ஏதேதோ எண்ணம் - 6
முதலில் சுதாரித்த வேதா தன் விழியை தாழ்த்த... செழியனும் அவள் முகத்தில் பதிந்து இருந்த அவன் பார்வையை விலகி கொண்டு எழுந்து அறையை விட்டு வெளியே வந்து bike key எடுத்து கொண்டு வெளியே செல்ல...
வேதா அவன் போவதையே பார்த்து பால்கனியில் இருந்து எட்டி பார்க்க...
செழியன் bike ல் வேகமாக சென்றான்...
வேதா கண் கலங்கி கட்டில் படுத்து கொண்டாள்...
இன்று முழுவதும் செழியனின் ஞாபகமே அவளை பாடா படுத்தியது...
சுவற்றில் தொங்கிய அவனின் புகைப்படத்தை சென்று தடவி"ஏன் செழியன் என்னைய விட்டு விலகி போறீங்க... நா தான் தப்பு பண்ணேன்... நீங்க இல்லையே... என் தப்பு தான்... நா கல்யாணமே பண்ணி இருக்க கூடாது... அவனையும் மறக்க முடியாம உங்களை ஏத்துக்கவும் முடியாம இருக்கேன்... நா பாடுன வரி அவனை மனசுல வச்சுக்கிட்டு தான் நாடு இருக்கேன் னு நீங்க நினைச்சு இருப்பீங்க... சத்தியமா சொல்றேன் செழியா அவனை நினைச்சு நா பாடல..."அழுது புலம்பினாள்...
எங்கே செல்வது என்று தெரியாமல் பாதை போன போக்கில் தன் bike ஓடினான்...
அவன் கண் கலங்கி இருந்தது... ரோட்டு ஓரத்தில் வண்டியை நிறுத்தினான்...
"ஏன் வேதா அப்படி பாடுன... நா உன்னைய ஏத்துக்காம போயிடுவேன் னு நினைச்சீயா...என் வாழ்க்கையில உன்னையே தவிர வேற யாருக்கும் இடம் இல்ல... என் வாழ்க்கையிலா வந்த முத பொண்ணு நீ தான்... நீ மட்டும் தான் வேதா... இருந்தாலும் என்னால என் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை மறக்க முடியல... உன் கூட சேர்ந்து வாழனும் ஆசை தான்... ஆனா அந்த சம்பவம் என்னைய தடுக்குது... நானும் மறக்கனும் தான் நினைக்கிறேன்... ஆனா முடியலையே... உனக்கு என்னோட காதலை அள்ளி கொடுக்கணும் டி...நீ இன்னும் உன்னையே ஏத்துக்கல னு மனசுல வச்சுக்கிட்டு தானே நீ பாடுன... என்னால உன் பார்வை பார்க்க முடியாம திணறி போய் தான் நீ அங்கே இருந்து வந்துட்டேன்...என்னைய தப்பா நினைக்காதே வேதா..."மனதுக்குள் மருகினான்...
"செழியா..."
அவன் திரும்பி பார்த்து அங்கே நின்று உருவத்தை புருவம் சுருக்க பார்த்தான்...
*******
நேரம் கழிய...
செழியன் வீட்டிற்கு வந்து அறைக்குள் நுழைய வேதா உறங்கி போய் இருந்தாள்...
அவள் அருகில் சென்று பார்த்தான்...
எவ்வளவு நேரம் அழுதாளோ அவன் விழியில் இருந்து வலிந்த கண்ணீர் காய்ந்து கோடாக தெரிந்தது...
அவள் முகத்தில் விழுந்திருந்தத முடியை ஒதுக்கி காதுக்கு பின்னால் அடங்கி வைக்க... அது அடங்காமல் மறுபடியும் அவள் முகத்தில் விழுந்தது...
அவன் உதடு சிறிது விரிய... அவள் முகத்தில் தன் மூச்சு காற்றை மெதுவாக ஊத...அவள் முகம் சுருக்கினாள்...
அவளை உற்று பார்த்து "எனக்காக அழுதீயா டி நீ..."கண்ணீர் கோடு விழுந்த கன்னத்தை தடவ...
அவள் மெதுவாக அசைந்தாள்...
"இனிமே நீ நான் டி எனக்கு எல்லாம்... இனி உன்னையே எப்படி எல்லாம் சித்திரவதை பண்றேன் னு யாரு டி என் பொண்டாட்டி"அவள் அருகில் படுத்து அவள் தூக்கம் கலையாதவாறு தன்னோடு அணைத்து தூங்கினான்...
