ஏதேதோ எண்ணம் - 15
ஆரா மனோவுக்கு அலைப்பேசியில் அழைத்தாள்...
"ஹான் சொல்லு ஆரா..."
"டேய் எங்க டா இருக்க.."
"ஏன் டி..."
"டேய் இங்க செழியன் வந்து இருக்காரு டா... உன்னைய செழியனை பாத்துட்டு வர சொல்லி தானே அனுப்புனேன்..."
"செழியன் வந்தாரு அவ்ளோ தானே... இதுக்கு ஏன் இப்படி கத்துற..."
"கத்துறேனா அடேய்... சொன்ன வேலைய செய்யாம எங்க டா போன..."
"நா செழியன் கிட்ட பேசிட்டேன்... இப்ப வேற ஒரு விசயமே போயிட்டு இருக்கேன்... வந்து நா சொல்றேன்... அப்புறம் செழியன் என்ன பண்றாரு..."
"அவரு நேரா வேதா இருந்த room க்குள்ள போய் கதவை சாத்திக்கிட்டாரு..."
"நீ எதுவும் கண்டுக்காத.... நா வந்துடுறேன்... அப்புறம் சும்மா இருக்காம எதாவது சமைச்சு வை... நானும் வரேன்... செழியன் friend பரணியும் வருவாரு... எல்லாருக்கும் அங்க தான் சாப்பாடு..."
"ம்ம்ம்...ஏதே..."சுதாரித்து கேட்பதற்குள் மனோ தொடர்பை துண்டித்து விட...
ஆரா கடுப்பாகி அவனுக்கு தொடர்பை இணைக்க முயல... அவனிடம் இருந்தே அழைப்பு வர...எடுத்து காதில் கொடுத்து ஏதோ சொல்ல வாயை திறக்க...
"அடியேய் சமைக்காத டி.. தெரியாம சொல்லிட்டேன்... உனக்கு kitchen க்கு போறதுக்கே வழி தெரியாது... அவங்களை disturb பண்ணாம இரு... நா வரும் போது சாப்ட வாங்கிட்டு வரேன்..."சொல்லி தொடர்பை துண்டிக்க...
"டேய் idiot நீ இங்க தானே வருவ அப்போ இருக்கு..."அவனை மனதுக்குள்ளே திட்டு விட்டு sofa வில் அமர்ந்து கொண்டாள்....
***************
செழியன் அறைக்குள் நுழைந்ததும் கதவை சாத்தி கொண்டான்...
வேதா கட்டிலில் தூங்கி கொண்டு இருக்க..செழியன் மெதுவாக அவள் அருகில் சென்று அமர்ந்து அவள் முகத்தையே பார்த்தான்...
"அடியேய் என் பொண்டாட்டி உனக்கு ஏன் டி இவ்வளோ கோவம்...அதுவும் என் மேல... இந்தா வரேன்..."செழியன் அவள் நெருங்கி படுத்து அவளை தன்னோடு அணைத்து கொண்டு அவனும் உறங்கி போனான்...
***************
பரணி செழியன் அப்பா அம்மாவை பார்க்க சென்றான்...
செழியன் அப்பா சக்கரவர்த்தி பரணியை பார்த்ததும் "அடடே வா பா பரணி... என்ன பா இப்ப இந்த வீட்டுக்கு வழி தெரிஞ்சதா... என் நண்பன் இருந்தா மட்டும் தான் வீட்டுக்கு வருவீயா... எங்களை எல்லாம் பாக்க வர மாட்டியா... எங்களை மறந்துட்டல நீ...."சிறு வருத்தத்துடன் கேட்க...
"அய்யோ என்ன மாமா நீங்க... நா எப்படி மறப்பேன்... உங்க பையன் தான் free ஹ இருக்க விடவே மாட்றான்..
எதாவது வேலை வச்சுக்கிட்டே தான் இருக்கான்...என்ன பிள்ளை வளர்த்து வச்சு இருக்கீங்க..."என்றவனின் காதை பிடித்து திருகினார் சீதாலெட்சுமி...
"அத்த... அத்த..."பரணி கத்த...
"என்ன சொன்ன என் பையனை பத்தி..."சீதாலெட்சுமி இன்னும் அவன் காதை அழுத்தி திருக...
"அத்த வலிக்குது அத்த... நா பாவம் தானே..."அவன் பாவமாக பார்க்க...
சிரித்தவாறு காதை விட்டு "சாப்டியா பா..."என்று பாசமாக அவன் தலை முடியை கோத்தி விட...
பரணி பெருமூச்சு விட்டு "உங்களுக்காவது கேட்கனும்னு தோணுச்சே... காலைல இருந்து தண்ணி கூட குடிக்காம சுத்திக்கிட்டு இருக்கேன்..."சோகமாக சொல்ல...
"அப்படி என்ன சார் வெட்டி முறிச்சிங்க... சாப்டாம சுத்துறதுக்கு..."சக்கரவர்த்தி மேலும் கீழுமாக பார்த்து கேட்டிட...
