ரணமாய் - 9

பிரதீப்க்கு அவன் மேல் கோவப்படுவதா இல்லை பரிதாபப்படுவதா என்று தெரியவில்லை...

ஒரு வித குழப்பதுடனே அவனை பார்த்து கொண்டு இருந்தான்...

"நா என்ன டா பண்ணட்டும்... நா இத வேணும் னு பண்ணல பிரதீப்... பண்ண வச்சுட்டாங்க... இந்த 5 வருசத்துல என் சாரு வ அழ வச்சு இருப்பேனா டா... அவ்ளோ... அவ்ளோ சந்தோஷமா வச்சுக்கிட்டேன்...ஏன்... I love her so much... But what happenedஎன்... நம்ம எல்லாருமே ஒன்னா தானே டா படிச்சோம்... ஆனா என்னைய மறந்துட்டா டா..."

"டேய் பைத்தியம்... அவ என் கிட்ட கூட பேசல டா... நீ நா சாரு தாரணி தானே டா friends... என் Wife கூட இல்லையே டா... நம்ம ஒன்னா தான் இருந்தோம்... உன் கிட்ட எப்படி பேசலையோ அதே மாதிரி தான் என் கிட்டையும்... சாரு கூட தாரணி மட்டும் தான் touch ல இருந்தா... Incase தாரணி சாரு கூட work பண்ணாம இருந்திருந்தா தாரணி கூட சாரு touch ல இருந்திருக்க மாட்டா தான் நினைக்கிறேன்... நீ ஏன் டா அப்படி நினைக்கிறேன்... இந்த காரணத்துக்காக டா நீ அப்படி பண்ண..."

"ஏதே..."என்று திலீப் அவனை பார்த்து "ச்சீ... இந்த silly reason க்காக வா டா நா இவ்ளோ பெரிய விசயத்தை பண்ணேன்... எனக்கு மூளை இல்ல னு நினைச்சீயா... நீ சொன்ன மாதிரி எனக்கு பைத்தியம் தான் டா... சாரு மேல...நா அவளை அவ்ளோ காதலிச்சேன் டா... அவளை விட்ற சொல்றீயா... நா விட மாட்டேன்... எனக்கு சாரு வேணும்... அதுக்கு இடைஞ்சல் அந்த அஸ்வின்... 

       அது தான்... அவங்க ரெண்டு பேரையும் பிரிக்கனும் னு நினைச்சேன்... ஆனா எப்படி னு தெரியல... ஆனா ஒன்னு அவனை கொல்லனும் னு நினைக்கல... சாரு எனக்கே கிடைக்கனும்... என்ன பண்றது னு தெரியாம இருந்தப்போ தான்... அன்னக்கி சிக்குனான்... அவன் கிட்ட பேசலாம்னு நினைச்சேன்... ஆனா அதுக்கு வாய்ப்பே இல்ல... அவன் கிட்ட பேசி எந்த பிரயோஜனமும் இல்ல... 

        ஏனா அவன் தானே முத சாரு வ காதலிச்சான்... அவன் எப்படி விடுவான்... எல்லாம் யோசிச்சு தான்... அவன் bike ல போகும் போது accident பண்ணி விட்டேன்... அவனை கொல்லனும் னு நினைக்கல... ஆனா கொல்லனும் னு வெறி இருந்துச்சு... அவனை accident பண்ணது நா தான்... நா நல்லா புரிஞ்சுக்கிட்டா ஒரே ஒரு விசயம் தான்... அந்த அஸ்வின் இருக்குற வரைக்கும் என் சாரு எனக்கு இல்லனு... 

      அவனுக்கு accident ஆனது தெரியாம என் சாரு அவனை நினைச்சா கஷ்டப்பட்டத பாக்கும் போது எனக்கு எவ்ளோ வலிச்சது னு தெரியுமா டா... நா பண்ணது எல்லாம் waste னு நினைச்சேன்... நா எதிர்ப்பார்க்காத ஒரே விசயம்... சாரு வந்தது தான்...அவ என் கூட பேசும் போது அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு... மறுபடியும் என் சாரு நா இழக்க விரும்பல... அது தான் நா கொஞ்சம் gap விட்டு அவளை பொண்ணு கேட்டு போனேன்... 

