ஏதேதோ எண்ணம் - 2
செழியன் தன் மனைவியை அவள் வேலை பார்க்கும் வங்கி வாசலில் இறங்கி விட்டு "Evening wait பண்ணு... நானே வந்து pickup பண்ணிக்கிறேன்..."என்று சொல்ல...
வேதா கண் இமைக்காமல் அவனையே பார்த்தாள்...
செழியன் சொடக்கிட்டு அவள் பார்வை வீச்சை தட்டு "என்ன பதிலையே காணோம்..."என்று கேட்க...
வேதா தலையை ஆட்டினாள்...
செழியன் சிறு புன்னகையுடன் கிளம்ப... அவன் போன திசையையே வெறித்து பார்த்தவளின் தோளில் யாரோ கை வைக்க...
அவள் உடன் வேலை பார்க்கும் ஆராதனா நிற்க... அருகில் அவள் காதலனும் வேதாவின் தோழனுமாகி மனோஜ் வாயில் bubblegum ஐ மென்று bubble விட்டவாறு அவள் பார்த்த திசையை பார்த்தான்...
"என்ன madam... என்ன பாக்குறீங்க..."ஆரா அவள் தோளில் இடிக்க...
"அவள் நோக்கினாள் ஆனா அண்ணல் நோக்க வில்லை..."மனோ சிரித்தவாறு சொல்ல...
வேதா தன் வைத்திருந்த கை பையை வைத்து மனோ வை அடித்து "சும்மாவே இருக்க மாட்டீங்களா..."என்று அவர்களை கடந்து செல்ல...
"நில்லு டி..."கத்தியவாறு ஆரா அவள் பின்னால் ஓட... மனோ pant pocket ல் கை வைத்து நிதானமாக சென்றான்...
ஆனா அவர்களுக்கு தெரியவில்லை அண்ணல் நோக்கியது...
செழியன் கிளம்பியதும் mirror வழியாக வேதா பார்த்து கொண்டே சென்றான்...
மூவரும் அவர்வர் counter ல் அமர்ந்தனர்...
இன்று ஏனோ செழியன் ஞாபகமே வந்தது...
இந்த ஒரு மாதத்தில் இது போல் எப்பவும் இருந்தது இல்ல...
ஆராவும் மனோவும் அவளை கவனித்து கொண்டே இருந்தனர்...
பெருமூச்சு விட்டு தன் வேலை தொடர் நினைத்தவள் ஏதோ ஞாபகம் வர...
வேகமாக தன் mobile ல் dial செய்து காதிற்கு கொடுத்தாள்...
********
அன்னம் &co...
அந்த பெரிய கட்டிடத்தில் தன் car ஐ park செய்து விட்டு உள்ளே நுழைந்தான்...
"Hi.. I'm பரணி...
Oops... Sorry பரணிதரன்...
எல்லாரும் என்னைய பரணி னு தான் கூப்டுவாங்க... நா அப்பா அம்மா...நா மட்டும் தான் இங்க இருக்கேன்... அவங்க ஊருல இருக்காங்க..." என்று New join girl ஒருத்தியிடம் வழிந்து கொண்டு இருந்தவன் சட்டை கொத்தாக பிடித்து இழுத்து சென்றான் செழியன்...
"டேய்... டேய்... டேய் விடு டா..."என்று அவன் காதில் மட்டும் விழும் மாறு சொல்லி "Excuse girl... See u later... Urgent meeting... I forgot... He's remember me..."என்று பரணி கத்த...
அந்த பெண் வாயில் கை வைத்து சிரிக்க...
செழியன் அவன் சட்டையில் இருந்து கையை எடுக்க...
பரணி நிலை தடுமாறி கீழே விழுந்தான்...
"கொடுமை டா உன்னோட... ஏன் டா இப்படி English ஹ கொலை பண்ற..."
பரணி இடுப்பில் பிடித்து கொண்டே எழுந்து " அட போடா... அந்த பொண்ணை பாக்க நல்லா இருக்கா... பேசி Correct பண்ணலாம் னு இருந்தேன்... நீ இழுத்துட்டு போகவும்... பதற்றத்துல ஏதோ உலரிட்டேன்..."என்று உடலை உலுக்கி விட்டு நிற்க...
"அப்போ... அப்போ என் தங்கச்சி..."