காலையில் அரை தூக்கத்துடன் எழ முயற்சித்து தோற்று போய் கண் விழுந்து பார்க்க...
வேதா செழியனின் மார்பை தலையணையாக கொண்டு படுத்திருக்க... அவன் கை அவளை அணைத்து இருந்திருந்தது...
அவனை இவ்வளோ நெருக்கத்தில் அவள் பார்த்தது இல்லை... அவனுடனான நெருக்கம் அவளை ஏதோ செய்தது...
அவனை விட்டு விலகி முடியாமல் நெளிய...அதில் அவன் தூக்கம் கலைவது போய் இருக்க... அசையாமல் இருந்தாள்...
அவன் திரும்பி அவள் இடையோடு வளைத்து அணைத்து கொண்டு தூக்கத்தை தொடர...
அவன் செயலில் விழி விரிய... அவள் இதயம் படப்பட என வேகமாக அடித்தது...
அவளின் மூளை அவனை விட்டு விலகி சொன்னாலும் அவள் மனம் விலகாதே என்றது....
இருந்தும் அவனிடம் இருந்து விலக முயற்சித்து தோற்று போனாள்...
"அச்சோ இன்னக்கி ஏன் இவரு இப்படி பண்றாரு... கண்ணு முழிச்சா என்ன நினைப்பாரோ..."மனதுக்குள் புலம்பினாலும் அவனின் நெருக்கம் அவளுக்கு பிடித்திருந்தது...
நேரம் ஓடி கொண்டே இருக்க... அவன் எழுவதாகவும் தெரியவில்லை... அவளை விடுவதாகவும் தெரியவில்லை...
அவள் தலையை மட்டும் உயர்த்தி அவன் முகத்தில் ஊத... அவன் மெதுவாக அசைந்து அவளிடம் இருந்து விலகி சற்று திரும்பி படுக்க...வேதா அவனிடம் இருந்து விலகி வேகமாக எழுந்து பெருமூச்சு விட்டாள்...
அவனின் தொடுதல் அருகாமையை நிலைமை வெட்கப்பட்டு குளியல் அறைக்குள் தன்னையே நுழைத்து கொண்டாள்...
காலை கடனை முடிந்து வெளியே வர... செழியன் இன்னும் தூங்கி கொண்டு இருந்தான்...
சமைத்து முடிந்து அறைக்குள் நுழைய... இன்னும் தூக்கத்திலே இருந்து எழாமலே இருந்தான்...
"என்ன இவரு இன்னும் தூங்குறாரு..."நினைத்து கொண்டு குளிக்க சென்றாள்... குளித்து சேலையை அரைகுறை மேலே சுத்தி கொண்டு வெளியே வந்து அவனை பார்த்து கொண்டு சேலையை கட்டி தலையில் துண்டை சுத்தி கொண்டு சமையல் அறைக்கு சென்று அவனுக்கு coffee எடுத்து வந்து side table வைத்து விட்டு தலையில் இருந்த துண்டை அவிழ்த்து தலை முடியை துவட்டி கொண்டு அவனை எழுப்பினாள்...
"என்னங்க... என்னங்க... எழுந்திரிங்க...ஏங்க..."அவன் மார்பில் கை வைத்து உலுக்க...
செழியன் அவள் கையை பிடித்து இழுக்க...வேதா தடுமாறி அவன் மேல் விழுந்தாள்...
அவன் மேல் விழுந்ததில் செழியன் கண் விழித்து பார்க்க... வேதம் அவன் நெருக்கத்தில் இருந்தாள்...
அவள் பார்வை பயத்திலும் பதற்றத்திலும் இருந்தது...
இமை இமைக்க மறந்து இருவரும் பார்த்து கொண்டனர்...
Calling Bell அடிக்க...
வேதா வேகமாக அவனை விட்டு விலகி வெட்கத்துடன் வெளியே ஓடினாள்...
"யார் இந்த கரடி னு தெரியலையே..."பல்லை கடித்து கொண்டே வெளியே வந்தான் செழியன்..,
வேதா கதவை திறக்க... புன்னகையுடன் பரணி நின்றான்...
"வேதா..."
"வாங்க அண்ணா..."
"இதோ வரேன்..."உள்ளே நுழைய... செழியன் வெளிய வர... அவனை பார்த்ததும் "டேய் மச்சி..."கத்த...
செழியன் அவனை முறைத்து கொண்டு "நீ தான் அந்த கரடியா...இன்னக்கி உன்னை நசுக்கிடுறேன்..."முனுமுனுக்க...
