ஏதேதோ எண்ணம் - 18 (இறுதி பாகம் )

அவன் கண்ணில் கண்ணீர் இல்ல... அவன் தோளில் சாய்ந்து இருந்தவளின் கண் சுவற்றை வெறித்து பார்த்தது...

"வேதா..."

அவனின் அழைப்பில் நிமிர்ந்து பார்த்தாள்...

அவள் கண்ணை பார்த்தான்...

"நா அழுவமாட்டேங்க... அவனுக்காக அழுது அழுது என் கண்ணீரே வத்தி போச்சு... பணத்துக்காக என்னைய விட்டுட்டு போயிட்டான்... அவன் தான் வேணும் னு நா சொல்லல... ஆனா அவனை இந்த பாழா போன மனசுல நினைச்சுட்டேன்... அவனை மறக்கனும் நினைச்சா கூட அவன் ஞாபகம் வந்துக்கிட்டே தான் இருக்கு... அதுக்கு தான் எனக்கு அவகாசம் தேவைப்பட்டுச்சே தவிர... அவனுக்காக நா கல்யாணம் வேணாம்னு சொல்லல...அவனை மறக்கனும்... நா இன்னொருத்தனுக்கு மனைவியா ஆகும் போது அவனோட நினைப்பு இருக்க கூடாது... ஆனா என் அப்பா அம்மா கேட்கல... வழுக்கட்டாயமா தான் கல்யாணம் பண்ணி வச்சாங்க...ஆனா சத்தியமா அவன் என் மனசுல இல்ல...நீங்க மட்டும் தான் இருக்கீங்க... என்னைய மட்டும் தப்பா நினைக்காதீங்க... அத என்னால தாங்கிக்க முடியாது..."

"அடி போடி பைத்தியமே... உன்னைய எப்படி டி நா தப்பா நினைப்பேன்..."

"வெறுக்க மாட்டீங்களே..."

"அட லூசு பொண்டாட்டி... உன்னைய வெறுத்திருந்தா இந்த கட்டில்ல உன் கூட  ஒன்னா இருந்திருப்பேனா..."

அவனை கட்டி கொண்டாள்...

"உன் காதல் தோல்விய பத்தி எனக்கு தெரியாது... கொஞ்ச நாள் முன்னாடி தான் என் friend ராம் சொன்னான்... மனோவும் ஆராவும் ஏதோ coffee shop ல வச்சு உன்னைய நினைச்சு feel பண்ணி பேசி இருக்காங்க...ராம் கவனிச்சு என் கிட்ட சொன்னான்... உனக்கு ஏதோ கடந்த காலம் இருக்கும்... அவ வாழ்க்கையில் ஒரு பையன் இருந்திருக்கான் னு‌ சொன்னான்... ஆனா அத பத்தி நா mind பண்ணிக்கவே இல்ல... இப்ப நீ எப்படி இருக்க அது மட்டும் தான் எனக்கு முக்கியம்... எனக்கு நல்லா தெரியும் இப்ப உன் மனசுல நா மட்டும் தான் இருக்கேன்னு...உன் மேல நா சந்தேகப்படவே இல்ல... நீ என் கிட்ட சொல்லலனு வருத்தப்படவும் இல்ல... ஏன்னு தெரியுமா... நீயே அது மறக்கனும்னு தான் நினைச்சு இருப்ப... என் கிட்ட சொல்லி அத நினைச்சு அழுது  எதுக்கு... ஏதோ நா நல்லவனா இருக்க போய் நா தப்பா நினைக்கல..." 

வேதா அவனை விட்டு விலகி அவனை முறைத்து "ஏது நீங்க நல்லவரா..."

"ஆமா டி... கட்டுன பொண்டாட்டி ய சந்தேகப்பட்டேனா... இல்லையே... அவ மனசை புரிஞ்சுக்கிட்டேன்..."

"நீங்க நல்லவருனு நீங்க சொல்லிக்க கூடாது..."

"பின்ன...வேற‌ யாரு சொல்லனும்..."

"நா சொல்லனும்..."

"ஓ... அப்போ தான் நல்லவன் இல்ல... கெட்டவன்... சரி இருந்துட்டு போறேன்...உனக்கு மட்டும் கெட்டவனா இருக்குறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல..."அவளை ஒரு மார்க்கமாக பார்த்து வைக்க...

அவள் தன்‌ மேலே சுத்தி இருந்த சேலையை சரி செய்து செல்லமாக முறைத்து "நீங்க... நீங்க பாக்குறேன் சரி இல்ல,.. நீங்க முத வெளிய போங்க..."

"ஏன் ஏன் நா வெளிய போகனும்... நா என்ன எவளயோவா பாத்தேன்..."

வேதா அவன் சட்டையை கொத்தாக பிடித்து இழுத்து "பாத்துடுவீயா நீ எவளாயாவது பாத்த பாக்க கண்ணு இருக்காது..."

"அடியேய் என் பொண்டாட்டி ய correct பண்ணவே எனக்கு இத்தனை நாள் ஆச்சு... நா அந்த அளவுக்கு எல்லாம் worth  இல்ல டி... ஏதோ அழகா இருப்பேன்... அதனால் பொண்ணு பாத்து sight அடிப்பாங்க..."

"என்னது... என்‌ புருஷனை எவளாவது பார்த்தா கொன்றுவேன்...நானே இப்ப தான் என் புருஷனை காதலிக்கிறேன்..."

