என் இதயத்தில் நீ - 32
"முந்தைய எபிசோட் படிக்க விருப்பம் உள்ளவர்கள் கீழ உள்ள லிங்க் தொடுங்கள் கதைக்கு கொண்டு போகும்..."
எல்லாரும் இந்த கதைய மறந்து இருப்பீங்க நினைக்குறேன்...சில வேலை காரணமாக இந்த கதை என்னால எழுத முடியல மன்னிக்கவும்...
" முந்தைய எபிசோடுல ஸ்னேகா வீட்டு மாடில அஸ்வின்க்கு கால் பண்ணி இரண்டு பேரும் பேசி முடிக்குறாங்க..."
ஸ்னேகா வீடு,
ஸ்னேகா அஸ்வின் கிட்ட இருந்து ஃபோன் பேசி முடிஞ்சதும் மொபைல்ல சார்ஜ் போட்டுட்டு...
ஸ்னேகா : அம்மா...அம்மா னு பல முறை கூப்பிட்டு பார்த்தாள்... வீட்ல யாரும் இல்லை....
பிறகு, கிட்சன்க்கு சென்று...
அங்கு ஐந்து பாத்திரத்திலையும் ஐந்து வகையான சாதமும் அதன் மேல நிறைய வாழை இலை போட்டு மூடி இருந்தன... 😍
ஸ்னேகா அதை பார்த்ததும் வாசனையே செமையா இருக்கே... அதில் ஒரு வாழை இலை எடுத்து தட்டுல வச்சி எல்லா சாதத்துலையும் கொஞ்சம் கொஞ்சமா போட்டு எடுத்துட்டு ஹால்க்கு வந்து டிவி ஆன் பண்ணிட்டு சோஃபால உட்கார்ந்துட்டு சாப்பிட்டு கொண்டு இருந்தாள்...😋
சங்கீதா : "வெளில இருந்து வீட்டுக்குள்ள வந்தாங்க..."
ஸ்னேகா : மா.... எங்கமா போன எவ்ளோ நேரமா கூப்பிட்டேன் ?
சங்கீதா : மாடில போட்ட துணி பக்கத்து வீட்டுல விழுந்துச்சி டி... அதா அங்க எடுக்கு போய்ருந்தேன்...( பேசிட்டே கைல இருந்து துணிய வச்சிட்டு உட்கார்ந்தாங்க )
ஸ்னேகா : "ஒரு துணி எடுக்க இவ்ளோ நேரமா..."
சங்கீதா : அடியே! அங்க ஹரி அம்மா கூப்பிட்டாங்க டி அதான் அவங்க கூடயும் கொஞ்சம் நேரம் பேசிட்டு இருந்தேன்... சரி, நீ எதுக்கு கூப்பிட்ட?
ஸ்னேகா : "ஹரி அம்மா உன்னைய எதுக்கு கூப்பிட்டனும் ?"
சங்கீதா : "நாளைக்கு ஹரிக்கு பொண்ணு பார்க்க போறாங்களாம்... அதான் என்னையும் வர சொன்னாங்க..."
ஸ்னேகா : ம்ம்ம்...
சங்கீதா : சரி, "சாதம் எப்படி இருக்கு டி..."
ஸ்னேகா : "சூப்பர் செம டேஸ்டா இருக்குமா..."👌
சங்கீதா : "நீ கேப்பானு உனக்காக தான் அவங்க பார்சல் கட்டி குடுத்தாங்க..."
ஸ்னேகா : ம்ம்ம்...(விக்கல் வர ஆரம்பிச்சது )
சங்கீதா : "டேபில்ல வாட்டர் இருக்கானு பார்த்தாங்க இல்ல..." 🧐
ஸ்னேகா : "விக்கல் வந்துட்டே இருந்தது டிவியை பார்த்து கொண்டே சாப்பிட்டு இருந்தாள்..."
சங்கீதா : அடியேய்! சாப்பிடும் போது தண்ணிய பக்கத்துல வச்சிட்டு சாப்பிடனும் கூட தெரியாத டி.... பேசிட்டே எழுந்து கிட்சன்லருந்து ஒரு சொம்புல தண்ணீர் கொண்டு வந்து ஸ்னேகா கிட்ட குடுத்தாங்க...இந்தா டி முதல்ல தண்ணிய குடி....
ஸ்னேகா : தண்ணீரை வாங்கி குடித்தாள்....
*******
இரவு,
"அஸ்வின் ஸ்னேகாவுக்கு வாட்ஸ் அப் ல சாட்டிங் பண்றான்..."
அஸ்வின் : ஹாய்...🙋♂️ சாட்டியா ?
"ஸ்னேகாவுக்கு ரைட்டிங் வோர்க் இருந்ததால வாட்ஸ் அப் க்கு வரல... சிறிது நேரத்திற்கு பிறகு இவளுடைய வேலை முடிஞ்சதும் வாட்ஸ்அப் க்கு வந்தாள்..."
அப்பறம் இரண்டு பேரும் வாட்ஸ்அப்ல சாட்டிங் பண்றாங்க...
வாட்ஸ்அப் சாட்டிங் 💬
ஸ்னேகா : ம்ம்ம்... நீங்க சாப்டிங்களா?
"அஸ்வின் ஸ்னேகா கிட்ட வந்த மெஸேஜ்ஜை பார்த்ததும் உடனே ரிப்ளே பண்றான்..."
அஸ்வின் : ம்ம்ம்... என்ன பண்ற?
ஸ்னேகா : சும்மா தான்...
அஸ்வின் : ம்ம்ம்... சாதம் எப்படி இருந்துச்சு?
ஸ்னேகா : சூப்பர்...
