ரணமாய் - 8

சாரு ஒரு வித பதற்றத்துடன் இருந்தாள்...

தாரணி அவள் கையை பிடித்தாள்...

"திலீப்க்கு எல்லாமே தெரிய போகுது... திலீப் என்னைய பத்தி என்ன நினைப்பாரு... நா அவரை ஏமாத்துனதா நினைக்க மாட்டாரா‌‌... அவ்ளோ தான் என் வாழ்க்கை முடிஞ்சுருச்சு..."

"ஏ... பைத்தியம் மாதிரி பேசாத டி... அப்படி எல்லாம் இல்லை... திலீப் உன்னைய விட்டு எப்பவும் போக மாட்டான்..."

"இல்ல தாரணி... ஒரு சின்ன பொய் சொன்னா கூட கோவப்படுவான்... அது தப்பாவே இருந்தா கூட மன்னிச்சுடுவான்... ஆனா அத அவன் கிட்ட இருந்து மறைக்க கூடாது... திலீப் பத்தி உனக்கு தெரியாதா என்ன... அவன் கூட தானே நம்ம படிச்சோம்..."

தாரணி அமைதியாக இருந்தாள்...

*************

எந்த வித உணர்வு காட்டாமல் திலீப் car ஐ ஓட்டினான்...

பிரதீப் அவன் புறம் திரும்பாமல் வெளியே வேடிக்கை பார்த்தவாறு இருந்தான்...

திலீப் அவனை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டு "அப்புறம் பிரதீப்..."என்று பேச்சை தொடங்க...

பிரதீப் புரியாதது போல் "என்ன அப்புறம்..."என்று நடிக்க...

"ஓ... உனக்கு எதுவும் தெரியாது ல..."

பிரதீப் திருதிருவென விழித்தான்...

"உண்மைய சொல்லு பிரதீப்... ஏதோ ஒன்னு நடந்து இருக்கு அத என் கிட்ட இருந்து மறைக்கிறீங்க... என்ன னு சொல்லிட்டீங்கனா நல்லது... இல்லைனா அதோட விளைவு ரொம்ப பெருசா இருக்கும்... சொல்லிட்டேன்... அப்புறம் என்னைய மனசாட்சி இல்லாதவன் சொல்ல கூடாது..."

பிரதீப் ஒரு நிமிடம் தயங்கினான்...

"சொல்லு பிரதீப்..."

பிரதீப் நிமிர்ந்து அவனை பார்த்து "அஸ்வின்... அவன் பேரு அஸ்வின்... என் wife வோட distant relative மாமா பொண்ணு தர்ஷினி... அஸ்வினுக்கும் தர்ஷினகக்கும் தான் கல்யாணம் ஆச்சு... கல்யாணத்துக்கு அப்புறம் தான் அவன் mentally disturbed இருக்குறதா ஒரு news... அது என்ன னு எங்களுக்கு தெரியாது... ஒரு வருஷத்துக்கு முன்னாடி அவனுக்கு ஒரு accident..."

"ஏ... நிறுத்து... யாரு இந்த அஸ்வின் தர்ஷினி... நா என் wife ஏன் அழுதா... அவளுக்கு என்ன பிரச்சினைனு தான் கேட்டேன்... நீ யாரையோ சொல்ற..."

"யாரோ இல்ல... சாருவுக்கும் இதுக்கும் சம்மந்தம் இருக்கு..."

"என்ன உலர்ற..."

"அட இரு யா... நீ வேற... முழுசா சொல்ல விடு..."

"சரி சொல்லு..."

"ஆனா ஒன்னு பிரதீப்... இத கேட்டு நீ tension ஆகிடாத... அவ்ளோ தான் சொல்லுவேன்..."

"நீ முத சொல்லு..."

"சாரு college முடிஞ்சு work போனப்போ அவ கூட தாரணி மட்டும் work பண்ணல... அஸ்வினும் தான் work பண்ணான்... அப்போ அஸ்வினும் சாருவும் காதலிச்சாங்க..."என்று திலீப்பை பார்க்க...

அவன் எந்த உணர்வு காட்டாமல் இருந்தான்...

பிரதீப் நடந்த எல்லாத்தையும் சொல்லி முடித்தான்...

திலீப் அனைத்தையும் கேட்டு பெருமூச்சு விட்டு கண் மூடி இருந்தான்...

பிரதீப் திலீப் தோளில் கை வைக்க...

திலீப் கண் முடியாதே "I'm ok..."என்று சொல்ல...