"ஆமா வெட்டி தான் முறிச்சேன்... எல்லாம் உங்களால் தான்... என்ன வேலை பாத்து வச்சு இருக்கீங்க..."பரணி குரலை உயர்த்தி பேசிட..
சீதா பரணி கையை பிடித்து "என்ன பரணி இது... மாமா கிட்ட இப்படி தான் பேசுவீயா..."
"உங்களையும் சேர்த்து தான் சொல்றேன் அத்த... எதுக்காக இப்படி பண்ணீங்க அத்த..."
"டேய் பரணி உனக்கு என்ன டா பிரச்சனை..."கேட்டவாறு சக்கரவர்த்தி அவனை நெருங்க...
"அனன்யா பத்தி வேதா வீட்டுல நீங்க சொல்லலையா..."
இருவரும் அதிர்ந்தனர்...
********************
வேதா அப்பா சிவகுமார் வேலைக்கு சென்று விட... வேதா அம்மா மீனாட்சி மட்டுமே வீட்டில் இருந்தார்...
மனோ அழைப்பு மணியை அழுத்த... மீனாட்சி வந்து பார்த்து " வா யா மனோ... எப்படி இருக்க..."உள்ளே அழைக்க...
"நல்லா இருக்கேன் மா... நீங்க எப்படி இருக்கீங்க... அப்பா எங்க அப்பா நல்லா இருக்காரா..."
"அவரு வேலைக்கு போயிட்டாரு பா...வேதா கல்யாணத்துல பாத்தது..."
மனோ மெவிதாக சிரித்து வைக்க...
"உனக்கு எப்போ யா கல்யாணம்..."
மனோ வெட்கப்பட்டு கொண்டே "அதான் பொண்ணு இருக்கே... கல்யாணம் மட்டும் பண்ணனும்..."
மீனாட்சி காபி போட்டு எடுத்து வந்து "என்ன யா எதுவும் பிரச்சனை யா... வேதா இருந்தா தான் நீ வீட்டுக்கு வருவ... இப்ப வேதாவும் இல்ல... வேதா நல்லா இருக்கா தானே... அவ எங்க கிட்ட பேசவே மாட்றா...
எங்க மேல அவ்ளோ கோவத்துல இருக்கா... அப்படி என்ன நாங்க தப்பு பண்ணிட்டோம்... பெத்த பொண்ணுக்கு ஒரு கல்யாணத்த பண்ணி பாக்கனும் ஆசைப்பட்டது தப்பா... அவளோட ஆசைக்கு எதிரா நாங்க நடந்திருக்கோமா... இல்லையே... அவ காதலிச்ச பையனை கூட கல்யாணம் பண்ணி வைக்கிறோம்னு சொல்லிட்டோமே... அந்த பையன் இப்படி பண்ணுவான்னு யாரு நினைச்சா... அவனுக்காக இவ கல்யாணமே வேணாம்னு சொல்றது என்ன நியாயம்... வழுக்கட்டாயமா கல்யாணம் பண்ணி வச்சுட்டோம்னு எங்க கிட்ட பேசவே மாட்றா... என் கிட்ட பேச வேணாம்... அவ அப்பாவுக்கு வேதானா உசுரு... அவர் கிட்டையாவது பேசலாம்ல... கல்யாணம் பண்ணிக்க சொல்லி கட்டாயப்படுத்துனோம்... இருந்தாலும் அவ சொன்ன நிபந்தனைக்கு சரி தானே சொன்னோம்..."அழுதவாறு சொல்ல...
மனோ வேகமாக நிமிர்ந்து பார்த்து "சரி சொன்னீங்க அது சரி தான்...ஆனா அந்த விசயத்தை சரியா பண்ணீங்களா..."
மீனாட்சி புரியாமல் பார்க்க...
"செழியன் கிட்ட வேதாவோட காதல் தோல்விய பத்தி சொல்லனும்ங்குற தானே வேதாவோட நிபந்தனையா இருந்துச்சு... அது நீங்க பண்ணீங்களானு கேட்குறேன்..."
மீனாட்சி தயக்கத்துடன் பார்த்தவாறு "மனோ அது வந்து நாங்க மாப்புள கிட்ட"தடுமாற...
"சொல்லல அப்படி தானே..."
மீனாட்சி தலை குனிந்தார்...
"ஏன் மா இப்படி பண்ணீங்க...அதனால அவங்க ரெண்டு பேருக்கும் பிரச்சனை வரும்னு நீங்க யோசிக்கலையா...இப்ப வேதா செழியன் கூட சண்டை போட்டுட்டு என் flat ல தான் இருக்கா..."
மீனாட்சி அதிர்ந்து போனார்...
