ஏதேதோ எண்ணம் - 16
வேதா தூக்கம் மெதுவாக கலைய... தான் யாரு கைக்குள் அடங்கி இருப்பது போல் தோன்ற...விழியை நன்றாக விரித்து பார்க்க... தான் செழியனின் அணைப்பில் இருப்பது தெரிந்தது...
அவனிடம் இருந்து தன்னை விலகி கொள்ள முயல... அவனின் அணைப்பு இறுக்கமானது...அவன் மார்பில் கை வைத்து தள்ளி விட முயன்று தோற்று போனாள்...
அவனின் அணைப்பு இன்னும் இறுக்கியது...
"விடு டா பொறுக்கி..."என்று வேதா கத்த...
செழியன் கண் விழித்து பார்த்து "பொறுக்கி தான்... உனக்கு மட்டும் தான் பொறுக்கி,.."அவள் இதழில் தன் இதழை பதித்தான்...
முதலில் அவனிடம் இருந்து விலகி முயன்றவள்... அவனின் முத்தத்தில் கரைந்து போய் அவன் சட்டையை இறுக்கி பிடிக்க...அவன் தூக்கத்தில் உலரிய அனன்யா பெயர் ஞாபகம் வர... வழுக்கட்டாயமாக அவனிடம் இருந்து தன்னை விலகி அவனை முறைத்து எழுந்து நகர...
செழியன் வேகமாக அவள் முன் வந்து நின்றான்...
"வழிய விடு டா..."
செழியன் அசையாமல் அவளையே பார்த்தாள்...
"வழிய விடுனு சொன்னேன்... உன் காதுல விழல.."
செழியன் அவளை இழுத்து அணைக்க...
அவனை தள்ளி விட்டு அவன் கன்னத்தில் மாறி மாறி அடித்து "உனக்கு வெட்கமா இல்ல... இன்னொருத்திய மனசுல வச்சுக்கிட்டு என் கூட இப்படி நடந்துக்கிறீயே..."சட்டையை இறுக்கி பிடித்து அழுக...
"வேதா அப்படி இல்ல மா...நா சொல்றத முத புரிஞ்சுக்கோ டா...உன் கிட்டையும் என் கிட்டையும் உண்மைய..."சொல்ல வந்தவனின் பேச்சை வெட்டி "எதுவும் பேசாத... அவளை மனசுல வச்சுக்கிட்டு தானே நீ என் கூட படுத்த... ஏன் அவளை உன் கூட..."சொல்லி வாயை மூடுவதற்குள் அவள் கன்னத்தில் அவன் விரல் தடம் பதிந்து இருந்தது...
வேதா கன்னத்தில் கை வைத்து கொண்டு அவனை பார்த்தாள்...
"பிச்சுடுவேன்... என்ன டி நினைச்சுக்கிட்டு இருக்க...இத்தனை நாள் உன் கூட ஒரே வீட்டில் இருந்திருக்கேன்... என்னைக்காவது ஒரு நாள் ஒரு தப்பான பார்வை பார்த்து இருப்பேனா டி... ஆமா டி உன்னையே தொட்டேன் தான்... ஆனா எவளையோ நினைச்சு இல்ல டி...உன்னையே நினைச்சு தான் டி உன் கூட படுத்தேன்...ஏன் உன்னையே தொட எனக்கு உரிமை இல்லையா..."
"இவ்ளோ பேசுறீயே... அப்போ எதுக்கு டா என் கூட இருந்துட்டு எவ பேரையோ சொன்ன..."
"ஏ... ஆமா டி... சொன்னேன் தான்... அதுக்கு என்ன இப்ப..."
வேதா அவன் கன்னத்தில் அறைந்து "நீ உன் இஷ்டத்துக்கு எவளோட பேரை சொல்லிட்டு என் கூட இருப்ப நா எதுவும் கேட்க கூடாது அப்படி தானே டா... நா ஒருத்தனை காதலிச்சேன்... உன்னைய கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... அதுக்காக நீ என்ன பண்ணாலும் பொறுமையா நா போகுமா...அவனை காதலிச்சேன் தான் ஆனா அவனோட சுண்டு விரல் கூட என் மேல பட்டது இல்ல...காதலிச்சவனை மனசுல வச்சு இருந்தா என்னைய உன்னால தொட்டு இருக்க கூட முடியாது...கட்டுன புருஷனுக்கு உண்மையா இருக்கனும்னு நினைச்சேன்... ஆனா நீ..."பேசாமல் முகத்தை மூடி அழுக...
செழியன் கையை கட்டி கொண்டு அவளையே பார்த்தான்...
அவள் அழுது முடித்து விட்டு அவனை நிமிர்ந்து பார்க்க... அவன் அவளையே கண் இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்ததை பார்த்து இன்னும் கோபமடைந்தாள்...