பிரதீப் தயங்கி கொண்டே "இதனால நீ சாருவ வெறுத்து ஒதுக்கி வைச்சுடாத டா.. I know உனக்கு பொய் சொன்னா பிடிக்காது தான்... அவ உண்மைய மறைச்சுட்டா னு அவ மேல கோவப்படாத டா...அவ மேல எந்த தப்பும் இல்ல... விதியோட சதி...எதுக்காக நீ அவளை காதலிக்கனும்... எதுக்காக அவளுக்கு உன் காதல் தெரியாம போகனும்... எதுக்காக  அவ உன்னைய விட்டு பிரிஞ்சது போகனும்... 

       எதுக்காக அவ வெளியூர் வேலைக்கு போகனும்... எதுக்காக அவ அஸ்வினை காதலிக்கனும்... எதுக்காக அவனுக்கு accident ஆகனும்... எதுக்காக சாருவுக்கு எதுவும் தெரியாம இருக்கனும்... எதுக்காக சாரு காதல் தோல்வி னு நினைச்சு ஊருக்கு வரனும்... எதுக்காக நீ அவளை மறுபடியும் பாக்கனும்... எதுக்காக அவளை மறுபடியும் காதலிக்கனும்... 

      எதுக்காக சொல்லாம இருந்த உன் காதல் சொல்லி அவளை கல்யாணம் பண்ணிக்கனும்... எதுக்காக சாரு உண்மைய எல்லாம் மறைக்கனும்... இப்ப எதுக்காக அஸ்வின் மறுபடியும் அவ வாழ்க்கையில வரனும்... எதுக்காக இது எல்லாம்..."என்று பேசி முடித்து பிரதீப் திலீப்பை பார்க்க...

"எதுக்காக நீ இவ்ளோ விளக்கி பேசனும்..."

"டேய் என்ன டா..."என்று பாவமாக கேட்க...

"இப்ப என்ன...நா சாருவ காதலிச்சேன்... ஆனா நா சாரு கிட்ட என் காதலை சொல்லாம மறைச்சுட்டேன்... college முடிஞ்சு அவ job க்கு போயிட்டா... அங்க அஸ்வினும் சாருவும் காதலிச்சாங்க... எதிர்ப்பாராத விதமாக அவங்க ரெண்டு பேரும் பிரிஞ்சுட்டாங்க... மறுபடியும் நா சாரு பாத்தேன்... அந்த வாய்ப்பை நா use பண்ணிக்கிட்டேன்... அப்ப எனக்கும் அவளுக்கும் கல்யாணம் ஆகி ஒரு குழந்தை... இப்ப மறுபடியும் அந்த அஸ்வின் வந்துட்டான்... அப்படி தானே..."

"ம்ம்ம்..."என்று அவனை வினோதமாக பார்த்து வைத்தான்...

திலீப் hotel முன் car நிறுத்தினான்...

இருவரும் சாப்பாடை வாங்கி வந்தனர்...

திலீப் பிரதீப் இடம் car key ஐ கொடுத்து "நீ drive பண்ணு மச்சான்..."என்று பக்கத்து seat ல் அமர்ந்து கொள்ள

பிரதீப் எதுவும் பேசாமல் Car ஐ ஓட்டினான்...

சிறிது நேரம் கண் மூடி சாய்ந்து அமர்ந்து வந்த திலீப் வேகமாக நிமிர்ந்து அமர்ந்து "உனக்கு ஒன்னு தெரியுமா பிரதீப்..."என்று கேட்க...

பிரதீப் வலது இடது புறமாக தலையை ஆட்டினான்...

திலீப் யோசனையோடு "ஆமா... ஆமா... உனக்கு தெரிய வாய்ப்பு இல்ல... Because இது எனக்கு மட்டும் தானே தெரியும்... அப்புறம் எப்படி உனக்கு தெரியுமா னு நா கேட்டேன்..."என்று மறுபடியும் சாய்ந்து அமர்ந்து கண் மூடி கொள்ள...

பிரதீப் அவனை விசித்திரமாக பார்த்து வைத்தான்...

திலீப் கண் முடியவாறு "ஏன் என்னைய அப்படி பாக்குற... என்னைய பாத்தா பைத்தியக்காரன் மாதிரி தெரியுதா..."

"ச... ச... அப்படி இல்ல..."

திலீப் நிமிர்ந்து "நீ.. நீ... நீ car stop பண்ணு.... stop பண்ணு... stop பண்ணு..."