     எனக்கும் சாருவுக்கும் கல்யாணமே ஆகிடுச்சு... ஒரு சின்ன வருத்தம் தான்... சாரு அஸ்வினை மறந்து இருப்பானு நினைச்சேன்... ஆனா இல்ல... என் பையனுக்கு அஸ்வத் னு பேரு வச்சு இன்னும் நா அவனை மறக்கல டா னு நெத்தி பொட்டு ல அடிச்ச மாதிரி சொல்லிட்டா...ஆனா ஒன்னு டா... என்‌ பொண்டாட்டி எனக்கு உண்மையா தான் இருந்தா... இப்ப வரைக்கும் சாரு ஏன் அஸ்வினை காதலிச்சத பத்தி என் கிட்ட சொல்லல னு தெரியுமா... ஏனா அவனை தான் சாரு மறந்துட்டாளே..."

திலீப் slow motion ல் திரும்பி பார்த்து "டேய் சரக்கு எதுவும் அடிச்சு இருக்கீயா என்ன... ஏன் டா இப்படி மாத்தி மாத்தி பேசுற..."

"ஆமா ல மாத்தி மாத்தி பேசுறேன் ல... எனக்கு என்னமோ ஆகிடுச்சு டா..."

"என்ன பைத்தியமா..."

"அப்படி சொல்லலாம்..."

பிரதீப் கடுப்பாகி "எப்பா சாமி நீ எந்த ஒரு விளக்கவுரை தெளிவுரையும் சொல்ல வேண்டாம்...நீ சாரு வ காதலிச்ச... ஆனா சாரு அஸ்வினை காதலிச்சா... அது பிடிக்காம நீ அஸ்வின் accident பண்ணி கொல்ல பாத்த... ஆனா அது முடியல... அவனுக்கு பழசு எல்லாம் மறந்து போச்சு... ஆனா அப்பவும் நீ நினைச்சது தான் நடந்துச்சு... சாரு உனக்கு கிடைச்சுட்டா...நல்லா போயிட்டு இருந்த உன் வாழ்க்கையில் இப்ப மறுபடியும் அவன் வந்துட்டான்... அவ்ளோ தானே... நா ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோ டா... அஸ்வின் வந்துட்டான் தான்... நா இல்ல னு சொல்லவே இல்ல... ஆனா அவனால் உனக்கோ சாருவுக்கோ எந்த ஒரு தொந்தரவும் இருக்காது... இதுக்கு நா பொறுப்பு..."என்று மூச்சு விடாமல் பேசி முடிந்தான்...

அவனையே பார்த்து கொண்டு இருந்த திலீப் "அஸ்வினுக்கு நீ guarantee..."

"இந்த நேரத்துல comedy தேவையா..."

"இப்படி ஒரு video வ leakout பண்ணவன்... என் life ல வர மாட்டான் னு என்ன நிச்சயம்... அப்போ அந்த video பொய் ஹ..."

"இல்ல திலீப்... அது உண்மை தான்... ஆனா அஸ்வின் வர மாட்டான்..."

"அது தான் எப்படி சொல்ற..."

"Because அந்த video வ எடுத்ததே நா தான்... போதுமா..."என்று பிரதீப் கத்த...

சத்தமாக சிரித்து வைத்தான் திலீப்...

பிரதீப் புரியாமல் முழித்து கொண்டு இருக்க...

"ஏன் டா இவ்ளோ வேலை பண்ணி இருக்கேன்... இது கூடவா தெரியாம இருப்பேன்... முத அவனை accident பண்ணும் போது அவன் இறந்துட்டான் னு தான் நினைச்சேன்.. ஆனா அப்புறம் தான் தெரிஞ்சுது அவன் உயிரோட இருக்கான் னு... ஆனா கோமா ல இருக்கான்னு... எனக்கு ரொம்ப சந்தோஷம் இருந்துச்சு... ஏன் னு தெரியுமா... நா ஒரு உயிரை எடுத்துட்டேனே னு நினைச்சு feel பண்ணிட்டே இருந்தேன்... 

      இப்ப அந்த guilty feel இருக்காது ல... அவன் சாகல... அது தான்... ஆனாலும் ஒரு பயம் இந்த விசயம் சாருவுக்கு தெரிஞ்சா சுத்தம்... அவ இன்னும் அவனை நெருங்கி வருவா... ஆனா என் நல்ல நேரம் அவளுக்கு அஸ்வின் accident ஆன விசயம் கூட தெரியல... அவன் அவளை விட்டுட்டு போயிட்டான் னு நினைச்சு அவளுக்கு அங்க இருந்து வந்தது தான் நா நினைக்காத ஒன்னு... நா என்ன நினைச்சேன்னு தெரியுமா...