"உனக்கு கொஞ்சம் கூட வருத்தமே இல்லைல..."
"பேசி முடிச்சுட்டீயா...இன்னும் இருக்குன்னா பேசி முடிச்சுடு... எல்லாத்தையும் கேட்டுட்டா மொத்தமா பதில் சொல்லிடுறேன்...உனக்கு ஒரு அதிரச்சியான விசயம் ஒன்னு சொல்லவா...உன் காதல் தோல்விய பத்தி நேத்தைய வரைக்கும் எனக்கு துளியும் தெரியாது...அது உனக்கு தெரியுமா..."
வேதா அதிர்ந்து போனாள்...
"இன்னொரு அதிர்ச்சியும் கேட்டுக்கோ... எனக்கும் ஒரு கடந்த காலம் இருக்கு... ஆனா அது காதல் இல்லை...உண்மைய சொல்லனும்னா என் வாழ்க்கையில வந்த அதுவும் என் மனசுல வந்த ஒரே பொண்ணா நீ தான் கடைசி வரைக்கும் நீ மட்டும் தான் இருப்ப...நீ கேட்கலாம்... அப்போ யாரு அந்த அனன்யானு நா எல்லாத்தையும் சொல்லிடுறேன்...அதுக்கு முன்னாடி உன் கோவத்தையும் அழுகையையும் நிறுத்திட்டு இப்படி வந்து உட்காரு..."என்று அவளை தன்னோடு அணைத்தவாறு அழைத்து வந்து கட்டிலில் அமர வைக்க...
அவள் அதிர்ச்சியில் இருந்து வெளி வராமல் இருந்தாள்...
அவள் அருகில் அமர்ந்து அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைத்து "என் cousin இனியாவ உனக்கு தெரியும்...ஆனா அவளுக்கு ஒரு அக்கா இருந்தானு உனக்கு தெரியாது... அவ பேரா தான் அனன்யா... ரொம்ப அமைதியானவ... அடக்கமான பொண்ணு... சின்ன குழந்தையை எப்படியோ தெரியல... ஆனா எங்களுக்கு விவரம் தெரிஞ்ச வயசுல இருந்து நானோ இல்ல அனன்யாவோ பேசிக்கிட்டு இல்ல.. அவ வீட்டுக்கு போனா வாங்க மாமானு சொல்றதோட சரி... எங்க வீட்டுக்கு அவ வந்தா வா அனன்யா நல்லா இருக்கீயா... அவ்ளோ தான்... அது கேட்டா கூட அவ ம்ம் னு தான் பதில் வரும்...ஆனா இனியா கூட நல்லா பேசி வம்பு கூட பண்ணுவேன்... Because அவ சின்ன பொண்ணு... Life நல்லா நான் போயிட்டு இருந்துச்சு... ரெண்டு வருசத்துக்கு முன்னாடி அனன்யாவுக்கு கல்யாணம் பண்ணலாம்னு பேச்சு எடுத்தாங்க... முறைக்கு என் கிட்ட அனன்யாவ கல்யாணம் பண்ணிக்கிறீயானு கேட்டாங்க... எனக்கு அந்த மாதிரி நினைப்பு இல்ல... சுடர் எப்படியோ அப்படி தான் அனன்யாவும் னு சொல்லிட்டேன்...அனன்யா எனக்கு தங்கச்சி மாதிரின்னு சொன்னேன்... அவங்களும் அதுக்கு அப்புறம் எதுவும் பேசல... அவங்க கிளம்பி போன ஒரு மணி நேரத்துல எங்களுக்கு வந்த தகவல் பெரும் அதிர்ச்சியா இருந்துச்சு...அனன்யா தற்கொலை பண்ணிக்கிட்டா..."
வேதா இமைக்காமல் அவனையே பார்த்தாள்... அவள் கண்ணில் இருந்து கண்ணீர் மட்டுமே வந்தது...
"என்ன காரணம்னு எதுவுமே தெரியல... நாங்க பதறி போய் போனோம்... அப்போ தான் அவ அப்பா என்னைய பாத்து என் பொண்ணை கொன்னுட்டீயேனு கதறுனாரு...எனக்கு என்னனு புரியல... அவ அம்மா அவ எழுதி வச்சு காகிதத்த கொடுத்தாங்க..."