கதவு தட்டப்பட... இருவரும் திரும்பி கதவை பார்க்க...

"யாருங்க கதவை தட்டுறது..."வேதா பதற்றமாக கேட்க...

"தெரியல... நீ சேலைய கட்டு..."

வேதா குளியல் அறைக்குள் நுழைந்து கொள்ள... செழியன் கதவை திறந்தான்...

மனோ ஆரா பரணி மூவரும் நின்றனர்....

ஆனா உள்ளே எட்டி பார்த்து "வேதா எங்க.."என்றிட...

"அவ உள்ள தான் இருக்க உங்களுக்கு என்ன வேணும்..."

"எங்களுக்கு நீ தான் வேணும்..."பரணி அவனை பிடித்து வெளியே இழுத்து ஆரா பார்த்து "நீ உள்ள போ..."அவனை அழைத்து செல்ல...

டேய் டேய் எங்க டா "செழியன் தடுக்க...

"அட வா டா..."பரணி sofa வில் அமர வைத்தான்...

ஆரா உள்ளே சென்று கதவை சாத்தி கொள்ள..சேலையை அறைகுறையாக கட்டி கொண்டு வெளிய வந்த வேதா செழியன் என்று நினைத்து "யாருங்க..."கேட்டவாறு வர... ஆரா பார்த்ததும் பேசாமல் நின்றாள்...

ஆரா அவளை மேலும் கீழுமாக பார்த்து விட்டு "என்ன டி இது..."விசித்திரமாக பார்க்க...

"உன்னையே யாரு டி வர சொன்னா...அவரு எங்க டி..."

"ஓ அவர்ர்ர்... அவன் இவன் னு சொன்னேன்... இப்ப மட்டும் அவர்...‌ என்ன டி சமாதானம் ஆகியாச்சா..."

வேதா வெட்கத்துடன் சிரிக்க..,

ஆரா அவளை‌ கட்டி கொண்டு "நீ நல்லா இருக்கனும் தான் டி‌ நாங்களும்‌ நினைச்சோம்...நீ சந்தோஷமா இருந்தா அதுவே போதும்...மனோ எல்லாத்தையும் சொன்னான்...பாவம் டி செழியன்... தன்னால் ஒரு உயிர் போயிடுச்சே உடைஞ்சு போய் இருக்காரு...பரணி சொன்னாரு... எவ்வளோ பேசுனோம்... என்னன்னமோ பண்ணி பாத்தோம்... அப்போ மாறல... வேதாவ மாத்தி இருக்கா..."

"நா எதுவுமே பண்ணல டி..."

"அதுவே அவரை மாத்தி இருக்கும் டி... கட்டுன பொண்டாட்டிக்கு தன்னை‌ பத்தி எல்லாம் தெரியும்...அதனால் தான் விலகி இருக்கானு நினைச்சு நினைச்சே அந்த நினைப்புல இருந்து வெளிய வந்து இருப்பாரு..."

*******

செழியனிடம் "என்ன டா... பிரச்சனை இல்லையே..."பரணி‌‌ கேட்டிட...

"இல்ல எல்லாத்தையும் பேசிட்டேன்..."

மனோ செழியன் அவள் காதல் விசயத்தை சொல்ல முயல... அவனை‌ தடுத்த செழியன் "எனக்கு எல்லாம் தெரியும் மனோ...நா வேதாவ தப்பா நினைக்கல... சந்தேகப்படல... அவளை நா புரிஞ்சுக்கிட்டேன் சரியா... நீ உன் தோழிக்காக நினைக்கும்‌ போது நா என் பொண்டாட்டிக்காக நினைக்க மாட்டேனா...நீ எதுவும் நினைக்காத... நா வேதாவ நல்லா பாத்துக்குவேன்... சரியா..."

மனோ அவன் கையை பிடித்து "அவ எனக்கு தோழி மட்டும் இல்ல ஒரு தங்கை மாதிரி... அவ சந்தோஷமா இருந்தா அதுவே போதும்... அவளுக்காக தான் நாங்க எங்க கல்யாணத்தை தள்ளி போட்டோம்.... அவ சந்தோஷத்தை இழந்துட்டு இருக்கும் போது நாங்க மட்டும் எப்படி..."

செழியன் அவனை கட்டி கொண்டு "உன்னைய‌ மாதிரி‌‌ ஒரு தோழன்‌ கிடைக்க அவ கொடுத்து வச்சு இருக்கனும்...உங்க நட்பு கடைசி வரைக்கும் இருக்கனும்..."

"கண்டிப்பா இருக்கும்..."

அங்கே சிரிப்பலை மட்டுமே கேட்டது...

சக்கரவர்த்தி சுடரை வீட்டிற்கு அழைத்து வந்து மன்னிப்பு கேட்டார்...

பரணி சுடர் பெண்‌ கேட்டு வந்தான்...

இருவரின் திருமணமும் முடிவானது...

வேதா தாய்மை அடைய... இரட்டிப்பு மகிழ்ச்சி இருந்தனர்...

பரணி சுடர் திருமணம் முடிந்து சிறிது நாளில் மனோ ஆரா திருமண நடந்தது...

அனைவரும் அவர்கள்‌ துணையுடன் சந்தோஷமா இருந்தனர்...

முற்றும்....

# nancy