ஏதேதோ எண்ணம் - 12
கதிரவனின் ஒளி வீச்சால் கண் விழித்த செழியனுக்கு தலை பாரமாக இருந்தது...
தலையை அழுத்தி பிடித்துக் கொள்ள... நேற்று நடந்த விசயம் சீரற்ற காட்சியால் கண்ணில் தோன்றி மறைந்தது...
எழுந்து அமர்ந்து போது தான் வெற்றுடம்புடன் இருப்பது தெரிய... அறை முழுவதும் பார்வையை சுழற்றினான்...
அறையின் ஒரு ஓரத்தில் சுவற்றோடு ஒட்டியவாறு கால் ஐ குறுக்கி கொண்டு படுத்த இருந்த வேதாவை பார்த்தான்...
கிழே கிடந்த pant அணிந்து கொண்டு வேதாவை நெருங்கினான்...
"வேதா... வேதா இங்க எதுக்கு படுத்து இருக்க... வேதா எழுந்திரி..."அவளை எழுப்பி முயல...
கண் விழித்த வேதா செழியனை பார்த்ததும் அனலாய் பார்வை அவன் மீது வீச்சு எழுந்து அமர்ந்தவள் தன் கோவத்தை எல்லாரும் ஒன்று திரட்டி தன் கைகளுக்கு கொண்டு வந்து அவனை பிடித்து தள்ளி விட்டாள்...
சரியாக அமராமல் இருந்த செழியன் அவளை தள்ளிய வேகத்தில் தடுமாறி விழுந்தான்...
"வேதா..வேதா என்ன ஆச்சு..."அவன் பயந்து போய் பதற்றதுடன் எழுந்து அவளை நெருங்க...
சுவரோடு ஒட்டி கால் ஐ கட்டி கொண்டு வேதா "கிட்ட வராத... போயிடு... என்னைய தொட்டா நா உயிரோடவே இருக்க மாட்டேன்... என் கண்ணு முன்னாடி இருக்காத... உன்னையே பாக்கவே அருவருப்பா இருக்கு... வெளிய போ டா..."கத்திட...
செழியன் ராத்திரி நடந்தது ஞாபகம் வர...
அவள் விருப்பமின்றி அவளை தொட்டதால் அவள் கோவத்தில் இருப்பதாக நினைத்தான்..
"வேதா மா... தயவு செய்து நா சொல்றத கேளு... நா வேணும் னு..."
வேதா காதை பொத்தி கொண்டு "போதும்... நீ எதுவும் சொல்ல வேணாம்... உன் அரிப்பை தீர்த்துக்க என்னைய நீ use பண்ணிக்கிட்ட... தாலி கட்டிட்டா நீ புருஷன்ங்குற உரிமைய எடுத்துக்குவீயா... ச்சீ நீ எல்லாம் என்ன ஜென்மம் டா... பொறுக்கி... உன் கூட ஒரே room ல இருந்தேன் நினைக்கும் போது எனக்கே அருவருப்பாக இருக்கு...உன்" அடுத்த வார்த்தை பேசும் முன் அவள் கன்னத்தில் அவன் விரல் பதிந்து இருந்தது...
அவ்ளோ நேரம் அவள் பேசியதை கேட்டு அவன் அடுத்த வார்த்தையை கேட்டு இருந்தால் இந்த பிரிவு அவர்களுக்கு இருந்திருக்காது...
செழியன் விரல் நீட்டி "ஒழுங்கு மரியாதையா இரு... தப்பு என் மேல இருக்குறதால பொறுமையா இருந்தா என்ன டி over ஹ பேசுற... யாருக்கு டி அரிப்பு... ஏன் நீ நினைச்சு இருந்தா நா உன்னையே தொட்டப்பவே இப்ப தள்ளி விட்டு நீ அப்போ தள்ளி விட்டு இருக்கலாம் ல... ஏன் பண்ணல... அப்போ அமைதியா இருந்துட்டு இப்ப என்ன டி... அருவருப்பா இருக்கா... நா போதைல இருந்தேன் தான்... நீ என் பொண்டாட்டிங்குறதால தான் டி உன்னையே தொட்டேன்... நா போதைல தொட்டு இருந்தாலும் நீ வேணாம் டா ஒரு வார்த்தை சொல்லி இருந்தாலும் நா விலகி போயிடு இருப்பேன்... ஏன் டி நீ என்னைய விலக்கல...நா தொட்டது உனக்கு பிடிச்சு இருந்துச்சு தானே..."
