுவீயா..நீயா பண்ணணும் டா..உனக்கு உண்மையாவே லவ் இருந்து இருந்தா இன்னேரம் எத்தனை கிஸ் பண்ணி இருப்ப..
அர்ஜூன் : 😳😳 ஹே... ரொம்ப லவ் பண்றேன் டி..உன்ன பொண்ணு பாக்க வந்தேன் இல்ல அப்போ நிஜமா நா வேண்டாம்னு தா இருந்தேன்.
அபி : ஓ... இதுதான் சொன்னீயே.. ஒருவேளை கல்யாணத்தை நிறுத்துரப் ப்ளான் ல இருக்கீயா ?? அதனால தான் இப்படி இருக்கீயா ??
ப்ளீஸ் ப்ளீஸ் அப்படி ஏதாவது ப்ளான் இருந்தா சொல்லிரு.. எல்லார் முன்னாடியும் மானத்தை வாங்கிறாதா...ன்னு கெஞ்சுறா..
அர்ஜூன் : பேச வரதை அவ காதுலயே வாங்கமா பேசிட்டே போறா...என்ன பண்றதுன்னு தெரியமா அபியை இழுத்து அவ வாயில கையை வைக்குறான்.
😳😳
ஹே..அப்படிலா இல்ல டி..இந்த ஜென்மத்துல நீ தான் என் பொண்டாட்டி...
அபி : மெல்ல அவன் விரல்லை எடுத்து விட்டு....விரலை வைச்சதுக்கு பதிலா...
அர்ஜூன் : அடிங்கு...வேணும்னா வேணும்ன்னு டைரக்டா கேளு டி..
அபி : ம்ம்...
அர்ஜூன் : அப்போ!! இப்போ தரட்டா..
அபி : பேசியே டைம் வேஸ்ட் பண்ணாதா ??
அர்ஜூன் : ஆனா நீ ஐ லவ் யூ சொல்லையே..
அபி : 🤨😠😠 எனக்கு நீ ஒன்னும் தர வேண்டா..போ ன்னு கீழே போறா..
அர்ஜூன் : ஹே..கோச்சுக்காதா..தரேன் வா..
கணபதி : என்ன பா கேட்டா..
அர்ஜூன் : அது அது ??
அபி : ஆச்சோ !! இவன் வேற ஒரு அரிச்சந்திரன் அச்சே..உண்மையை சொன்னா என்ன ஆகும்..
ஹா அப்பா அது அவரோட போன் கேட்டேன்..அதா தரேன்னு சொன்னாரு.
கணபதி : எதுக்கு மா..அவரு ஃபோன் லா..அது தப்பு மா.
அர்ஜூன் : பா..தப்புச்சுட்டேன்..
இதுல என்ன மாமா இருக்கு...அவக்கூட லைஃப் சேர் பண்ண போறேன். ஃபோன் தர மாட்டேன்னா ?? இந்தா ன்னு தரான்.
அபி : பாஸ் வேர்டு..
அர்ஜூன் : இங்க வா ன்னு ஏதோ செட்டிங்ஸ் போறான்..அதுல அபியோட பிங்கர் ப்ரிண்ட் ஸ்பேஸ் லாக் செட் பண்றான்.
அபி : ம்ம்... தேங்க்ஸ்.
அர்ஜூன் : நமக்குள்ள எதுக்கு தேங்க்ஸ்..
அபி ஓப்பன் பண்றா ??
ஸ்கீரின் சார்ட்ல அபி ஃபோட்டோ தான் இருக்கு.
அப்படியே ஷாக் ஆகிட்டா..
அபி நம்பர் : டார்லிங் ன்னு சேவ் பண்ணி இருந்தான்.
அர்ஜூன் : என்ன பாக்குற ??
அபி : ஒன்னும் இல்ல..
அர்ஜூன் : கோவம் போய்டுச்சா ??
அபி : ம்ம்..
கௌசல்யா : வாங்க சாப்பிடுவீங்க..
எல்லாரும் சாப்பிட்டு முடிக்குறாங்க..
அர்ஜூன் போய் குளிச்சுட்டு வரான்.