"அண்ணா டீ இல்ல காபி..,"
"அவனுக்கு அந்த பழக்கம் இல்லை..."செழியன் பரணி தோளில் கை போட்டு அருகில் அமர்ந்து முறைத்தவாறு சொல்ல...
"என்னது எனக்கு இந்த பழக்கம் இல்லையா... நா ஒரு டீ பைத்தியம் ஆச்சே... மூச்சுக்கு முண்ணூறு தடவை டீ குடிப்பேனே..."நினைத்து கொண்டு அவனை பார்க்க...
செழியன் முனைப்பை பார்த்து "அய்யய்ய என்ன முறைக்கிறான்... ஏதோ பண்ணிட்டோமோ...rightuuu டேய் பரணி உன் உசுருக்கு இன்னக்கி உத்தரவாதம் இல்ல... உனக்கு இன்னைக்கி சங்கு தான்...இது தெரிஞ்சு இருந்தா வரும் போது கடைசியாக என் அம்மா அப்பா வ பாத்துட்டு வந்து இருப்பேனே"மனதுக்குள் புலம்பினான்...
"என்ன அண்ணா நீங்க டீ காபி குடிக்க மாட்டீங்களா..."
"ச..ச... அப்படி இல்ல மா... நா குடிப்பேன்... இந்தப் சாப்டுற நேரம் ல அது தான்..."செழியனிடம் இருந்து விலகி அமர....
செழியன் விடுவதாக தெரியவில்லை... அவன் நெருங்கி அமர...
"சோலி முடிஞ்சு... தெரியாம வந்து மாட்டிக்கிட்டோமோ..."பரணி யோசிக்க...
"சரி வாங்க அண்ணா சாப்டலாம்..."வேதா தலை முடியை கொண்டை போட்டு முந்தானைய எடுத்து இடுப்பில் சொருகி கொண்டு திரும்ப...
"கொஞ்ச wait பண்ணு வேதா... நா குளிச்சுட்டு வந்துடுறேன்... ஒன்னா சாப்டலாம்..."பரணியை பார்த்து "wait பண்ணு மச்சி வரேன்.."பல்லை கடித்து கொண்டு அவன் முதுகில் அடித்து விட்டு அறைக்கு நுழைய...
"அண்ணா இருங்க வந்துடுறேன்..."வேதாவும் செழியன் பின்னாடியே செல்ல...
பரணி அவள் உள்ளே சென்று விட்டதை அறிந்து கொண்டு செழியன் அடித்த இடத்தை தடவி கொண்டு நெளிந்து "தப்பான நேரத்துல வந்துட்டோமோ... இப்படி வந்து சிக்கிட்டீயே யா பரணி...பேசாம இப்படியே எழுந்து ஓடிடலாமா... வேணாம்... இதுக்கும் வந்து office ல வச்சு செய்வான்...இங்கேயே மொத்தமா வாங்கிட்டு போயிடுவோம்..."புலம்பி கொண்டு இருக்க
செழியன் குளிக்க துண்டை எடுக்க...
"ஏங்க..."வேகமாக ஓடி வந்தாள் வேதா...
"ஏ...எதுக்கு இப்படி ஓடி வர..."
"உங்களுக்கு coffee எடுத்து வந்தேன்... அங்க இருக்கு..."கை காட்ட...
"குளிச்சுட்டு வந்து சாப்ட போறேன்...எதுக்கு coffee..."
வேதா முகம் சுருங்க...
"சரி அது எடு..."
வேதா எடுத்து வந்து அவனிடம் நீட்ட... செழியன் வாங்கி குடித்து கொண்டு அவளையே பார்த்தான்...
பாதி குடித்து விட்டு "போதும் வேதா... மீதிய நீயே குடி..."அவள் கையில் கொடுத்து வேகமாக குளியலறைக்குள் தன்னை நுழைத்து கொண்டான்...
வேதா புரியாமல் சாத்திய கதவையும் coffee யும் மாறி மாறி பார்த்து தன் உதட்டை நாக்கால ஈரப்படுத்தி விட்டு எச்சிலை விழுங்கி கொண்டு செழியன் குடித்த கொடுத்த coffee யை குடித்தாள்...
ஒற்றை கண் மட்டும் பார்க்கும் அளவிற்கு கதவை திறந்து செழியன் அவள் தன் எச்சில் பட்ட coffee குடிப்பதை பார்த்து புன்னகைத்து விட்டு "இனி உன்னைய என்னென்ன பண்ண போறேன் னு பாரு டி என் பொண்டாட்டி..."என்று கதவை சாத்தி கொண்டான்...
தொடரும்...
# nancy
1 Comments
Super 😍😍🥰🥰
ReplyDelete