வேதா காதை பொத்தி கொண்டு அழ...
" இப்ப எதுக்கு டி காதை பொத்துற...ஆமா டி நா பொறுக்கி தான்... என்னோட உணர்வை அடக்க முடியாம தான் நா உன் கிட்ட வந்தேன்... எவளோ ரோட்டுல போறவக்கிட்டையோ இல்ல prostitute கிட்டையோ போக தெரியாது... இந்த புருஷங்கார பொறுக்கி அவன் பொண்டாட்டிக்காரி கிட்ட தானே டி போனான்... அது எப்படி ஒரே room ல ஒன்னா இருந்தத நினைச்சா அருவருப்பா இருக்குல உனக்கு... உன் கூட இருந்த இந்த ரெண்டு மாசத்துல உன் முகத்துக்கு கீழ் என் பார்வை போய் இருக்குமா டி..."
வேதா கண் கலங்கி சிவந்து போய் கோவமாக அவனை முறைத்தாள்...
"ஆமா டி... நா குடிக்காரன் தான்... போதை ல எவளோ ஒருத்தி கூட படுக்கல... என் பொண்டாட்டி கூட தான் படுத்தேன்...எனக்கு இதுல ஒன்னும் தப்பா தெரியல... எப்போ நம் என்னைய பொறுக்கி னு சொன்னீயோ இனி உனக்கு தினமும் சித்திரவதை தான் டி...நா தான் உன் புருஷன் னு அடிக்கடி காட்டுவேன்... உன்னால என்ன டி பண்ண முடியும்...இனிமே இந்த செழியன் யாரு நீ காட்றேன்..."ஒரு மூலையில் இருந்த தன் t shirt எடுத்து மாட்டி கொண்டு வெளியே சென்றான்...
அசைவற்று அமர்ந்திருந்த வேதா கண்ணில் கண்ணீர் மட்டுமே வழிந்தது...
Sofa வில் கையை கட்டி அமர்ந்திருந்த பரணியை வெளியே வந்த செழியன் பார்த்து அப்படியே நின்று விட...
செழியனை நெருங்கிய பரணி அவன் தோளை தொட... செழியன் நிமிர்ந்து பார்த்து அவனை கட்டி கொண்டான்.,.
Park ல் செழியன் கோலத்துடன் அமர்ந்து இருக்க... பரணி ரெண்டு cup டீ வுடன் அவன் அருகில் அமர்ந்தான்...
பரணி அவனிடம் ஒரு cup ஐ நீட்ட... செழியன் வாங்காமல் இருக்க...
பரணி stone bench ல் வைத்தா விட்டு டீ யை குடித்தான்...
"அப்படி நா என்ன டா தப்பு பண்னேன்..."செழியன் கத்த...
அவர்களை கடந்து நடைபயிற்சி இருந்தவர்கள் திரும்பி பார்த்து சென்றனர்...
பரணி அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு டீயை குடிக்க...
"அவ என்ன யாரோ ஒருத்தியா... என் பொண்டாட்டி தானே டா... அவளை தொட எனக்கு உரிமை இல்லையா..."
நடைபயிற்சகயில் இருந்தவர்கள் அவனை விசித்திரமாக பார்த்து செல்ல...
பரணி நிதானமாக " இப்ப எதுக்கு கத்துற..."
" ஆமா டா.. நா கத்துற மாதிரி தான் இருக்கும்... அவ என்னைய..."செழியன் ஏதோ சொல்ல வர... பரணியின் பார்வையில் அமைதியானான்...
"உங்களுக்கு முன்னாடியே நா எழுந்துட்டேன்... கிளம்பலாம் னு தான் நினைச்சேன்... ஆனா சொல்லாம போனா வேதா கோச்சுக்குவா னு இருந்தேன்... எல்லாம் கேட்டுட்டு தான் இருந்தேன்... நீ அவளை அடிச்சு இருக்க கூடாது டா..."
"அவ என்ன பேசுனா னு கேட்ட தானே டா... நா... நா... "வார்த்தை திணற கண் கலங்கி "நா என்ன உடம்பு அலையுறவனா டா... அரிப்பெடுத்து நா அவ..."அதற்கு மேல் வார்த்தை வராமல் தலை குனிந்து அழ...
பரணி அவனை தன்னோடு அணைத்து கொண்டான்...