********
சீதாலெட்சுமி அதிர்ந்து நிற்க... சக்கரவர்த்தி நிதானமாக பரணியை வெறித்து "நாங்க உண்மைய மறைக்கல... அவங்க கிட்ட சொல்லிட்டோம்..."
"அப்புறம் எப்படி வேதாவுக்கு எதுவும் தெரியல..."
"அது நாங்களும் அவ அப்பா அம்மாவும் சேர்ந்து எடுத்த முடிவு தான்..."
"எது நீங்க எடுத்த முடிவா..."
சக்கரவர்த்தி வேகமாக எழுந்து "இப்ப என்ன பிரச்சினை... செழியன் எங்க..."
"மாமா செழி வேதாவ பாக்க போய் இருக்கான்..."
"வேதாவ பாக்கவா...ஏன் வேதா எங்க போனா..."சீதா கலவரத்துடன் கேட்டிட...
"அவ friend மனோ வீட்டுல இருக்கா..."
"என்ன பா சொல்ற... அவங்களுக்குள்ள எதுவும் சண்டையா..."சீதா பதற்றமாக
"நீங்க பண்ண வேலைக்கு அவங்க ரெண்டா பேரும் தான் சண்டை போட்டுக்கிட்டாங்க... செழியா வேதாவ அடிஞ்சுட்டான்....அவங்க தான் எல்லாத்தையும் மறைக்காம சொல்ல சொன்னாங்களே... எதுக்காக இப்படி பண்ணீங்க..."சற்று குரலை உயர்த்தி கேட்டிட...
சீதா அழதவாறு சக்கரவர்த்தியை பார்த்து "நா அப்பவே சொன்னேனே... நீங்க தான் கேட்கவே இல்லை...இப்ப பாருங்க அவங்களுக்குள்ள பிரச்சனை வந்துடுச்சு..."பதறி போய் சொல்ல...
சக்கரவர்த்தி பயணியை வெறித்து "அவங்க எங்க இருக்காங்க.... என்னைய அங்க கூட்டிட்டு போ..."என்றிட...
"இல்ல மாமா... நீங்க எதுக்காக உண்மைய சொல்லாம மறைச்சீங்கனு மட்டும் சொல்லுங்க அது போதும்... செழியா பாத்துக்கிறேன்னு சொல்லிட்டான்... எதுக்காக இப்படி பண்ணீங்க..."
சக்கரவர்த்தி அங்கே இருந்த சாய்விருக்கையில் அமர்ந்து "நாங்க வேதா கிட்டையும் அவ அப்பா அம்மா கிட்டையும் சொல்லனும் தான் நினைச்சோம்... முத வேதாவோட அப்பா அம்மா கிட்ட அனன்யா பத்தி சொன்னோம்... அவங்களும் வேதா பத்தி அவளோட கடந்த காலத்தை பத்தி சொன்னாங்க..."என்ற அவரின் பேச்சை வெட்டி "வேணாம் மாமா... வேதாவோட காதல் பத்தி தெரியும்... நீங்க ஏன் இந்த முடிவு எடுத்தீங்க அத சொல்லுங்க... அவங்க சண்டைய அவங்க பாத்துக்குவாங்க..."என்றிட...
சக்கரவர்த்தி பெருமூச்சு விட்டு "வேற எந்த காரணமும் இல்லை... அவங்க அவங்க கடநாத காலத்தை நினைச்சு அவங்க வாழ்க்கையை கெடுத்துக்க வேணாம்னு தான் நாங்க சொல்லல... அவங்கள பொறுத்த வரைக்கும் எல்லாமே அவங்களுக்கு தெரியும்... ஆனா தெரியாது... அவ பத்தி எதுவும் பேச மாட்டாங்க... அவனை பத்தி அவளுக்கு தெரியும் அவளை பத்தி அவனுக்கு தெரியும்னு நினைச்சு அவங்க வாழ்க்கையை வாழ தொடங்கிடுவாங்க... அதுக்காக இப்படி பண்ணோம்... வேதாவோட காதல் தோல்விய பத்தியும் தெரியும்... எங்களுக்கு செழியனை பத்தியும் தெரியும்... செழியன் இத ஒரு பெரிய விசயமாக எடுத்துக்க மாட்டான்... அந்தக் நம்பிக்கையில் தான் நாங்க இப்படி பண்ணோம்..."
பரணி எதுவும் அமைதியாக தலை குனிந்து இருந்தான்...
"சொல்லு பா...நாங்க பண்ணது தப்பா..."
பரணி நிமிர்ந்து இருவரையும் பார்த்து "இது தப்பு இல்ல... செழியனை பத்தி எங்களுக்கு தெரியும்னு சொன்னீங்களே...செழியனை பத்தி தெரிஞ்ச உங்களுக்கு ஏன் சுடரொளிய பத்தி தெரியல... புரிஞ்சுக்கல..."கேள்வி எழுப்பிட...
இருவரும் புரியாமல் விழித்தனர்...
தொடரும்...
1 Comments
Story poduga
ReplyDelete