"Ok... Ok... நா Stop பண்றேன்..."பிரதீப் car ஐ ஓரமாக நிறுத்தினான்...

அசையாமல் அமர்ந்திருந்த திலீப் வினோதமாக சிரித்து வைக்க...

பிரதீப் திருதிருவென விழித்தான்...

திலீப் பிரதீப்பை பார்த்து "நா எதிர்ப்பாக்கல பிரதீப்... இப்படி நடக்கும் னு... நா தப்பு பண்ணிட்டேன் னு நினைக்கிறேன்..."

"என்ன சொல்ற நீ..."

"உனக்கு புரியலையா பிரதீப்... நா தான் டா... நா தான் அந்த அஸ்வினை accident பண்ணேன்... But அந்த பைய தப்பிச்சுட்டான்... அவனுக்கு பட்ட அடிக்கு அவன் அங்கேயே காலி னு தான் நினைச்சேன்... அதனால தான் விட்டுட்டு போனேன்... ஆனா நா போய் அவனோட உயிர் போயிடுச்சா னு பாத்து இருக்கனும்... ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்..."

பிரதீப் அதிர்ந்து போய் அவனை பார்த்தான்...

"என்ன பிரதீப்... Shock ஆகிட்டீயா..."

"டேய் திலீபு... இது விளையாட்டு இல்ல..."

"நா அப்படி சொல்லவே இல்லயே டா பிரதீபு..."

"அப்போ..."என்று திலீப் இழுக்க...

"சாட்சாத் நானே தான்... அவங்க காதல் பிரிவுக்கு முழு காரணம் அடியேன் தான்..."

"இல்ல எனக்கு புரியல... நீ எப்படி அங்க..."

"என்ன புரியல... நா அங்க தான் இருப்பேன்... ஏன் டா நா தெரியாம தான் கேட்குறேன்... என்னைய பாத்தா எப்படி தெரியுது... நா என்ன இளிச்சவாயனா..  College first day நா அவளை பாத்தேன்... ரொம்ப பிடிச்சு போச்சு... Love at first sight... 

எப்படியாவது அவ கூட friendship வச்சுக்கனும் னு நினைச்சப்போ தான் நீ வந்த... எதார்த்தமா நீயும் அவளும் பேச போய் நானும் அவளோட பேசுனேன்... 

        எனக்கு அவ்ளோ சந்தோஷம்... அப்படியே உள்ளுக்குள்ள என்னைய என்னமோ பண்ணா... 

கொஞ்ச கொஞ்சமா அவளை நெருங்கி என் காதலை சொல்லலாம் னு நினைச்சேன்... ஆனா முடியல... அவ கிட்ட நல்லா பேசுறேன்... ஆனா என் காதலை மட்டும் சொல்ல முடியல... இப்படியே college ம் முடிஞ்சு போச்சு... Campus interview ல அவ select ஆகி job க்கு போயிட்டா... 

   இவளுக்காக எனக்கு கிடைச்ச வேலையை விட்டுட்டு அவளை பின்னாடியே போனேன்... அவ work பண்ற office ல ஒருத்தனை பிடிச்சேன்... அவளுக்கு ஏதாவது பிரச்சனை வந்தா சொல்ல சொன்னேன்... நா அவ மேல சந்தேகப்படல... ஒரு பயம் அவ்ளோ தான்... படுபாவி எங்க இருந்து வந்தானோ என் சாரு பின்னாடி சுத்தியே அவளை காதலிக்க வச்சுட்டான்...."

பிரதீப் அதிர்ந்து போய் அசையாமல் அமர்ந்திருக்க...

திலீப் அவன் தாடையை பிடித்து தன் அருகில் இழுத்து கண் கலங்கியவாறு "வலிக்குது டா.... இப்ப நினைக்கும் போது கூட அவ்ளோ வலி... நா காதலிச்சு ஒரு பொண்ணு என் கண்ணு முன்னாடியே இன்னொருத்தன் கூட சுத்தும் போது எனக்கு எவ்ளோ வலிக்கும்... மரண கொடுமை பிரதீப்..."என்று அவன் வார்த்தையிலும் கண்ணிலும் இருந்த வலியை பார்த்த திலீப்க்கு அவனை பார்க்க பாவமாக இருந்தது...

"திலீப்..."என்று அவன் கையை பிடிக்க...

திலீப் அவனை கட்டி கொண்டான்....

தொடரும்...

# nancy