"டேய்..."என்று பரணி பதறி போய் "ஏன் டா... அது உன் தங்கச்சி டா... சுடர் இருக்கும் போது இப்படி பேசிறதா... என்னைய தப்பா நினைச்சுக்குவா டா..."
"என்ன தப்பா நினைப்பா..."
"ஏதோ அந்த நினைப்பு ல தான் நா அவ கூட பேசுறேன் னு நினைக்க மாட்டாளா... I'm very very decent guy..u know..."
"பரதேசி பரதேசி...என் cabinக்கு வா... நீயும் உன் English ம்..."என்று செழியன் தலையை அடித்து கொண்டு சென்றான்...
C.Chezhiyan Chakravarthy
MANAGING DIRECTOR
என்ற கதவில் பெயர் பலகை தொங்க...
செழியன் கதவை திறந்து உள்ளே நுழைந்தான்...
சிறிது நேரம் கழித்து பரணி உள்ளே வந்தான்...
"சொல்லு டா..."
"என்ன..."என்பது செழியன் புருவம் தூக்கி பார்க்க...
"நீ தானே டா வர சொன்ன..."அப்போது தான் அவன் முகத்தை உற்று பார்த்தான் பரணி...
அவன் முகத்தில் ஒரு பொலிவுடன் இருந்தது...
"என்ன டா மச்சான்... முகம் பிரகாசமா இருக்கு... தங்கச்சி ஏற்படுத்திய மாற்றமா..."
செழியனை அவனை முறைத்தாலும் முகத்தில் சிரிப்பை காட்டியது...
"இந்த முறைப்பு எல்லாம் என் கிட்ட வேணாம்...கடந்த இரண்டு வருட காலமாக இல்லாத ஒரு தேஜஸ் இப்ப இருக்கு...நிஜம்... நடந்தது என்ன..."
"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையா..."செழியன் system மை வெறிக்க...
பரணி அவன் அருகில் சென்று "ரெண்டு வருசத்துக்கு அப்புறம் உன் முகத்துல ஒரு சிரிப்பை பாக்குறேன் டா...அதுக்கு காரணம் வேதா... அது தான் என்னால் உறுதியா சொல்ல முடியும்..."அவன் தோளை தொட...
சிறிது மௌனத்திற்கு பிறகு "என்ன னு தெரியல டா... ஒரு மாசம் ரெண்டு பேரும் ஒரே வீட்டுல தான் இருக்கோம்... என்னைக்கும் இன்னக்கி அவ என்னைய என்னமோ பண்ணிட்டா...எப்பவும் அவ தான் காலைல சீக்கிரம் எழுந்து சமைச்சு நா எழுந்து வரும் போது coffee கொடுப்பா...இன்னக்கி அவ எழுந்திரிக்கல... ஆனா நா எழுந்துட்டேன்... அவ தூங்குமா போது அழகா இருந்தா... ஒரு கட்டில் தான் ஒரு மாசமா தூங்குறோம்... அவளை நா அப்படி ரசிச்சது இல்ல... என்னையவே அறியாம இந்த ஒரு மாசத்துல அவளை பிடிச்சு போச்சோ என்னமோ... நானே சமைச்சேன்...சரி கிளம்பலாம் னு roomக்கு வந்தேன்... எதிர் ல வந்தா... இவ்வளோ நேரம் தூங்கிட்டோமே னு சங்கடத்தோட அவ ஒரு பார்வை பார்த்தா பாரு... என்னமோ பண்ணுச்சு டா... Coffee வேணுமா னு கேட்டேன் sorry னு சொன்னா...அது சொல்லும் போது கூட அழகா இருந்துச்சு... எதுவும் பேசாம guest room ல போய் கிளம்பி வந்தேன்..,அப்போ..."என்று நக்கை கடித்து கொண்டு "நா tie சரியா கட்டல னு என் பக்கத்துல வந்து tie ய சரி பண்ணா... அவ என் பக்கத்துல இருக்கும் போது மூச்சு விட முடியல... தாலி கட்டும் போது தான் அவளும் நானும் பக்கத்துல பக்கத்துல இருந்தோம்... அதுக்கு அப்புறம் பக்கத்துல உட்கார்ந்து இருக்கோம்... அவ்ளோ நெருக்காம இருந்தது இல்ல..."என்று பரணியை பார்க்க...
அவன் கன்னத்தில் கை வைத்து கொண்டு அவனையே பார்த்தான்...