அவனை விட்டு விலகிய செழியன் "வேதா ஏன் டா அப்படி சொன்னா... வேதாவ எனக்கு ரொம்ப பிடிக்கும் டா... உனக்கே தெரியும் அனன்யா நினைப்புல நா எவ்ளோ கஷ்டப்பட்டேன்... ஏன் அவளுக்கே தெரியும் டா... கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லாத்தையும் தெளிவா சொல்லி தானே கல்யாணம் பண்ணது... ரெண்டு வருஷமா அனன்யா நினைப்புல இருந்து வெளிய வர முடியாம இருந்தேன்... ஆனா வேதா ரெண்டே ரெண்டு மாசத்துல அனன்யாவ மறக்க வச்சுட்டா டா...அவ ஏன் டா என்னைய புரிஞ்சுக்கல..."வருத்ததுடன் கேட்க...
"டேய் யாரு டா நீ... வேதா உன்னையே புரிஞ்சுக்கல னு நீயா நினைச்சுக்காத... நேத்து நீ பண்ண கூத்துக்கு வேற யாரா இருந்திருந்தா கோவப்பட்டு இருப்பாங்க.. ஆனா வேதா அப்படி பண்ணல... நீ நிதானமே இல்லாம car இருந்து இறங்கும் போது வேதா உன் மேல கோவப்படுவானு நினைச்சேன்... ஆனா இல்ல டா இருந்தாலும் கொஞ்சம் கோவப்பட்டா தான்... ஆனா வெளிய காட்டிக்கல... போதை ல சின்ன பையன் மாதிரி நடந்துக்கிட்ட அவளும் உன்னையே குழந்தை மாதிரி பாத்துக்கிட்டா..."
மௌனத்தை கொண்டார்ந்து அமர்த்தி வைத்தான்...
சிறிது நேரம் கழித்து அந்த மௌனத்தை பரணி கலைத்து தயக்கத்துடன் "நா இதை பத்தி பேச கூடாது தான்... இருந்தாலும் நீ புரிஞ்சுக்கனும் தான் சொல்றேன்... எனக்கு தெரிஞ்சு வேதா நீ.. நீங்க ரெண்டு..."அதற்கு பேச முடியாமல் ஒரு நொடி நிறுத்தி விட்டு "அதுக்காக வேதா உன் கிட்ட கோவப்பட்டு இருக்க மாட்டா...வேற ஏதோ நடந்து இருக்கு... நீ கை நீட்டி இருக்க கூடாது... பொறுமையா பேசி இருக்கனும்..."
"என்ன டா பேசுற...அவ என்ன சொன்னா னு உனக்கு தெரியும் தானே... அப்புறம் எப்படி டா அதுக்காக கோவப்பட்டு இருக்க மாட்டானு உறுதியா சொல்ற...அவ என்ன பேசுனா னு நீயும் கேட்ட தானே..."
"ஆமா செழி.... ஆனா ஏதோ நடந்து இருக்கு... நல்லா யோசிச்சு பாரு டா..."
"என்ன டா நா யோசிக்கனும்...என் பொண்டாட்டிங்குற உரிமைல தொட்டா தப்பா... அத தவிர நா வேற எதுவும் பண்ணல டா..."
"பண்ணல னு சொல்றீயா இல்ல ஞாபகம் இல்லைனு சொல்றீயா..."
"ஞாபகம் இல்ல னு கூட வச்சுக்கோ டா..."
" அது தான் டா உண்மை..."
செழியன் அவனை முறைக்க...
"இந்த முறைப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை... அந்த நாலு சுவத்துக்குள்ள நடந்தது உனக்கும் வேதாவுக்கும் மட்டும் தான் தெரியும்... உனக்கும் ஞாபகம் இல்ல... மீதி இருக்குறது வேதா மட்டும் தான்... வேதா கிட்ட கேட்டா தான் என்ன னு தெரியும்...போ போய் வேதா கிட்ட கோவப்படாம கேளு... அவ கோவப்பட்டு இருக்கானா நீ தான் தப்பு பண்ணி இருக்க... நீ பண்ண தப்பை சரி செய்யனும் னா நீ தான் நிதானமா போகனும்... புரிஞ்சு நடந்து பிரச்சனையை சரி செய்ய பாரு செழி..."
செழியன் எதுவும் பேசாம எழுந்து வேகமாக செல்ல... பரணி நிதானமாக பின் தொடர்ந்தான்...
தொடரும்...
# nancy
2 Comments
Akka daily story Podunga.... Daily vanthu pakkura.... Aana varala.... Please... I like your all storys...
ReplyDeleteStory poduga
ReplyDelete