     இப்ப அங்க அஸ்வின் இல்ல... இப்ப நா அங்க போய் பேசி அவ கூட கொஞ்ச கொஞ்சமா அவளை நெருங்கி என் காதலை சொல்லலாம் னு நினைச்சேன்... எல்லாம்...  எல்லாமே மாறி போச்சு... நா போட்ட plan ல மாற்றம் இல்ல... அதே மாதிரி சாரு முன்னாடி நின்னேன்... மறுபடியும் அவளோட பேச தொடங்குனேன்... என் காதலை சொன்னேன்... பொண்ணு கேட்டேன்... கல்யாணமும் பண்ணிக்கிட்டேன்... ஒரு குழந்தையும் இருக்கு... 

     எனக்கு இது போதும்... என் சாரு என் கூட இருக்கா...என் சாரு கூட இருந்தாலும் ஒரு பக்கம் பயம்... அந்த அஸ்வின் மறுபடியும் வந்துட்டா... என்ற பண்றது... இப்ப தான் அவ அவனை மறந்து சந்தோஷமா இருக்கா... அது தான் அவனை மறுபடியும் follow பண்ணேன்... அப்போ தான் தெரிஞ்சுது... அவனுக்கு பழசு மறந்து போச்சு... ஆனா கல்யாணம் ஆகிடுச்சுனு... இதுக்கு மேல என்ன வேணும் எனக்கு... 

        இனிமே அவனால் என் சாருவுக்கு ஒன்னும் ஆக போறது இல்ல... போய் தொலை டா னு விட்டுட்டேன்...இருந்தாலும் ஒரு உறுத்தல்... அவன் என்ன பண்றான்னு பாத்துக்கிட்டேன் இருந்தேன்... அப்போ தான் உன்னையே அவனோட பாத்தேன்... அவன் கூட உனக்கு என்ன வேலை னு யோசிச்சேன்... விசாரிச்சேன்..‌ அப்போ தான் தெரிஞ்சுது... உன் wife அத்தை பொண்ணோட husband அவன் தான்...

     அவன் கல்யாணம் குழந்தை குட்டி ஏன் போயிட்டான்... இனி பிரச்சினை இல்ல னு நா நிம்மதியா இருந்தப்போ தான்... இந்த video... எனக்கு எப்படி இருக்கும்... அது தான் அவன் எல்லாத்தையும் மறந்து போய் கல்யாணம் பண்ணி குழந்தை இருக்கே... அப்புறம் எதுக்கு அவன் என் பொண்டாட்டிய நினைச்சு இப்படி ஒரு video விடனும்... எனக்கு கோவம்... என் சாருவுக்கு தெரியாம பாத்துக்கணும் னு... 

       அவளை கூட்டிட்டு ஒரு மாசத்துக்கு எங்கேயாவது போயிடலாம்னு நினைச்சேன்... ஆனா அதுக்குள்ள அவளுக்கு தெரிஞ்சுடுச்சு... வேலைக்கு போனாமா வேலைய பாத்தோமா இருக்கனும்... அவ விட்டுட்டு என் சாரு பின்னாடி சுத்தி அவளை காதலிச்சு அவளையும் காதலிக்க வச்சு அவனால் எவ்ளோ கஷ்டம்... இப்ப அவனால தான் என் சாரு அழறா... என் சாரு அழுதது இன்னும் என் கண்ணு முன்னாடியே இருக்கு...

       அப்படியே அந்த நாய தேடி போய் கொல்லலாம் னு இருக்கு... ஆனா அவனோட பொண்டாட்டி குழந்தைக்காக தான் நா பேசாம இருக்கேன்... இல்லைனா நா என்ற பண்ணுவேன் னு எனக்கே தெரியாது... உன்னைய நா கூட்டிட்டு வந்ததே இதுக்காக தான்... அவன் கிட்ட போய் சொல்லு... அவனால எதாவது பிரச்சனை வந்துச்சு நா சும்மா இருக்க மாட்டேன்... என் சாரு சந்தோஷமா இருக்கனும்... முத accident மட்டும் தான் பண்ணேன்... Accident பண்ண தெரிஞ்ச எனக்கு அவனை கொல்ல ரொம்ப நேரம் ஆகாது...  அவன் கிட்ட போய் சொல்லு... சரியா..."

"நா என்ன டா பண்ணேன்..."என்பது போல் பார்த்து வைத்தான் பிரதீப்...

தொடரும்...

# nancy