செழியன் அவனை பிடித்து உலுக்க...
அவன் சிரித்து கொண்டே "உன் சோலி முடிஞ்சு,.. நீயும் காதலில் விழுந்து விட்டாய்..."
"லூசு மாதிரி பேசாத டா..."
"ஓ... அப்படியா.. அப்போ இப்ப நீ பேசியதுக்கு என்ன அர்த்தம்.. அதன் பெயர் என்ன..."
அவன் தயங்கி "அது... அது நானும் அவளும் அவ்ளோ நெருக்கமா இருந்தது இல்ல னு சொல்ல வந்தேன்,.."என்று திரும்பி system மை பார்க்க...
"செழியா... நா ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ... வேதா உன்னோட past நினைச்சு தான் உன்னைய விட்டு விலகி நீ மனசு மாறனும் னு wait பண்றா... நீ பழசையே நினைச்சு வேதா வ விட்டுறாத... எப்படியும் நீ என்னைய ஏத்துக்குவ னு நம்பி தான் உன்னோட இருக்கா... அவ கூட வாழ்ற வழிய பாரு...உன்னால அவளை எத்தனை நாள் விலகி வைக்க முடியும்... உன்னால அவ வாழ்க்கை வீணா போயிட கூடாது... பாத்துக்கோ...உன்னோட கடந்த காலத்தை தெரிஞ்சு உன்னையே கல்யாணம் பண்ணிக்கிட்டா... என்னைக்காவது ஒரு நாள் எல்லாம் மறந்து அவளோட வாழ்க்கையை தொடங்குவ னு இருக்கா.. அவளோட நம்பிக்கை மட்டும் என்னைக்கும் பொய் ஆக்கிடாத..."அவனின் பதிலை எதிர்ப்பாக்காமல் சென்று விட்டான்...
செழியன் கண் முன் கடந்த கால நிகழ்வு வந்து சென்றது...தலை பாரமாக இருக்க...
தன்னிடம் ஏதோ ஒன்று குறைவது போல் உணர்ந்தான்...
தன் mobile சினுங்க...
Display name ஐ பார்த்ததும் முகம் மலர... எடுத்து காதில் வைத்து "சொல்லு வேதா..."
"ஏங்க... நீங்க specs போட தானே..."பதற்றதுடன் கேட்க
அப்போது தான் செழியனுக்கு ஞாபகம் வந்தது...
"ஆமா வேதா... மறந்துட்டேன்..."
"என்னங்க நீங்க... Specs போடலைனா உங்களுக்கு தலை வலிக்கும் ல...இப்படி தான் மறப்பாங்களா..."கவலையாக சொல்ல...
"சரி விடு... ஒரு நாள் தானே... நா adjust பண்ணிக்கிறேன்..."சாதரணமா சொல்ல..
"என்னை சொல்லனும்...நீங்க கிளம்பும் போது tie சரி பண்ணேன்... specs போட்டீங்களா இல்லையா கூட கவனிக்கல... உங்களுக்கு தலை வலி வந்தா தாங்க முடியாது... என்னைய என்ன பண்றது னு எனக்கே தெரியல.. "தன்னை தானே திட்டு சொல்ல...
"வேதா கொஞ்ச நேரம் தான்... Evening வீட்டுக்கு வந்ததும் போட்டுக்கிறேன்... சரியா...நீ எதுவும் நினைக்காம வேலைய பாரு...specs broken ஆனா என்ன பண்ணுவேன்... அப்படி நினைச்சுக்கிறேன்..."
"சரி நீங்க முத system பார்க்காதீங்க... வலி வந்துடும்... Tension ஆகாம relax இருங்க...mobile use பண்ண வேணாம்..."
"சரிங்க madam..."செழியன் சிரிக்க...
"எதுக்கு சிரிக்கிறீங்க..."
"ஒன்னும் இல்ல மா... நா எந்த வேலையும் பாக்கல... சரியா..."
"ம்ம்ம்..."வேதா call cut செய்ய...
"இன்னக்கி இவளுக்கு என்ன ஆச்சு..."செழியன் யோசனையில் இருக்க..
சிறிது நேரம் கழித்து கதவை திறந்து கொண்டு பரணி உள்ளே வந்தான்...
தொடரும்...
# nancy
1 Comments
Story intresting
ReplyDelete