நான் கிளம்பறேன் மாமா..
அபி : ஆமா ?? எனக்கு ஏதும் வாங்கிட்டு வரலையா ??
அர்ஜூன் : இல்ல ?? நான் தான் அவசரமா கிளம்பினேன் இல்ல..
அபி : ஹே..சேரி பாத்து போய்ட்டு வாங்க.. நாளைக்கு பாக்கலாம்.
அர்ஜூன் : ம்ம்..சேரி..
கௌசல்யா : வாசல் வரை போய்ட்டு வா அபி...
அபி : தெரியும் மா..
அர்ஜூன் கார்ல ஏறுறான்.
அபி : இந்தாங்க தண்ணீ பாட்டில்..ன்னு அவ கார் டோர்ல தலையை விட்டு உள்ள சீட்ல வைக்குறா..
அர்ஜூன் : ரொம்ப யோசிக்காதா டா டக்குன்னு கிஸ் பண்ணிடுன்னு..கண்ணை மூடிக் கிட்டு கிஸ் பண்றான்...
அபி : என்ன இது ??
அர்ஜூன் : கண்ணைத் திறந்து பாக்குறான்..
அவ காதுல கிஸ் பண்ணி இருக்கான்..
அர்ஜூன் : சோ..சாரி.. கண்ணை மூடிக் கிட்டு தந்தேன்னா...அதா மிஸ் ஆகிடுச்சு..
அபி : ராமா.. ரொம்ப கஷ்டம் சாமி உன்கிட்ட..பாத்து போய்ட்டு வாங்க..ன்னு பின்னாடி போறா..
போய்ட்டாளான்னு பாவமா வண்டியை ஸ்டார்ட் பண்றான்.
டக்குனு அபி வந்து கன்னத்துல கிஸ் பண்ணிட்டு ஓடி போறா..
அர்ஜூன் : 😳😳😳
அபி : ரோட்டை பாத்து ஒழுங்கா ஓட்டிட்டு போ டா..
அர்ஜூன் : எங்க ?? ன்னு கன்னத்துல கையை வைச்சுட்டு போறான்.
அவங்க வீட்டுல எல்லார் கிட்டயும் பேசி சந்தோஷமா இருக்காங்க..
அடுத்த நாள் காலையில அபி குடும்பமும் அர்ஜூன் குடும்பமும் அவங்க குலத் தெய்வம் கோவிலுக்கு வராங்க...
அங்க அர்ஜூன் அபி தனியா பேச டைம்மே கிடைக்கலை..
அங்க ஸ்ரீயா குட்டியை அபியே தான் தூக்கி வைச்சு இருந்தா.. அவளும் அபி கூட நல்லா ஒட்டிக்கிட்டா..
அர்ஜூன் அம்மா அபியோட அம்மா பொங்கல் வைச்சுட்டு இவங்களை கூப்பிடுறாங்க..சாமி கூம்பிட..
எல்லாரும் சாமி கும்பிட்டு... சாப்பிட்டு கிளம்புறாங்க..
அர்ஜூன் பாவமா பாக்குறான்..
அபி கால் பண்றேன்னு கை காமிச்சுட்டு போறா..
தொடரும்...
# Bhuvi
8 Comments
Super sis 😍 today episode ❤️iyoo Rama 😂😂athan highlight 😂😂😂😂😂
ReplyDeleteWow tdy episode veara lvl. 😍😍😍😘😘😘😘😘😘😍😍😍😍😘😘😘😘
ReplyDeleteSissy ma episode semma😆😆😆😆enoda husband kooda Arjun type dhaan...sonna puriyadhu konjam tubelight but Arjun maadhiri unmay vilambii
ReplyDeleteSuper story sister keep rocking all the best 😘😘😘😘😘😘😘😘
ReplyDeleteSprr sissy❤️ ayioo arjun sariyana tubelight thaa🤣🤣🤣😂😂semaa episode
ReplyDeleteSema story 😍😍😍😍
ReplyDelete😂😂😂😂😂😂 iyooooo arjunn🤣🤣🤣🤣🤣🤣🤣😁😁😁
ReplyDeleteEnna sis 19 episode kanum
ReplyDelete