அஸ்வின் : 😊 ம்ம்... என்ன பண்ற?
ஸ்னேகா : சும்மா தான்... நீங்க?
அஸ்வின் : சும்மா மீம்ஸ் பார்த்துட்டு இருக்கேன்... உங்க வீட்டுல டேடி பியர் இருக்கா?
ஸ்னேகா : ம்ம்ம்...இருக்கே... ஏன் கேட்குறீங்க?
அஸ்வின் : வெயிட்...
ஒரு பிஃக்சரை சென்ட் பண்றான்...
அந்த பிச்சர்ல என்ன னா
( ஒரு கேர்ள் டெடி பியரை ஹக் பண்ணுற மாதிரியும், அதே டெடி பியரை வானத்தில் தூக்கி போட்டு விளையாடுற மாதிரியும் இருக்கும்...
அதுல டெடி பியர் மைன்ட் வாய்ஸ் : நீ எல்லாம் மனுசியாடி!!! பேசாம கடையிலே இருந்துருப்பேன்....என்னைய வாங்கிட்டு வந்து கட்டிப்பிடிக்கிறதும், உருளுறதும்,போரளுறதும், பாடா படுத்துற டி னு எழுதி இருக்கும்...)
ஸ்னேகா : ஹா ஹா ஹா 😂😂😂
அஸ்வின் : டேடி பியர் உன் பக்கத்துல தான இருக்கு...😅
ஸ்னேகா : இல்லயே!... ஸ்லாப்ல இருக்கு...
அஸ்வின் : உன் பக்கத்துலயே வச்சிக்க மாட்டியா?
ஸ்னேகா : நோ மாட்டேன்....ஆனா, என் ஃப்ரண்ட் பிரியங்கா இப்டி தான் பண்ணுவா.... அந்த டெடி பியரை படாத பாடா படுத்துவா...😂😂😂😂
அஸ்வின் : "அதுக்கு மட்டும் பேசுற மாதிரி வாய் இருந்துச்சி அவ்ளோதான்..."
ஸ்னேகா : ஆமா...ஆமா... 😂😂😂
அஸ்வின் : ம்ம்ம்...
ஸ்னேகா : உங்க வீட்டுல இருக்கா?
அஸ்வின் : ம்ம்ம்... இருக்கே...
ஸ்னேகா : 🤔🤔🤔
அஸ்வின் : என்ன யோசனை?
ஸ்னேகா : சும்மா தான்...
அஸ்வின் : எனக்கு யாரும் வாங்கி தரல....எங்க அப்பா எங்க அம்மாவுக்காக வாங்கி குடுத்தது இருக்கு னு சொன்னேன்...
ஸ்னேகா : புரியலயே?
அஸ்வின் : எனக்கு தெரிஞ்சு ஒரு பத்து வருசத்துக்கு முன்னாடி எங்க அம்மா அப்பாட்ட டேடியியர் வேணும்னு கேட்டாங்களா அப்போ வாங்கி குடுத்தது...
ஸ்னேகா : வாவ் சூப்பர்...
அஸ்வின் : கல்யாண நாள் அப்போ சர்பேர்ஸ்ஸா அம்மாகிட்ட குடுத்தாங்களா... எங்களுக்கு கூட தெரியாது?
ஸ்னேகா : அப்பறம் உங்களுக்கு இந்த விசயம் எப்படி தெரியும் ?
அஸ்வின் : "ஒரு நாள் டெடி பியர் இருந்தத நானும் என் அண்ணனும் பார்த்தோம் அப்போ தான் இந்த விசயத்த அம்மா வெட்க பட்டு எங்கிட்ட சொன்னாங்க..."
ஸ்னேகா : "அவ்ளோ லவ் வா..."
அஸ்வின் : ஆமா...😊 " அப்பா கோவமா எங்களட எதாச்சும் பேசுனா... அம்மா அப்பாவ பார்த்து மாமா னு சொல்லி பேசுவாங்க அப்போ அப்பா அமைதியாகிடுவாரு..."
ஸ்னேகா : 😅 ஹா ஹா சூப்பர்....
அஸ்வின் : 😊😊 ம்ம்ம்...
" இரண்டு பேரும் ரொம்ப நேரம் சாட்டிங் பண்ணிட்டே இருந்தாங்க.."
அஸ்வின் : தூங்கலாயா ?
ஸ்னேகா : தூங்கனுமே...
அஸ்வின் : மணிய பார்த்தியா ?
ஸ்னேகா : அப்போ தான் டைம் ம பார்த்தா 😱 என்ன அதுக்குள்ள 11மணியாச்சி...
அஸ்வின் : அதான் சொன்னேன்...
ஸ்னேகா : சாட்டிங் பண்றது டைம் ஆனதே தெரியல....
அஸ்வின் : ம்ம்ம்...
ஸ்னேகா : மார்னிங் சீக்கிரமா எழுந்திரிக்கனும்....சரி, நாளைக்கு பேசலாம்... குட் நைட்
ஃபோனை வச்சிட்டு உடனே தூங்கிட்டாள்...
அஸ்வின் : குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்...
அஸ்வின் ச்சை டைம் சொல்லாம இருந்திருந்தா இன்னும் சாட்டிங் பண்ணிருக்கலாமே...அதா நாளைக்கு பேசலாம் னு சொன்னா ல பேசம தூங்கு டா... மனசுக்குள்ள பேசிட்டு ஃபோனை வச்சிட்டு தூங்கிட்டான்...
தொடரும்...
1 Comments
Samma ❤bt almost marathutan bt padikira apo nabagam vathuruchu 🤣😂vera level plz ini yachum regular ah pota try panuga❤❤🥰
ReplyDelete