'என் மாமா செழியனுக்கு..,
உன் இல்ல.நா உன் அனன்யா இல்ல.நீங்க அப்படி நினைச்சு இருந்தா இப்படி கடிதம் தேவையே இல்ல.எனக்கும் இப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.சின்ன வயசுல இருந்தே எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் மாமா. ஆனா உங்களுக்கு என்னைய பிடிக்காம போயிடுச்சு.நானும் சுடரும் ஒன்னா மாமா... என் மாமா நா உருகி உருகி காதலிச்ச என் மாமா என்னைய அவர் தங்கச்சி மாதிரினு சொன்னதுக்கு அப்புறம் எப்படி ஏத்துக்க முடியும்.என்னால அது தாங்கிக்க முடியல. அது தான் நினைச்சு நினைச்சு வேதனைப்படுதற விட செத்து போயிடலாம்... அடுத்த ஜென்மத்துயாவது உங்க மனசுக்கு பிடிச்ச பொண்ணா இருக்கனும் மாமா... என்னால இப்ப கூட நீங்க என்னைய உங்க தங்கச்சி மாதிரினு சொன்னத என்னால தாங்கிக்க முடியல...நா உண்மைய காதலிச்சவரு என்னைய தங்கச்சினு சொன்னது என் காதுல விழுத்துக்கிட்டே இருக்கு... அது என்னால நிறுத்த முடியல... அது என்னால நிறுத்த முடியல... அதனால் தான் என் வாழ்க்கை நிறுத்திக்கிறேன்...நா உயிர் வாழ்ந்தா நா சாகுற வரைக்கும் என்னைய நடைபிணமா தான் வச்சுருக்கும்... நா போறேன் மாமா.கடைசியா ஒன்றே ஒன்று கேட்டுக்கிறேன் மாமா. என்னைய உங்களுக்கு பிடிக்குமா... பிடிக்கும்னா என்னைய மறந்துடாதீங்க மாமா. நா அனன்யா..."
அதற்கும் மேல் பேச முடியாமல் அவள் மடியில் படுத்து இடுப்போடு கட்டி வயிற்றில் முகம் புதைத்து அழுதான்...
அவனின் கண்ணீர் அவள் வயிற்றை நனைக்கவும் தான் அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்து அவன் தலை முடியை கோத்தி விட அவன் இன்னும் இறுக்கி கட்டி கொண்டு கதறினான்...
"ஏங்க..."
அவனின் அழுகை மட்டும் சத்தம் மட்டுமே வந்தது...
"ஏங்க என்னைய பாருங்க..."
அவன் திரும்பி மல்லாக்கப் படுத்து அவள் முகத்தை பார்க்க...அவன் நெற்றியில் படர்ந்து இருந்த முடியை ஒதுக்கி விட்டு முத்தமிட்டாள்...
அவன் இமை மூடி கண்ணில் தேங்கி இருந்த கண்ணீரை வெளியேற...அவன் கண்ணீரை துடைத்து வேண்டாம் என்பது போல் தலையை ஆட்டினாள்...
"உன்னைய தவிர என் மனசுல யாரும் இல்ல டி... சத்தியமா சொல்ற அனன்யாவ நினைச்சு நா உன் கூட..."சொல்லி முடிக்கும் முன் அவன் இதழில் தன் இதழை பதித்தாள்...
அவன் இதழில் இருந்து தன் இதழை எடுத்து நிமிர... அவன் முகத்தில் அவளின் கண்ணீர் துளி விழுந்து தெறித்தது...
அவன் கண்ணீரை துடைக்க கையை கொண்டு போக... அவள் தடுத்து "நீங்க என்னைய தொடாதீங்க... நா உங்களுக்கு தகுதியானவ இல்ல...உங்களை எப்படி எல்லாம் பேசிட்டேன்... நா தான் அசுத்தம்... நீங்க எந்த கலப்படம் இல்லாத சுத்தமா தங்கம்... ஆனா நா இன்னொருத்தனை மனசுல சுமந்த சாக்கடை... என்னைய தொட்டு நீங்க கறைப்பட வேணாம்...உங்க கிட்ட நா ஒன்னே ஒன்னு மட்டும் கேட்குறேன்... இந்த அழுக்கானவ உங்களுக்கு வேணாம்... நா உங்க கூட இருந்தா உங்களுக்கு தான் அசிங்கம்..."முகத்தை மூடி அழ...
செழியன் அவள் தலை முடியை கொத்தாக பிடிக்க... வலியில் "ஸ்...ஆ..."என்ற சத்தத்துடன் கையை விலகி நிமிர்ந்து பார்க்க...அவள் தாடை இறுக்க பிடித்து உதட்டில் முரட்டுத்தனமாக முத்தமிட்டான்...
அவள் திமிர திமிர முத்தமிட்டு விலகி தன் சட்டையை கழட்டி வீசி எறிந்து அவளை கட்டிலில் தள்ளி விட்டு அவள் மேல் படர்ந்து முரட்டுத்தனமாக கையாண்டான்...
தொடரும்...
2 Comments
This comment has been removed by the author.
ReplyDeleteSister enaku type panna time venume sister.,. Naa veetu la velaiya mudichu apm work ku poidu vanthu... Ni8 veetu la velaiya pathu.. apm time irukum pothu tha type panna mudiyum..
Delete